⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
05:00 AM to 12:30 PM
04:00 PM to 10:00 PM
கோவில் காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணி வரை திறந்திருக்கும். மாலை 4.00 மணி வரை கோவில் மூடப்பட்டிருக்கும்.மாலை 4.00 மணிக்கு கோவில் தரிசனத்திற்காக திறக்கப்படும்.திருவிழாவின் போது தினசரி பூஜை நேரங்கள் மாறலாம்.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. திருவனந்தல் பூஜை (மஹாசோடஷி) : 05:30 AM to 05:45 AM IST
2. விளா பூஜை (பாலை) : 06:30 AM to 07:15 AM IST
3. காலசந்தி பூஜை (கௌரி) : 10:30 AM to 11:20 AM IST
4. மாலை பூஜை (பஞ்சதசி) : 04:30 PM to 05:15 PM IST
5. அர்த்தஜாம பூஜை (மாதங்கி) : 07:30 PM to 08:15 PM IST
6. பள்ளியறை பூஜை (சோடஷி) : 09:30 PM to 10:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): சுந்தரேஸ்வரர்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): மீனாட்சி
ஸ்தல விருட்சம் (Sacred Tree): கடம்பம்
ஆகமம் (Tradition): காமிக ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): மதுரை
தாலுகா (Taluk): மதுரை தெற்கு
தொலைபேசி (Phone): 04522344360
முகவரி (Address):
சித்திரை வீதி மதுரை, மதுரை, மதுரை, 625001
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில், மதுரை தெற்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை, மதுரை - 625001 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு சுந்தரேஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் பழமை வாய்ந்த காலம் பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Madurai (6 km), Virudhunagar (42 km), Aruppukkotai (45 km), Dindigul (51 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
பாடல் / கவிதை : நீலமாமிடற்று
மந்திரமாவது
மானின்நேர்
காட்டுமாவது
செய்யனே
வீடலால
வேதவேள்வி
ஆலநீழல்
மங்கையர்க்கரசி
வேதியா வேத
முளைத்தானை
வாழ்க அந்தனர்
பாடக மெல்லடி
திருவாசகம்
திருக்கோவையார்
பதினொன்றாம் திருமுறை
பன்னிரண்டாம் திருமுறை
ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : தி௫ஞானசம்பந்தா்
ஸ்தல விருட்சம் : கடம்பம்
விமானம் வகை : திராவிடம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : முதல் நூற்றாண்டுக்கு முன்பு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பாண்டியன்
ஸ்தல சிறப்பு வகை : அருளாளர்களின் அவதார ஸ்தலம்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : நீலமாமிடற்று
மந்திரமாவது
மானின்நேர்
காட்டுமாவது
செய்யனே
வீடலால
வேதவேள்வி
ஆலநீழல்
மங்கையர்க்கரசி
வேதியா வேத
முளைத்தானை
வாழ்க அந்தனர்
பாடக மெல்லடி
திருவாசகம்
திருக்கோவையார்
பதினொன்றாம் திருமுறை
பன்னிரண்டாம் திருமுறை
நிறுவனத்தின் பெயர் : மனநல காப்பகம்
தல சிறப்பு (Thiruthala Special):
புராதனம்
ஒவ்வொரு ஆண்டும் இத்திருக்கோயிலில் நடைபெறும் வருடாந்திர மிகப் பெரும் திருவிழாவான மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் தேர் திருவிழாவின்போது, சற்றொப்ப பத்து இலட்சம் பக்தர்கள் உணர்வுபூர்வமாக பங்கேற்கின்றனர். இத்திருவிழா தமிழ் ஆண்டின் சித்திரை மாதத்தில் (ஆங்கில ஆண்டின் ஏப்ரல் மே மாதங்கள்) நடைபெறுகிறது.
வரலாற்று சிறப்பு
இத்திருக்கோயிலின் உள்ளே அமையப்பெற்றுள்ள பொற்றாமரைக் குளத்தின் நீரை அமாவாசை, தமிழ் மாதத்தின் முதல் நாள், கிரகண காலங்கள் மற்றும் முக்கியத் திருநாட்களில் அனுகும் பேறு பெற்றவர்கள் அத்தகைய தினங்களில் இத்திருக்கோயில் இறைவன் மற்றும் இறைவியை வழிபட்டால் அவர்கள் வாழ்வில் பெறத் துடிக்கும் அனைத்து வெற்றிகளையும் பெறுவார்கள் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
வண்டியூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தெப்பக்குளம் : மதுரையிலுள்ள வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில் தெப்பக்குளம் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தெப்பக்குளம் 304. 8 மீட்டர் நீள அகலம் கொண்டது. தெப்பக்குளத்தின் நான்குபுறமும் 12 நீளமானப் படிக்கட்டுகளும், சுமார் 15 அடி உயரத்துக்கு கல்லினால் சுவரும் கட்டப்பட்டிருக்கின்றன. இதன் நடுவிலுள்ள நீராழி மண்டபத்தில் தோட்டத்துடன்கூடிய விநாயகர் கோயில் ஒன்றுள்ளது. சுரங்கக் குழாய்களின் மூலமாக வைகை நதி நீர் தெப்பத்திற்குள் வருமாறு இணைப்பு உள்ளது.1 இது தமிழ்நாட்டிலுள்ள பெரிய தெப்பக்குளமாகும்.
திருமலை நாயக்கர் அரண்மனை கட்டுவதற்காக வேண்டிய மணலை மதுரை மன்னராக இருந்த திருமலை நாயக்கரால் இங்கு தோண்டப்பட்டது. மணல் தோண்டியதால் பள்ளமாக இருந்த அப்பகுதியை சீரமைக்க எண்ணிய மன்னன் அப்பகுதியை சதுர வடிவில் வெட்டி, 1645ல் தெப்பக்குளமாக மாற்றி அதன் நடுவே வசந்த மண்டபம் ஒன்றினையும் கட்டினார்.
இத்தெப்பம் தோண்டும் போது கண்டெடுக்கப்பட்ட பிள்ளையாரே, முக்குறுணிப் பிள்ளையார் என மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளார்.
தைப்பூசத்தன்று இங்கு மீனாட்சி அம்மைக்கும் சுந்தரேஷ்வரருக்கும் தெப்பத்திருவிழா எடுக்கப்படுகிறது. வண்ணமயமான இந்தத் தெப்பத்திருவிழாவைக் காண அதிகமான மக்கள் மதுரை வருவார்கள்.
பொற்றாமரை குளம் : இருட்டு மண்டபம் கடந்து உள்ளே சென்றால் மிகச் சிறப்பு வாய்ந்த தீர்த்தமாகச் சொல்லப்படுகின்ற பொற்றாமரைக் குளம் உள்ளது. இதன் நான்கு புறமும் தூண்களுடன் கூடிய பிரகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குளத்தின் வடக்குப் புறம் அம்மன் சந்நிதியை நோக்கியுள்ள பிரகாரத்தையும் படிக்கட்டுகளையும் விசுவநாத நாயக்கர் ஆட்சியில் கி.பி.1562-ஆம் ஆண்டில் பெருமாள் என்பவர் கட்டினார்.
கிழக்குப்பக்கம் உள்ள பிரகாரமும் படிக்கட்டுகளும் வீரப்ப நாயக்கரது ஆட்சிக்காலத்தில் கி.பி.1573- ஆம் ஆண்டில் குப்பையாண்டி என்பவரால் கட்டப்பட்டது. இப்பிரகாரத்தின் தென்பகுதி நோக்கி செல்லும் போது அங்குள்ளத் தூண்களில் 10 ஆவது தூணின் அருகில் சதுரவடிவில் மலர் போன்ற கல் ஒன்று பதிக்கப்பட்டுள்ளது. இக்கல்லில் நின்று மேற்கு நோக்கிப் பார்த்தால் தங்கத்தினால் ஆன அம்பிகையின் விமானத்தையும் வடமேற்கே பார்த்தால் சொக்கநாத பெருமானின் தங்க விமானத்தையும் கண்டு தரிசனம் செய்யலாம்.
தெற்குப்பக்கம் உள்ள பிரகாரமும் படிக்கட்டுகளும் வீரப்ப நாயக்கரது ஆட்சியில் 1578-ஆம் ஆண்டு அப்பன்பிள்ளை என்பவரால் கட்டப்பட்டது. இப்பிரகார சுவற்றில் திருவள்ளுவர் இயற்றிய 1330 குறட்பாக்களும், சிவஞான போதம், அபிராமி அந்தாதி, மதுரை கோயிலைப் பற்றிய தேவராப்பதிகங்கள் ஆகியன சலவைக்கற்களில் பதிக்கப்பட்டுள்ளன. இது 22-4-1956-இல் ஸ்ரீலஸ்ரீகாசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள், அதிபர் காசித்திருமடம் திருப்பனந்தான் அவர்களின் பொருளுதவியுடன் மதுரை சைவசித்தாந்த சபையினரால் பதிக்கப் பெற்றுள்ளது.
இப்பொற்றாமரைக்குளம் இந்திரன் பழிதீர்த்தது. வெள்ளை யானையின் சாபம் தீர்த்தது. நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, நக்கீரைக் கரை ஏற்றியது. நக்கீரருக்கு இலக்கணம் உபதேசித்து ஆகிய திருவிளையாடற் புராண நிகழ்ச்சியல் நடந்தேரிய சிறப்புடையதாகும். மேலும் இக்குளக்கரையில் தான் இறைவன் சங்கப்பலகை தந்தது. சங்கத்தார் கலகம் தீர்த்த ஆகிய செயல்களை நிகழ்த்தினார்.
இக்குளத்தின் வடக்குப் பிரகாரத்தில் உள்ள தூண்களில் ஒரு சில சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இறைவனுடன் சேர்ந்து கடைச் சங்கப்புலவர்கள் 49 பேரில் இங்கு சில புலவர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவர்களது கைகளில் எழுத்தாணியும் ஏடும் காணப்படுகின்றதன. இவை சங்கப்பலகை தந்தது, சங்கத்தார் கலகம் தீர்த்தது எனும் திருவிளையாடற் புராண நிகழ்ச்சிகள் நடந்தேறிய சிறப்புடையதாகும்.
இப்பிரகாரத்தூண்களில் 6 அடி உயரத்தில் இரண்டு சிற்பங்கள் உள்ளன. இவை மதுரை நகரையும் கோயிலையும் அமைத்தாகக் கருதப்படும் குலசேகர பாண்டியனாகவும், கடம்பவனத்தில் சிவலிங்கத்தைக் கண்டு பாண்டியனுக்குரைத்த தனஞ்செயனாகவும் இருக்கலாம் என கருதப்படுகின்றது.
பொற்றாமரைக்குளத்தின் வடக்கு பிரசாதரத்திலும் கிழக்குப் பிரகாரத்திலும் திருவிளையாடற் புராணக் கதைகளை சித்தரிக்கும் ஓவியங்கள் நாயக்கர் காலப்பாணியில் தீட்டப்பட்டிருந்தன. இவற்றில் பெரும்பாலானாவை அழிந்து விட்டன. எஞ்சிய ஒரே ஓவியத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை இராணி மங்கம்மாள் கண்டு களிப்பதாக அமைந்துள்ளது.
இக்குளத்தின் தெற்கு பிரகாரத்தின் மேற்கு முனையில் விபூதிப் பிள்ளையார் எழுந்தருளியுள்ளார். இவ்விநாயகரை மக்கள் தாங்களே விபூதியால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். மேற்குப் பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் காசிவிஸ்வநாதர் விசாலாட்சி சந்நிதியும், செல்வந்தீசுவரர் சந்தியும், ஸ்தலத்திற்குரிய சித்தி விநாயகர் கூடற்குமாரர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. மேலும் இப்பிரகாரத்தில்தான் ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூண்டு மண்டபம் ஆகிய இரு மண்டபங்களும் உள்ளன.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
நூற்றுக்கால் மண்டபம் (நடராசர்) : இது இரண்டாம் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இம்மண்டபம் சுமார் 6 அடி உயர மேடையும் கட்டப்பட்டுள்ளது. இதனைக் கி.பி.1526ல் சின்னப்ப நாயக்கர் கட்டினார். இம்மண்டபத்தில் நடராசர் ஆகியோரது திருவுருவர் சிலைஅமைந்துள்ளது.
தென்கிழக்கு மூலையில் நால்வர் கோயில் உள்ளது. இது கிருஷ்ண வீரப்பநாயக்கர் (கி.பி.1564 - 1572) என்பவரால் கட்டப்பட்டது. இக்கோயில் மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் கூன்பாண்டியன், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மாணிக்கவாசகர், மூர்த்திநாராயணர் ஆகியோரது திருவுருவச் சிலைகள் அமைந்துள்ளன
இருட்டு மண்டபம் (பிட்சாடனர்) : சித்திரக் கோபுரத்தின் வழியே உள்ளே சென்றால் இருட்டு மண்டபம் உள்ளது. இது கி.பி. 1613-இல் கடந்தை முதலியார் என்பவரால் கட்டப்பட்டது. எனவே இது அவர் பெயராலேயே முதலிப்பிள்ளை மண்டபம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. கி.பி.1960-63-ஆம் ஆண்டுகளில் நடந்த திருப்பணியின் போது இதன் வடப்பக்கச் சுவரை இடித்து சன்னல்கள் அமைக்கப்பெற்றன. அதுவரை இம்மண்டபம் இருட்டாகவே இருந்ததால் இருட்டு மண்டபம் எனப் பெயர் பெற்றது.
பிட்சாடனர் கதையைச் சித்தரிக்கும் சிற்பங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. மேலும் நான்கு யாளிகளும் இரண்டு ரிஷிகளும் ஒரு தூணில் சிவபெருமானுக்கு பிச்சையிட்ட ரிஷிபத்தினி அன்னக்கரண்டியுடனும் அதற்கு எதிர்பக்கத் தூணில் மோகினியின் சிற்பமும் அடுத்ததாகப் பிட்சாடனர் உருவமும் அமைக்கப்பட்டுள்ளன. மோகினியின் அழகில் மயங்கிய ரிஷிகள் அருகே காட்டப்பட்டுள்ளனர். இவையன்றி இம்மண்டபத்தில் நர்த்தன கணபதியும், சுப்ரமணியர் சிற்பங்களும் மண்டபத்தைக் கட்டிய கடந்தை முதலியாரின் சிற்பமும் இடம் பெற்றுள்ளன
புதுமண்டபம் (தடாதகை பிராட்டியார்) : மதுரை கோயிலில் மிகவும் பிரசித்திப்பெற்ற புதுமண்டபம் கி.பி 1626 மற்றும் 1633 க்கு இடையில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது ஆகும். இது 34,650 சதுர அடி அளவைக் கொண்ட ஒரு பெரிய கல்மண்டபமாகும். நான்கு வரிசையிலும் தூண்களால் அமையப்பெற்ற மண்டபத்தில் ஒரு நடுக்கூடம் உள்ளது. மண்டபம் மதுரை கட்டிடக்கலை காலத்தைச் சேர்ந்தது மற்றும் தூண்களின் நான்கு பாணிகளையும் கொண்டுள்ளது, அலங்கார கலவை வகை, யாழி வகை, சிற்பங்கள் வகை மற்றும் உருவப்பட வகை தூண்கள் உள்ளது. முழு மண்டபமும் இடைக்கால கட்டிடக் கலையின் மிக சிறந்த அடையாளமாகும். பல மெருகூட்டப்பட்ட கருப்பு கல் தூண்களால் ஆதரிக்கப்படும் விதானத்துடன் ஒரு மேடை உள்ளது. இந்த விதான மண்டபம் வசந்த மண்டபம் என்று அழைக்கப்படுகிறது, இந்த மண்டபத்தில் மார்கழி மாதம் எண்ணெய் காப்பு திருவிழா அன்று மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரரின் உற்சவ விக்கிரகங்கள் எழுந்தருளல் செய்யப்படுகிறது. விஸ்வநாதர் முதல் திருமலை நாயகர் வரையிலான மதுரையின் நாயக்க ஆட்சியாளர்களின் பத்துச் சிலைகள் நடு மையத்தில் இருபுறமும் ஐந்து தூண்களில் உள்ளன. குதிரையேற்றம் மற்றும் யாழி தூண்கள் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் நுழைவாயிலில் வெளிப்புறத் தூண்களில் உள்ளன. இந்தப் பகுதிகளில் சின்ன உருவங்களுடன் பல தூண்களும் உள்ளன.
கம்பத்தடி மண்டப சிலைகள்- ஜலந்தரவத மூர்த்தி : கம்பத்தடி மண்டப சிலைகள்
தேவர்களின் தலைவனாக அறியப்பட்ட தேவேந்திரன் ஒருமுறை சிவபெருமானை தரிசிப்பதற்காக கயிலாய மலைக்கு சென்றிருந்தார். ஆனால், அங்கே வேறு வடிவெடுத்திருந்த நிலையில் சிவபெருமான் இருக்கக் கண்டு அவரை யார் என்று தேவேந்திரன் வினவ சிவபெருமான் அவருக்கு பதில் அளிக்கவில்லை. இதனால் சினம் கொண்ட தேவேந்திரன் வஜ்ராயிரத்தை சிவபெருமான் மீது வீச, அது துண்டுதுண்டாக சிதறி விழுந்தது. சிவபெருமான் ருத்ரனாக மாற, அவரது வியர்வையில் இருந்து ஒரு குழந்தை உதித்தது. அக்குழந்தைக்கு ஜலந்தரன் என பெயரிட்டு, கடல்களின் அரசனான வருணன் வளர்த்து வந்தார். காலநேமியின் மகளான பிருந்தாவை ஜலந்தரன் மணந்தார். இவரைக்கண்டு தேவர்கள் அஞ்சினர். சிவபெருமானின் உதவி தேடி இந்திரன் ஓடினான். இந்திரனின் வேண்டுதல்களைக் கேட்ட சிவபெருமான், ஜலந்தரன் முன் முதிய வயது கொண்ட முனிவராக த் தோன்றினார். ஜலந்தரன் அவரிடம் தான் சிவபெருமானுடன் சண்டையிடப்போவதாக தெரிவிக்க அதற்கு அந்த முனிவரோ சிவபெருமானிடம் சண்டையிட வேண்டாம் என சொல்கிறார். ஆனால் ஜலந்தரனோ தன் வீரத்தை விதந்தோதியபடி சண்டைக்கு புறப்பட, முனிவர் தன் கைவிரலால் தரையில் சக்கரம் ஒன்றை வரைந்து அதை தரையிலிருந்து தூக்கி தன் தலையில் வைக்க ஜலந்தரனை பணித்தார். சக்கரத்தைத் தூக்க குனிந்தபடி அதை ஜலந்தரன் தொட்டவுடன் அச்சக்கரம் இரண்டாக உடைந்தது. ஜலந்தரன் எரிந்து சாம்பலானான். இந்த சக்கரமே பிற்பாடு விஷ்ணுவிற்கு சிவபெருமானால் பரிசளிக்கப்பட்டது. இந்த சிற்பத்தில் சிவபெருமான் தன் வலக்கரத்தில் சக்கரம் ஏந்தியிருப்பதும், சிவபெருமானின் இடக்கரம் வரத முத்திரையுடன் இருப்பதும் வடிக்கப்பட்டுள்ளது.
கிளிக்கூண்டு மண்டபம் : இது ஊஞ்சல் மண்டபத்திற்கு வடக்கே அமைந்துள்ளது. மீனாட்சியம்மையின் திருக்கரத்தில் இடம் பெற்றிருப்பதால் அம்மனுக்குப் பிடித்த கிளிகள் இம்மண்டபத்தில் வளர்க்கப்பட்டன. தற்பொழுது கிளிக்கூண்டு அகற்றப்பட்டாலும் இன்றும் கிளிக்கூண்டு மண்டபம் என்றே வழங்கப்பெறுகிறது.
சங்கிலி மண்டபம் என்ற மற்றொரு பெயரும் இதற்கு உண்டு. முன்பெல்லாம் திருவிழாக் காலங்களில் இங்கே கோலாட்டம் நடைபெறும் அப்பொழுது பெண்கள் வண்ணக் கயிறுகளைத் தொங்கவிட்டு அக்கயிறுகளை பிடித்துக் கொண்டு பின்னிப்பின்னி ஆடும் பொழுத பார்ப்பதற்கு சங்கிலி போல் காணப்படும். ஏனவே இம்மண்டபம் சங்கிலி மண்டபம் என்று பெயர் பெற்றது.
இம்மண்டபத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை அனைத்திலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சில தூண்களில் 7 அடி உயரத்துடன் சிற்பங்கள் அமைந்துள்ளன. இத்தூண்களில் பஞ்ச பாண்டவர்களான தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோரது உருவங்களும் வாலி, சுக்ரீவன், வேடன் மற்றும் பெண் உருவங்களும் இடம்பெற்றுள்ளன. சிற்பத்தூண்களுக்கு இடையே யாளித் தூண்களும் உள்ளன. மேலும் இம்மண்டபத்தின் விதானத்திற்கு கீழ் உள்ள சுற்றுவிட்டத்தில் (நாடகச்சட்டம்) அறுபத்தி நான்கு திருவிளையாடல்களும் சிறு அளவில் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
இங்கு மடப்பள்ளிக்குச் செல்லும் நுழைவுவாயில் அமைந்துள்ளது. மடப்பள்ளி நுழைவு வாயிலுக்கருகில் பூகட்டும் இடம் உள்ளது. அதனருகில் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்த்தி நாயனார் அரைத்த சந்தனக்கல் உள்ளது. இவர் இறைவனுக்கு சந்தனம் அரைத்துக் கொடுக்கு திருப்பணி செய்து வந்தார். ஓரு சமயம் சந்தனக்கட்டை கிடைக்கவில்லை. இவர் தன் கைகளையே சந்தனக்கல்லில் உரைத்தார். இறைவன் தோன்றி இவருக்கு நாட்டின் மன்னராகும் வரத்தை அருளினார்.
கிளிக்கூண்டு மண்டபம் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரின் மூத்த மகனும் மன்னர் திருமலை நாயக்கரின் அண்ணனுமான முதலாம் முத்து வீரப்பர் ஆட்சிக்காலத்தில் (கி.பி.1609 - 1623) அபிஷேக பண்டாரம் என்பவரால் கி.பி.1623 ஆம் ஆண்டுகட்டப்பட்டது. இவரது சிற்பம் சிறிய அளவில் சுவாமி சந்நிதிக்கருகில் உள்ள அனுக்கஞை விநாயகரின் முன் உள்ள தூணில் உள்ளது.
இங்கிருந்து அம்மன் சந்நிதிக்குள் செல்லும் நுழைவு வாயிலின் அருகில் சித்தி விநாயகர் சந்நிதியும் முருகனது சந்நிதியும் இடம் பெற்றுள்ளன. அம்மன் கோயிலுக்கு இங்கிருந்து வேம்பத்தூரார் கோபுரம் வழியாகச் செல்ல வேண்டும்.
கம்பத்தடி மண்டபம் சிலைகள்- காலசம்ஹார மூர்த்தி : கம்பத்தடி மண்டபம் சிலைகள்
காலனைக் காலால் கடிந்து என அப்பர் பெருமானால் புகழப்பெறும் காலரி மூர்த்தி மரணத்தை அழிப்பவராக, காலசம்கார மூர்த்தியாக கருதப்படுகிறார். சிவபெருமானால் மரணம் தோற்கடிக்கப்பட்ட நிகழ்ச்சியானது இவ்வடிவத்துடன் தொடர்புடைய உருக்கமான நிகழ்வு ஒன்றின் மூலம் விளக்கப்படுகிறது. நீண்ட காலமாக குழந்தை பேறின்றி வாடி வந்த மிருகண்டு மகரிஷியின் முன் தோன்றிய சிவபெருமான் புற்றீசல் போலப் பயனற்ற பல பிள்ளைகள் வேண்டுமா? அல்லது பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழக்கூடிய ஆசிர்வதிக்கப்பட்ட ஒரே ஒரு மகன் வேண்டுமா? என இரண்டு தெரிவுகளை மிருகண்டு முன் வைத்ததாகவும், மிருகண்டு மகரிஷி தனக்கு எல்லா வகையிலும் சிறப்பான ஒரேஒரு மகன் மட்டும் கிடைக்க அருளினால் போதும் என்று சிவபெருமானிடம் மருமொழி கூறியதாகவும், அதன்படி, சீர்கொண்ட சிறுவன் மார்கண்டேயனை அவருக்கு பிறக்கும்படி அருளியதாகவும், இவ்விஷயம் குறித்து பிற்பாடு அறிந்து கொண்ட சிறுவன் மார்கண்டேயன் தன் விதி முடியப்போகும் காலத்தை நெருங்கியவுடன் புனிதத்தல யாத்திரைகள் மேற்கோண்டு வந்த போது திருக்கடையூரில் சிவ லிங்க வழிபாடு செய்து கொண்டிருந்தபோது கால தேவனான யமன் மார்கண்டேயனை நோக்கி தன் பாசக்கயிறை வீச, அது மார்கண்டேயனோடு சேர்த்து அவன் பற்றிப் பிடித்திருந்த சிவலிங்கத்தின் மீதும் விழ, கோபமுற்ற சிவபெருமான் தன் காலால் காலனை உதைத்து கண்டனம் செய்தார். இதனால் குறித்த தினத்தில் மார்கண்டேயனின் மரணம் நிகழாமல் தடுக்கப்பட்டது. என்றும் பதினாறாக இளமையோடு இருக்க சிவபெருமான் மார்கண்டேயனுக்கு அருளிச் செய்தார். இச்சிற்பத்தில் சிவபெருமானின் பின்வலக்கரம் மழுவை ஏந்தியிருக்க, சிவபெருமானின் வலக்கால் பீடத்தில் பதிந்திருக்க, இடக்காலோ யமனின் கழுத்தில் வைக்கப்பட்ட கோலத்தில் காணப்படுகிறது. சிவலிங்கத்தை ஆரத்தழுவிக்கொண்ட மார்கண்டேயனின் உருவம் தூணின் மற்றொரு புறத்தில் வடிக்கப்பட்டுள்ளது.
கம்பத்தடி மண்டபம் : கம்பத்தடி மண்டபத்தில் சிவனின் அனைத்து 25 வடிவங்களையும் சித்தரிக்கும் சிற்பங்கள் உள்ளன. பிரதான கருவறைக்கு முன்னால் அமைந்திருப்பது மற்றும் நந்தி மண்டபம் மற்றும் த்வாஜஸ்தம்பங்கள் போன்றவற்றைக் கொண்டிருப்பதால், அதன் அனைத்துச் சிற்பங்களும் சிவ வடிவங்களுடன் மட்டுமே தொடர்புடையவையாகும். தூண்களின் இடதுபுறத்தில் உள்ள தூணில் மதுரைக்குச் சிறப்பு சேர்க்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண காட்சி அழகிய சிற்பமாக உள்ளது. இந்தக் காட்சி சிவன் தனது வலது கையால் வலதுபுறத்தில் மீனாட்சியின் வலது கையைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. விஷ்ணு தனது சகோதரியைத் தாரைவார்த்துக் கன்னிகாதானத்தின் ஒரு பகுதியாக ஒரு கிண்டியில் இருந்து தண்ணீரை ஊற்றும் சடங்கு முறையில் காணப்படுகிறது. திருமணத் திருக்காட்சியின் பின்னால் ஒரு அழகான அலங்கார மரம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த விருச்சம் மரம் இந்திரன் தனது திக்விஜயத்தின் போது மீனாட்சிக்கு வழங்கிய கற்பக விருச்சமாகும்.
கம்பத்தடி மண்டபம் சிலைகள் - கல்யாண சுந்தரேசுவரர் : கம்பத்தடி மண்டபம் சிலைகள்
ஹிந்து திருமணங்களை விரிவான வகையில் விவரிக்கும் விதமான இச்சிற்பம் மிகச்சிறந்த உணர்வுகளின் வெளிப்பாடாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த தெய்விக திருமண நிகழ்வை விளக்கும் சிற்பத்தை வேறெங்கும் காண்பது அரிது. நித்ய மணமகனாக சிவபெருமானும், நித்ய மணமகளாக சக்தியும் இதில் காட்டப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சிவாலயத்திலும் ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும் திருக்கல்யாண நிகழ்வு மூலம் சிவனும் உமையும் இவ்வுலகத்தை ஆசிர்வதிப்பதாகக் கருதப்படுகின்றது. அசூரர்களை அழித்தொழிக்க குமரன் பிறப்பதற்கு இத்திருமணம் நடந்தது. அழியா காதலர்களாக சிவனும் சக்தியும் இச்சிற்பத்தில் செதுக்கப்பட்டுள்ளனர். உண்மையின் வடிவமான சிவனும், ஞானத்தின் வடிவமான சக்தியும் சேர்ந்தது மூலம் ஆனந்தத்தின் வடிவமான கந்தன் பிறந்தான். உமையை மணந்த சிவபெருமான், கல்யாண சுந்தர மூர்த்தியாக அறியப்படுகிறார். ஆன்மிகத்தையும், ஆனந்தத்தையும் பெற மனித இனம் பின்பற்ற வேண்டிய மாதிரியை உணர்த்துவதாக இச்சிற்பம் உள்ளது.
மீனாட்சி நாயக்கர் மண்டபம் : வேட மண்டபத்தை அடுத்து மீனாட்சி நாயக்கர் மண்டபம் உள்ளது. இதனைக் கட்டியவர் மீனாட்சி நாயக்கர் (விசயரங்க சொக்கநாத நாயக்கரின் பிரதானி) இவர் பெயராலேயே இது வழங்கப்படுகிறது. இது 160 அடி நீளமும், 110 அடி அகலமும் கொண்டது. இம்மண்டபத்தில் ஆறுவரிசைகளில் 110 தூண்கள் 22 அடி உயரத்துடன் இடம் பெற்றுள்ளன. இவை நாயக்கர்கால கலைப்பாணியில் மேற்குப் பகுதியில் சிம்மங்களுடன் அமைந்துள்ளன. இதில் பூக்கடைகளும், வேறுபல கடைகளும் உள்ளன.
இம்மண்டபத்தை அடுத்து சித்திரக்கோபுரம் அமைந்துள்ளது. இதன் வாயிலில் திருவாட்சி அமைக்கப்பட்டுள்ளது. இத்திருவாட்சி 25 அடி உயரத்துடன் 1008 எண்ணெய் விளக்குகளைக் கொண்டு விளங்குகிறது. இதனை மருது சகோதரர்கள் இக்கோயிலுக்கு வழங்கி உள்ளனர். இன்றும் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்களால் கட்டளைகள் நிறுவப்பட்டு அதன்படி இவ்விளக்குகள் ஏற்றப்பட்டு வருகின்றன.
நந்தி மண்டபம் : இம்மண்டபம் கம்பத்தடி மண்டபத்தூண் சிற்பங்களுக்கு இடையே சுவாமி சன்னதிக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இந்நந்தி மண்டபம் மிகுந்த கலை நுட்பத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. இதன் விதானத்திற்கு மேல் கதைச் சிற்பங்கள் காணப்படுகின்றது
.
கி.பி.1564 இல் கிருஷ்ணவீரப்ப நாயக்கர் இம்மண்டபத்தை அமைத்தார். இம்மண்டபத்தின் நடுவே கொடிக்கம்பமும் பலி பீடமும் உள்ளன. இம்மண்டபம் நாற்கால் மண்டபம் என்றும் கிருஷ்ண வீரப்ப நாயக்கர் கட்டியதால் வீரப்ப மண்டபம் என்றும் அழைக்கப் பெறுகிறது.
கி.பி.1877ம் ஆண்டு நகரத்தார் எனும் வகுப்பினர் கோயில் திருப்பணியை மேற்கொண்ட பொழுது இம்மண்டபத்தைத் புதுபித்துப் புதிய தூண்களை நந்தி மண்டபத்தைச் சுற்றி அமைத்து அதில் கண்ணையும் கருத்தையும் கவரும் சிவபெருமானின் வடிவங்களை வடிவமைத்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.
சிவபெருமானது வடிவங்களில் சிறப்பான வடிவங்கள் 64 ஆகும். அதனுள்ளும் மிகச்சிறந்த வடிவங்கள் 25 என்பர். சிவ பெருமானது 25 வடிவங்களைப் பற்றி சிவபராக்கிரமம், சிவமகாபுராணம், இலிங்கபுராணம் முதலான நூல்களில் விளக்கப்பட்டுள்ளன. இந்த 25 வடிவங்கள் என்பது சதாசிவம் எனப்படும் ஐந்து (5) முக சிவபெருமானது முகங்களில் இருந்துவந்தவை அவை
1. ஈசானம்,
2.தத்புருஷம்,
3.அகோரம்,
4.வாமதேவம்,
5. சத்யோஜாதம்
கம்பத்தடி மண்டபம் சிலைகள்- கிரதர்ஜுனா பாசுபதமூர்த்தி : கம்பத்தடி மண்டபம் சிலைகள்
சிவபெருமானிடம் இருந்து, எதிரிகளை அழிக்கவல்ல, வலிமையான ஆயுதமான பசுபதாஸ்திரத்தை பெற வேண்டி தவமிருந்த அர்ஜுனனுக்கு அருளிய சிவனின் திருக்கோலம் கிரதார்ஜுனமூர்த்தி எனப்படுகிறது. இந்த பசுபதாஸ்திரத்தைப் பெற அர்ஜுனன் தகுதி வாய்ந்தவன் தானா? என பரிசோதிக்க சிவனும் பார்வதியும் வேட்டுவக்குல ஆணாகவும், பெண்ணாகவும் தோன்றியதாகவும், அர்ஜுனனின் வலிமையால் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு பசுபதாஸ்திரத்தை வழங்கியதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
கம்பத்தடி மண்டபம் சிலைகள் - நந்தி : கம்பத்தடி மண்டபம் சிலைகள்
நந்திக்கு செய்யப்படும் அபிஷேகத்தால் ஆன்மாவின் மலக்கட்டுகள் அகற்றப்பட்டு தூய்மையாக்கப்படுகிறது என்கிற நம்பிக்கையை நந்தி தேவர் மீது தண்ணீர் அபிஷேகிக்கப்படும் இக்காட்சி வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. சிவபெருமானின் பல்வேறு வடிவங்கள் சூழ கட்டப்பட்டுள்ள இந்நந்தி மண்டபம், பொ.ஆ.1564-ல் கிருஷ்ணவீரப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிய வருகிறது.
ஊஞ்சல் மண்டபம் : இது ஆறுதூண்களைக் கொண்ட ஒரு சிறு மண்டபம். இது கி.பி.1562ஆம் ஆண்டு விசுவநாத நாயக்கர் காலத்தில் அம்பலச் செட்டி என்பவரால் கட்டப்பட்டது. வெள்ளிக்கிழமை தோறும் இம்மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் மீனாட்சி சுந்தரேசுவரரின் உற்சவம் மூர்த்திகளை அமர்த்தி ஊஞ்சலாட்டுவர். இந்த ஊஞ்சல் மேடை கண்ணாடி பதிக்கப்பட்டு 1985ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. ஊஞ்சல் மண்டபத்தின் விதானத்தில் இராணிமங்கம்மாள் ஓவியம் இடம் பெற்றுள்ளது.
இம்மண்டபத்தின் எதிரில் பொற்றாமரைக்குளத்தில் சற்றே கீழ்நோக்கி சென்றால் அங்கு ஒரு சிறு மண்டபம் இடம் பெற்றுள்ளன. இதனை கி.பி.1563ல் விசுவநாத நாயக்கர் காலத்தில் செட்டியப்ப நாயக்கர் என்பவர் கட்டுவித்தார்.
இங்குதான் சங்கப்பலகை தந்தது. நக்கீரர் மயக்கம் தெளிந்தது போன்ற திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பது கர்ணப்பரம்பரை செய்தியாகும்.
ஆயிரம் கால் மண்டபம் சிலைகள் - தக்சன் : ஆயிரம் கால் மண்டபம் சிலைகள்
சிவபெருமானின் வடிவமான வீரபத்திரருடன் முரண் கொண்ட தட்சன் தன் வலக்கரத்தில் ஏந்தியிருப்பது வாளாகும். கோபம் கொப்பளிக்கும் ஓவியமாய் இச்சிற்பத்தின் முகம் வடிக்கப்பட்டுள்ளது. சேதமுற்றுள்ள இடக்கரத்தில் அவர் ஏந்தியிருப்பது கேடயமெனக் கருதற்பாலது.
கம்பத்தடி மண்டபம் சிலைகள் - நடராஜர் : கம்பத்தடி மண்டபம் சிலைகள்
சிவபெருமான் இயற்றும் ஐந்தொழில்களுக்கும் குறியீடாக ஆடல்வல்லான் வடிவத்தைக் கட்டமைக்கிறது சைவ சித்தாந்தம். இறைவன் அசைவில் சூரியன், சந்திரன், பூமி, வாயு என அனைத்தும் இயக்குருகிறது. சிவபெருமான் எடுத்த வடிவங்கள் அனைத்தும் இந்த ஆடல் வல்லான் வடிவமே மிக உயர்வானதாகக் கருதப்படுகிறது. உண்மையில் இவரே ஆடும் கலையின் நாயகன்.
ஆயிரம் கால் மண்டபம் சிலைகள் - வேட்டுவன் : ஆயிரம் கால் மண்டபம் சிலைகள்
அடவுகள் காட்டும் ஆடவன் ஆயினும் புயத்தினில் வில்லேந்தும் வேட்டுவன் இவன்.
ஆயிரம் கால் மண்டபம் சிலைகள்- பிட்சாடனார் : ஆயிரம் கால் மண்டபம் சிலைகள்
பின்னிரு கரங்களில் உடுக்கையும், அதைச்சுற்றிய அரவமும், சூலமும் ஏந்தியவண்ணம் காணப்படும் இச்சிலையின் அருகே கங்காளநாதரால் கவனம் ஈர்க்கப்பட்ட தாருகாவனத்து ரிஷி பத்தினிகள் காணப்படுகின்றன. இவரின் வலப்பக்கம், தலையில் கங்காளம் ஏந்திய குறளர் காட்சியளிக்கிறார்.
கம்பத்தடி மண்டபம் சிலைகள் - தக்ஷிண மூர்த்தி : கம்பத்தடி மண்டபம் சிலைகள்
கைலாய மலையில் கல்லால மரத்தின் கீழ் தென்முகமாக அர்ந்து தவமியற்றும் சிவபெருமானின் தட்சிணாமூர்த்தி வடிவம் இங்கே காணப்படுகிறது. ஆலமரத்தின் அடியில் அமர்ந்து, உள்ளுறை ஆன்மாவும், பிரம்மமும் ஒன்றே என்னும் அத்வைத சித்தாந்தத்தை மௌனத்தில் போதிக்கும் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத உயர்ந்த குருவாய் இங்கே வீற்றிருக்கிறார். சிவபெருமான், தான் ஒரு யோகி மட்டும் அல்லாது யோகிகளுக்கு எல்லாம் இறைவனாக, தவமுனிவர்களுக்கெல்லாம் யோகத்தைக் கற்பிப்பவராக இருக்கிறார். அவரின் வலக்கரம் மௌனத்தில் உறையும் ஞானத்தையும், வலமேற்கரம் பாம்பையும், இடக்கீழ்க்கரத்தில் தருப்பையையும், இடமேல்க்கரத்தில் நெருப்பையும் தாங்கியவாறு உள்ளது.
கம்பத்தடி மண்டபம் சிலைகள்- திரிபுராந்தக மூர்த்தி : கம்பத்தடி மண்டபம் சிலைகள்
முன்னைத் தீயிட்டு முப்புரம் எரித்த சிவபெருமானின் வலிமையின் வடிவம் திரிபுராந்தக மூர்த்தி என்றும், அவரின் அச்செயல் திரிப்புரத்தகனம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் திரிபுராந்தக மூர்த்தியின் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. இந்த கம்பத்தடி மண்டபத்தில் காணப்படும் திரிபுராந்தக மூர்த்தியின் சிற்பம், புதுமண்டபத்தில் காணப்படும், திரிபுராந்தக மூர்த்தியின் சிற்பத்தை ஒத்ததாக உள்ளது. இச்சிற்பத்தில் சிவபெருமான் தேரேறிச்சென்று திரிபுரம் எரித்தது நினைவுக் கூறப்பட்டுள்ளது. பிரம்மன் சாரதியாகவும், விஷ்ணு அம்பாகவும், அக்னி அம்பின் கூர்முனையாகவும், யமன் அம்பின் இறகுகளாகவும், வேதங்கள் வில்லாகவும், சாவித்திரி வில்லின் நாணாகவும் வடிக்கப்பட்டுள்ளனர். இந்த சிற்பியின் கைவண்ணம் கல்லை சிலையாக செதுக்கும் சிற்பியின் வேலையை விட, பொன்னை நகையாக வடிக்கும் பொற்கொல்லனின் நுணுக்கங்களுக்கு ஒப்பானதாக உள்ளது. அம்பின் முனையில் விஷ்ணுவின் சிற்பம் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளது காண வேண்டிய ஒன்றாகும்.
வேட மண்டபம் (வேடுவச்சி மற்றும் வேடுவர்) : அஷ்டசக்தி மண்டபத்தை அடுத்து வேட மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் இருபுறமும் 6 அடி உயரம் கொண்ட வேடுவச்சி மற்றும் வேடுவர் சிலைகள் உள்ளன. இவ்விரண்டும் ஒரு அந்தணனுக்கு மகாபாதகம் தீர்த்தருளிய அடையாளங்களாம்.
கம்பத்தடி மண்டப சிலைகள்- வீரபத்திரர் பிட்சாண்டவர் : கம்பத்தடி மண்டப சிலைகள்- பிட்ச்சாண்டவர்
தலைக்கனம் செருக்கோடு சிவநிந்தை செய்த தட்சனின் வேள்வியை மூன்றாம் கண் கொண்டு அழித்த வீரபத்திரனின் உக்ர வடிவமும், தாருகாவனத்தில் ரிஷிகளின் செருக்கை அடக்கிய பிச்சாடண வடிவமும் இங்கே ஒரேத் தூணில் செதுக்கப்பட்டுள்ளது. வீரபத்திரர் கோபத்தால் அக்னி கரங்களை இழந்தார். இந்திரனின் தோள்கள் காயமடைந்தன. பிரம்மனின் சிரம் கொய்யப்பட்டது. சூரியன் பார்வையும், பல்லையும் ஒருங்கே இழந்தார். விஷ்ணு தலையை இழந்தார். யமனும் தலையை இழந்தார். இச்சிற்பத்தில் வலக்கையில் சூலம், மழு, தட்சனின் தலை கொய்த அம்பு மற்றும் வால் ஆகியவை காணப்படுகின்றன. இடக்கரங்களில் கபாலம், மான், மணி மற்றும் கேடயம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. தன்கால்களுக்குஅடியில் வீழ்ந்து கிடக்கும் தட்சனின் மீது ஏறிநிற்கும் வீரபத்திரரின் கரமேந்திய சூலம் தட்சனின் கழுத்தை குத்தியக் கோலத்தில் காணப்படுகிறது.
பிச்சாடனர் சிற்பத்தில் பின்வலக்கரம் உடுக்கையையும், முன்வலக்கரம் மானுக்கு இலை ஈந்த நிலையிலும் பின்இடக்கரம் சூலம் ஏந்தியும், முன்இடக்கரம் கபாலம் ஏந்தியும் காணப்படுகின்றன. சர்ப்பத்தில் மட்டுமே இவர் ஆடையாக அணிந்துள்ளார். வீரக்கழல்கள் அணிந்துள்ள இவரின் கால்களில் காலணிகளும் காணப்படுகின்றன.
கம்பத்தடி மண்டபம் சிலைகள் - காமதஹான மூர்த்தி : கம்பத்தடி மண்டபம் சிலைகள்
சிற்றின்பத்தை செருவென்ற சிவபெருமானின் வடிவம் காமாரி அல்லது காம தகன மூர்த்தி எனக் குறிப்பிடப்படுகிறது. தொன்மங்களின் படி, சூரபத்மனை வெல்ல ஒரு மகவொன்றை பெற்று அருள தேவர்கள் சிவபெருமானை வேண்டியதாகவும், யோக நிலையில் உள்ள சிவன் தன்னால் மணம் செய்து கொள்ள முடியாது என மறுத்ததாகவும், ஆயினும் தேவர்கள் உமையை மணந்து கொண்டு சிவபெருமான் ஒரு மகவை பெற்று தர வேண்டியதாகவும், அதனால் யோக நிலையில் தவம் மேற்கொண்டிருக்கும் சிவபெருமானது தவத்தைக் கலைக்க, மாரனை மலர்க்கணைகள் கொண்டு சிவபெருமானை வீழ்த்த ஏற்பாடு செய்ததாகவும், மாரனின் மலர்க்கணைகள் தவத்திலிருந்த சிவபெருமானின் பட்டவுடன் வெகுண்டெழுந்த சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்த புறப்பட்ட நெருப்பு மாரனை எரித்து சாம்பலாக்கியதாகவும் புராணம் தெரிவிக்கிறது. மூன்றாம் கண்ணைத் திறந்த காமாரி மூர்த்தி தக்ஷிணா மூர்த்தியை ஒத்திருக்கிறார்.
கம்பத்தடி மண்டப சிலைகள்-அர்த்தநாரி : கம்பத்தடி மண்டப சிலைகள்
ஆணும், பெண்ணும் படைப்புகளின் புறவேற்றுமை வடிவங்களே அன்றி அவற்றுள் உறையும் ஆன்மா ஒன்றே என்னும் அத்வைத உயர் கருத்தை உலகிற்கு உணர்த்த மாதொரு பாகனாய் மகாதேவன் எடுத்த வடிவம் இது. சிவ-சக்தி ஐக்கியம் இவ்வடிவத்தின் மூலம் உணர்த்தப்படுகிறது. உமா மகேஷ்வரன் வடிவத்தை விடவும் மேலான வெளிப்பாடாக இவ்வடிவம் கருதப்படுகிறது.
கம்பத்தடி மண்டப சிலைகள்- ஸ்ரீ ரிஷப ஹந்திகர் : கம்பத்தடி மண்டப சிலைகள்- ஸ்ரீ ரிஷப ஹந்திகர்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும் புதிய புதிய ஜனனம் என்னும் உயிர்களின் படைப்பாக்கத்தின் குறியீடாகக் கருதப்படும் விருஷபம் அல்லது ரிஷபமானது சிவனின் வாகனமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சிவபெருமானின் மூன்று சிலா ரூபங்கள் அவரின் வாகனமான ரிஷபத்தோடு தொடர்புப்படுத்தப்பட்டுள்ளன. இமைப்பொழுதும் சிவனை இணை பிரியாத பார்வதியோடு ரிஷபம் என்று அழைக்கப்படும் நந்தி மீது சிவன் அமர்ந்திருக்கும் கோலம் ரிஷபாரூடர் என அழைக்கப்படுகிறது. சிவனின் எதிரே நந்தி நிற்கும் வகையில் காணப்படும் வடிவம் ரிஷப வாகனர் என்றும், ரிஷபத்தின் மீது சிவன் சாய்ந்தவாறு இருக்கும் வடிவம் ரிஷபாந்திகா எனவும் அழைக்கப்படுகிறது.
ஆயிரம் கால் மண்டபம் சிலைகள் - அர்ஜுனன் : ஆயிரம் கால் மண்டபம் சிலைகள்
வலது கரத்தில் வாளேந்தியவாறு விரையும் அர்ஜுனனின் சிற்பம் இது. துரதிருஷ்டவசமாக இச்சிற்பத்தின் இடது கை பின்னப்பட்டுள்ளதால், சேதமடைந்துள்ள அக்கரத்தில் அவர் ஏந்தியிருந்த ஆயுதம் எதுவென்று அறிந்துகொள்ள இயலவில்லை.
ஆயிரம் கால் மண்டபம் சிலைகள் - பாணன் : ஆயிரம் கால் மண்டபம் சிலைகள்
ஐந்து தலைகள் கொண்ட நாகமொன்று இவரின் தலை மீது தனித்துவம் கொண்ட குடை ஒன்றை விரித்துள்ளது. இச்சிற்பத்தில் இடம் பெற்றுள்ளவர் பாணனா அல்லது வேறு யாருமா என்பதை முடிவு செய்வது கடினமாகவுள்ளது. இவரின் இடது தோலில் கிளி ஒன்று அமர்ந்துள்ளமை அழகாக சிலை வடிக்கப்பட்டுள்ளது. இச்சிலைக்கு அடுத்து இடம்பெற்றுள்ள பெண்னின் சிலை விராளி எனக் கொள்ளும் பட்சத்தில், இச்சிலை அரண்மனை பாடகனாக பாணன் எனக் கொள்ள வாய்ப்புள்ளது.
ஆயிரம் கால் மண்டப சிற்பம் - பிச்சாடனார் : ஆயிரம் கால் மண்டப சிற்பம்
தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தை அழிப்பதற்காக சிவபெருமான் பிட்சாடன வடிவம் எடுத்ததாகக் கருதப்படுகிறது. தன் வலக் கரத்தால் சின்னஞ்சிறு மான் குட்டிக்கு புல்லை உணவாக அளிப்பது இச்சிற்பத்தில் காணத்தக்க அம்சமாகும். இவரின் இடக்கரம் மன்டையோட்டை ஏந்தியிருப்பதும் பின்னங்கரங்களில் உடுக்கையையும் பாம்பையும் திரிசூலத்துடன் ஒருசேர ஏந்தியிருப்பதும் காணுற வேண்டிய அம்சங்களாகும் (இச்சிற்பம் மயக்கும் கன்னிகையான மோகினியின் சிற்பத்திற்கு எதிரே அமைந்துள்ளது.
கம்பத்தடி மண்டப சிலைகள் -நந்தி மண்டபம் : கம்பத்தடி மண்டப சிலைகள்-நந்தி மண்டபம்
நந்திக்கு செய்யப்படும் அபிஷேகத்தால் ஆன்மாவின் மலக்கட்டுகள் அகற்றப்பட்டு தூய்மையாக்கப்படுகிறது என்கிற நம்பிக்கையை நந்தி தேவர் மீது தண்ணீர் அபிஷேகிக்கப்படும் இக்காட்சி வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. சிவபெருமானின் பல்வேறு வடிவங்கள் சூழ கட்டப்பட்டுள்ள இந்நந்தி மண்டபம், பொ.ஆ.1564-ல் கிருஷ்ணவீரப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிய வருகிறது.
ஆயிரம் கால் மண்டபம் சிலைகள் - நர்த்தன கணபதி : ஆயிரம் கால் மண்டபம் சிலைகள்
யானைமுகக் கடவுளான விநாயகர் பத்து திருக்கரங்களோடு நடனக்கோலத்தில் காணப்படுவது ஓர் அற்புதக் காட்சியாகும். வலக்காலை வலுவாகத் தரையில் ஊன்றி, தன் இணையரான வல்லபை அமர இடமளிக்கும் வண்ணம் இடக்காலை உயர்த்தி மடக்கி இருப்பது கண்களுக்கு விருந்தான காட்சியாகும். வளைந்து நீண்டிருக்கும் துதிக்கையில் அமிர்த கலசம் இடம் பெற்றுள்ளது.
கம்பத்தடி மண்டபம் சிலைகள்- ராவண அனு கிரஹ மூர்த்தி : கம்பத்தடி மண்டபம் சிலைகள்
ராமாயணக்காப்பியத்தின் இராவணனோடு தொடர்புடைய இரண்டு சிற்பங்கள் இத்திருக்கோயிலில் உள்ளன. ஒன்று புது மண்டபத்தில் உள்ள சிற்பம் மற்றொன்று, அச்சிற்பத்தின் நகல் போல கம்பத்தடி மண்டபத்தில் இடம் பெற்றுள்ள சிற்பமாகும். இவ்விரு சிற்பங்களில் புதுமண்டப சிற்பம் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்டது. இராவணன், கைலாய மலையை பெயர்க்க நினைத்தபோது, எவ்வாறு சிவபெருமானால் தடுக்கப்பட்டான் என்பதை புராணங்கள் விவரிக்கின்றன. சிவபெருமான் தன் முன் கால் பாதத்தைக் கொண்டு கைலாய மலையை நசுக்க , அதன் எடையின் பாரம் தாங்காமல் இராவணன் நசுக்கப்பட்டான். இராவணன் தன் தலையையும் கைகளையும் இசைக்கருவிகளாக்கி நாடி நரம்புகளிலிருந்து இசை வெளிவருமாறு செய்து சிவபெருமானை மகிழ்விக்க முயன்றான்.
கம்பத்தடி மண்டபம் சிலைகள் - சோமஸ்கந்தர் : கம்பத்தடி மண்டபம் சிலைகள்
இது கம்பத்தடி மண்டபத்தில் அமைந்துள்ள சிற்பங்களில் காணப்படவேண்டிய முக்கியமான சிற்பமாகும். சிவனும் பார்வதியும் சுகாசனத்தில் அமர்ந்திருக்க இவர்கள் இருவரிடையே ஸ்கந்தர் நடன நிலையில் நின்றிருக்கும் வண்ணம் இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. சிவனின் கரங்களில் மழுவும் மானும் இடம் பெற்றிருக்கின்றனர். அவரின் முன் வலக்கை அபய முத்திரையையும், முன் இடக்கை சிம்மகர்ண முத்திரையையும் காட்டுகிறது. பார்வதியின் வலக்கை மலர்ச்செண்டை, இடக்கையானது பீடத்தின் மீது வைக்கப்பட்ட நிலையில் உள்ளது. ஸ்கந்தரின் இரு கரங்களிலும் மலர்ச்செண்டுகள் இடம் பிடித்துள்ளன. இந்தக் குழந்தை கரண்ட மகுடம் சூடியுள்ளது.
ஆயிரம் கால் மண்டப சிற்பம்- குறவன் : ஆயிரம் கால் மண்டப சிற்பம்
கையில் கயிற்றைப் பிடித்த வண்ணம் சிலையாக வடிக்கப்பட்டுள்ள இக்குறவனின் கையில் உள்ள கயிற்றின் மறு முனையில் குரங்கு ஒன்று கட்டப்பட்டுள்ளது. குறவனால் இழுத்துச் செல்லப்படும் குரங்கை இருக்கமாய் கட்டிப்பிடித்திருக்கும் குட்டியோடு சேர்த்து வடித்துள்ளதை காணும்போது குரங்குக்கும் குட்டிக்குமான பினைப்பை ஒருவர் உணர முடியும். குறவனின் இடக்கையில் குத்தீட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது. அவரின் விலா எலும்புகள் வெளித்தெரியும் வண்ணம் இச்சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இவரின் கழுத்தைச் சுற்றி அலங்கரிக்கும் முத்தாலான அணிகலன்களும், அவரது சிகை அலங்காரமும் பார்வையாளர்களைப் பரவசம் அடையச் செய்கிறது.
கம்பத்தடி மண்டபம் சிலைகள் - சுஹாசனர் : கம்பத்தடி மண்டபம் சிலைகள்
கம்பத்தடி மண்டபத்தில் இடம்பெற்றுள்ள இத்தூணில் சுகாசனர் மார்க்கண்டேயர் மற்றும் காலசம்ஹார மூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் அமையப்பெற்றுள்ளன. ஈசனுக்கு இடப்புறம் உமையன்னை இடம்பெற்றிருக்கும் இச்சிற்பம் சுகாசனர் எனப்படுகிறது. இவரின் முன் கரங்கள் இரண்டும் அபய , வரத முத்திரைகளை காட்டியிருக்க, பின் கரங்களில் அக்ஷர மாலையும், சூலமும்இடம்பெற்றுள்ளன. சிவனின் வலக்கால் தொங்க விடப்பட்ட நிலையில் உள்ளது. உமையன்னையின் இரு கரங்களில் வலக்கரத்தில் மலரும், இடக்கரம் தொடை மீது வைக்கப்பட்ட நிலையிலும் உள்ளன. உமையன்னையின் இடது கால் தொங்க விடப்பட்டுள்ளது. சிவபெருமானின் இடது தொடை உமையன்னையின் வலது தொடை மீது பொருந்தி இருக்கும் நிலையில் இச்சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் கால் மண்டப சிற்பம்-குறத்தி : ஆயிரம் கால் மண்டப சிற்பம்
இக்குறத்தி சிற்பத்தில் இடம்பெற்றுள்ள பெண் மூன்று குழந்தைகளுடன் காணப்படுகிறாள். நின்றுகொண்டிருக்கும் அவளின் கரத்தால் ஒரு குழந்தையின் தலையைப் பிடித்த வண்ணமும், தோலில் அமர்ந்திருக்கும் மற்றொரு குழந்தை அவள் கையில் ஏந்தியிருக்கும் கூடையில் இருக்கும் உணவு பதார்த்தத்தை சுவைத்தபடியும் . மூன்றாவதான இளைய சவலைக் குழந்தை அவள் மார்பைச் சுற்றி கட்டியுள்ள துணியாலான தூளியில் தொங்கியபடியும் இச்சிற்பத்தில் காட்சியளிக்கின்றன. இளைய சவலைக் குழந்தை அவளது மார்பில் பால் அருந்திய வண்ணம் உள்ளது. அவளின் இடக்கையில் ஏந்தியுள்ள கூடையில் உள்ள பின்னல்கள் கல்லிலாலான சிற்பத்தில் செதுக்கப்பட்டவை என்று உணரமுடியாத வண்ணம் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.
கம்பத்தடி மண்டபம் சிலைகள் - உமா மகேஸ்வர் : கம்பத்தடி மண்டபம் சிலைகள்
சிவபெருமானின் வாழிடமான இமாலயத்தில் அவரின் இணையரான பார்வதியோடு சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் வடிவம் உமா மகேஸ்வரர் எனப்படுகிறது. கம்பத்தடி மண்டபத்தில் உள்ள உமா மகேஸ்வரர் சிற்பத்தில் சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் ஒரு கால் மடிக்கப்பட்ட நிலையிலும் மற்றொரு கால் தொங்கப்பட்ட நிலையிலும் காணப்படுகிறது. அவர் நான்கு கரங்களோடும் ஜடா முடியோடும் காணப்படுகிறார். அவரின் தலையின் வலப்பக்கம் பிறைச்சந்திரன் இடம்பெற்றுள்ளது. அவரின் மேல் கரங்கள் இரண்டில் மான், மழு இடம்பெற்றிருக்க கீழ் கரங்கள் இரண்டும் அபய, வரத முத்திரைகளைக் காட்டுகின்றன. ஈசனின் இடப்பக்கம் பார்வதி சுகாசனத்தில் அமர்ந்திருக்கிறார். தாமரை மலரை வலக்கையில் ஏந்தியுள்ள பார்வதியின் இடக்கை அவரது தொடை மீது வைக்கப்பட்ட நிலையில் உள்ளது. இவர்கள் இருவருக்குப் பின்னே திருவாசி ஒன்று அமைந்துள்ளது.
ஆயிரம் கால் மண்டபம் சிலைகள் - இசைத்தூண் : ஆயிரம் கால் மண்டபம் சிலைகள்-இசைத்தூண்
ச ரி க ம ப த நி என சப்தசுவர ஒலி எழுப்பும் இசைத் தூண்கள் இம்மண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளன. கைகொண்டு கல்லைத் தட்டும் ஓசை இன்னிசையாய் பரிணமிப்பது சிற்பியின் மேதைமையையும், படைப்பில் அவன் காட்டும் ஈடுபாட்டையும், திறமையையும் காட்டுவதாய் அமைந்துள்ளது.
கம்பத்தடி மண்டபம் சிலைகள்-சக்கரதார மூர்த்தி : கம்பத்தடி மண்டபம் சிலைகள்
வேண்டத்தக்கது அறிந்து வேண்டமுழுவதும் தருவோனாகிய சிவப்பரம்பொருள், ஆயிரம் தாமரை மலர்களை சிவனுக்கு அர்ப்பணிப்பதாய் வேண்டிய விஷ்ணு ஒரு மலர் குறைவின் காரணமாக தன் தாமரை விழிகளையே சிவனுக்கு அர்ப்பணித்த போது, விஷ்ணுவின் பக்தியை மெச்சி, விரும்பி மாலோனுக்கு சுதர்சன சக்கரத்தை பரிசளித்ததை சிவபுராணம் சிலிர்ப்புடன் விவரிக்கிறது. அந்தக் காட்சி இங்கே சிற்பமாக இடம் பெற்றுள்ளது. பீடத்தின் மீது அமர்ந்துள்ள சிவபெருமான் விஷ்ணுவிற்கு சுதர்சன சக்கரத்தை பரிசளிக்கிறார்.
ஆயிரம் கால் மண்டப சிற்பம் - பாண்டிய அரசன் : ஆயிரம் கால் மண்டப சிற்பம்
இங்கே நீங்கள் காண்பது பாண்டிய மன்னனின் சிற்பம். அவன் கொண்ட நிமிர்ந்த தோற்றமும், கணிவு ததும்பும் கண்களும், அவன் எப்படிப்பட்ட சிறந்த அரசன் என்பதைக் காட்டுவதாய் அமைந்துள்ளது. அவனுடைய தாழாத தலையும், வீழாத நெஞ்சும், மாலாத ஒழுக்கமும் இச்சிலையிலேயே வடிக்கப்பட்டுள்ளன.
ஆயிரம் கால் மண்டபம் சிலைகள் - ரதி : ஆயிரம் கால் மண்டபம் சிலைகள்
அன்னப்பறவையின் மீது அமர்ந்தபடி, ஈடிணையற்ற எழிலுடைய மாரனின் இணையான ரதி இங்கே தோற்றமளிக்கிறாள். கவரி வீசும் பெண்கள் சூழ, கரமேந்திய மலர்ச்செண்டும், மென்னகையும், அவளில் மிளிர்கிறது. காதலின் இறைவியான இவளும், இவளின் இணையரான மதனும் காண்போரின் கவனத்தை கவராமல் செல்வரா என்ன?
ஆயிரம் கால் மண்டப சிற்பம் - குதிரை வீரன் : ஆயிரம் கால் மண்டப சிற்பம்
ஆயிரங்கால் மண்டபத்துக்குள் நுழைய நேரிடும் உங்களின் இடப்புறம் காணப்படுவது குதிரையின் முதுகில் வாகாய் அமர்ந்து அதை செலுத்தும் வீரனின் சிற்பமாகும். தூக்கிய நிலையல் உள்ள குறவியின் முன்னங்கால்களில் புயலெனப் புறப்படும் வேகத்தின் தோற்றத்தை நீங்கள் காணலாம். இச்சிற்பமானது இம்மண்டபத்தைக் கட்டிய தளவாய் அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்டுள்ளது. இதை சிவபெருமானின் சிற்பம் எனவும் கருதவும் இடமுள்ளது. திருவிளையாடற் புராணத்தில் மாணிக்கவாசகருக்காய் நரிகளைப் பரிகளாக்கிய பரமனே இங்கே பரியேறி நிற்பதாய் யாராலும் கற்பனை செய்துகொள்ள முடியும். இச்சிற்பம் அமைந்துள்ள தூணின் கீழ் பகுதியில் நரியொன்று வடிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இதிலிருந்து குதிரையேறி நிற்பது குவலயம் காக்கும் சிவப்பரம்பொருளே எனக் கொள்ளற்பாலது.
ஆயிரம் கால் மண்டப சிற்பம் - திரிபுரண்டகர் : ஆயிரம் கால் மண்டப சிற்பம்
தேரேறி வந்து திரிபுரம் எரித்ததாகக் கூறப்படும் சிவன் இங்கே தேரின்றி நின்ற நிலையில் திரிபுர சம்ஹாரராகத் தோற்றமளிக்கிறார். அவரின் வலக்கரம் பற்றியுள்ள அன்பின் முனையில் நின்றாடும் நெருப்புக்குக் கீழே மாயோனின் உருவம் காணப்படுகிறது. இவர் நின்றிருக்கும் பீடத்தின் கீழே தேரோட்டியாய் நிற்கும் நான்முகனின் சிற்பம் இடம்பெற்றுள்ளது. இக்காட்சிகள் அனைத்தும் சேர்ந்து இவர் திரிபுராந்தகர் என்றே உறுதி படுத்துகின்றது.
கம்பத்தடி மண்டபம் சிலைகள் - சந்திரசேகர மூர்த்தி : கம்பத்தடி மண்டபம் சிலைகள்
தீபமாக ஒளிர்ந்தாலும் தேய்ந்து வளரும் வெண்ணிலாவின் தேய்வுக்கு பின்னான காரணத்தை சிவபெருமானின் இந்த வடிவம் உணர்த்துகிறது. காலச் சுழற்சியின் அடையாளமாகவும், மரணம் இல்லா பெருவாழ்வை வழங்கும் சோமனின் அமிர்தத்தின் குறியீடாகவும் நிலவு பார்க்கப்படுகிறது. மான் மழு ஏந்திய மாதேவனின் சிகைக்குள் சிறு கூன் பிறை இடம் பிடித்ததற்கான புராண வரலாறு உள்ளது.
கம்பத்தடி மண்டபம் சிலைகள் ரிஷப ரூடர் : கம்பத்தடி மண்டபம் சிலைகள்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும் புதிய புதிய ஜனனம் என்னும் உயிர்களின் படைப்பாக்கத்தின் குறியீடாகக் கருதப்படும் விருஷபம் அல்லது ரிஷபமானது சிவனின் வாகனமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சிவபெருமானின் மூன்று சிலா ரூபங்கள் அவரின் வாகனமான ரிஷபத்தோடு தொடர்புப்படுத்தப்பட்டுள்ளன. இமைப்பொழுதும் சிவனை இணை பிரியாத பார்வதியோடு ரிஷபம் என்று அழைக்கப்படும் நந்தி மீது சிவன் அமர்ந்திருக்கும் கோலம் ரிஷபாரூடர் என அழைக்கப்படுகிறது. சிவனின் எதிரே நந்தி நிற்கும் வகையில் காணப்படும் வடிவம் ரிஷப வாகனர் என்றும், ரிஷபத்தின் மீது சிவன் சாய்ந்தவாறு இருக்கும் வடிவம் ரிஷபாந்திகா எனவும் அழைக்கப்படுகிறது.
கம்பத்தடி மண்டபம் சிலைகள்- சண்டேச அனுகிரக மூர்த்தி : கம்பத்தடி மண்டபம் சிலைகள்
இந்த சண்டேச அனுகிரக மூர்த்தியின் சிற்பமானது சிவப்பெருமானின் அத்யந்த பக்தரான சண்டேச நாயனாரின் வரலாற்றை விவரிக்கிறது. விசார சர்மன் என்பவர் சிவபெருமானின் தீவிர பக்தராவார். அவர் வாழ்ந்த கிராமத்தில் இருந்த ஆநிரைகளை மேய்ப்பவராக இருந்து வந்தார். அவருடைய கனிவான பராமரிப்பில் பசுக்கள் எல்லாம் மிகுதியாக பால் சுரந்து வந்தன. அதனால் அவர் பாலை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கத் தொடங்கினார். இவருடைய இந்தச் செய்கையால் வெறுப்படைந்த சிலர் அவர் பசுக்கள் தரும் பாலை வீணாக்குவதாகக் கூறி அவருடைய தந்தையாரின் மனதில் விஷத்தை விதைத்தனர். தனயனின் செயலை விசாரிக்கக் கூட மனமில்லாத தந்தையும் விசார சர்மனின் சிவ வழிபாட்டை நிறுத்த முற்பட்டார். பக்தியின் மிகுதியால் விசார சர்மன் தன் கையிலிருந்த ஆநிரை மேய்க்கும் கோலை தன் தந்தை மீது எறிய அது மழுவாக மாறி அவரின் கால்களை வெட்டி விட்டது. இந்த சிவப்பற்றை மெச்சிய சிவபெருமான் விசார சர்மனுக்கு மாலை அணிவித்து தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார். சிவநிர்மால் ய மாலையினால் கவுரவிக்கப்பட்ட விசார சர்மன் அன்றிலிருந்து சண்டேசர் என அழைக்கப்படுகிறார்.
கம்பத்தடி மண்டப சிலைகள்-ஸ்ரீ ரிஷப ரூடர் : கம்பத்தடி மண்டப சிலைகள்-ஸ்ரீ ரிஷப ரூடர்
ஏகபாத மூர்த்தியின் சிற்பத்தை அடுத்து காணப்படுவது, ரிஷபத்தின் மீது பார்வதியோடு சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் ரிஷபாரூடர் சிற்பமாகும். இச்சிற்பத்தில் நந்தி கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. இடக்காலை மடக்கிய நிலையில் சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் வலக்கால் தொங்க விடப்பட்ட தோற்றத்தில் உள்ளது. வலக்கரத்தில் மழுவையும், இடக்கரத்தில் மானையும் ஏந்திய தோற்றத்தில் சிவபெருமானின் மேற்கரங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கீழ்க்கரங்கள் இரண்டும் அபய மற்றும் வரத முத்திரைகளை காட்டு வண்ணம் வடிக்கப்பட்டுள்ளன. சிவனின் இடப்புறம் அமர்ந்திருக்கும் பார்வதி தன் வலக்காலை மடித்த நிலையிலும் இடக்காலை தொங்க விட்ட நிலையிலும் காணப்படுகிறார். அவரது வலக்கரத்தில் மலர்செண்டை ஏந்தியுள்ளார்.
கம்பத்தடி மண்டப சிலைகள்-கஜசம்ஹார மூர்த்தி : கம்பத்தடி மண்டப சிலைகள்
வேழம் உரித்த வெண்ணீற்றீசனின் கஜாசுரா சம்கார கோலம் கஜ சம்கார மூர்த்தி என்கிற வடிவத்தில் வழிபடப்படுகிறது. இத்திருக்கோலத்தில் சிவபெருமான் எட்டுத் திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். பின்னிரு கரங்கள் உரித்த யானையின் தோலைப் பற்றி இருக்கின்றன. மூன்று வலக்கரங்களில் முறையே மழு, சூலம் மற்றும் அம்பு ஆகியவை காணப்படுகின்றன. இடக்கரங்கள் மூன்றில் மான், கபாலம் மற்றும் வில் ஆகியவற்றை ஏந்தி இருக்கிறார். யானையின் தலை மீது வலக்காலை ஊன்றிய வண்ணம், வளைந்திருக்க வேண்டிய இடக்கால் கொண்டு யானை தோலை விரித்தவாறு, நின்ற கோலத்தில் சிவபெருமான் காணப்படுகிறார். சிவபெருமானை வணங்கும் முனிவர்களின் சிற்பங்களும் இதில் செதுக்கப்பட்டுள்ளன. சிவபெருமானின் கஜ சம்கார கோலத்தைக் கண்டு கலங்கிய பார்வதியின் சிற்பம் குழந்தை கந்தனோடு தூணின் பக்கங்களில் செதுக்கப்பட்டுள்ளது.
🛠️ வசதிகள் (Facilities)
வாகன நிறுத்தம் : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பிரதானமாக மனதில் கொள்ள வேண்டிய விசயம் யாதெனில் இத்திருக்கோயிலை சுற்றிலும் சராசரியாக 400 மீட்டர் தொலைவு வரை வாகன போக்குவரத்து அனுமதியில்லை என்பதாகும். பக்தர்கள் அனைவரும் தங்களது வாகனங்களை இந்த எல்லைக்கு அப்பால் நிறுத்திவிட்டு நடந்து மட்டுமே திருக்கோயிலுக்கு வருகை தரமுடியும். எனவே வாகன நிறுத்தங்கள் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் அவர்களது வாகனங்களை நிறுத்துவதற்கு, எல்லீஸ் நகர் பகுதியில் வாகன நிறுத்தகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகன நிறுத்தகத்தில் பக்தர்களுக்கு குடிநீர், ஆண் மற்றும் பெண் பக்தர்களுக்கான தனித்தனியான கழிவறைகள் மற்றும் குளியலறைகள் மற்றும் உணவு தயார் செய்யும் இடம் ஆகிய வசதிகள் உள்ளன. இங்கே வாகனங்களை நிறுத்துவதற்கு பின்வரும் வகையிலான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
வாகன வகை நிறுத்தக் கட்டணம் ரூபாயில்
பேருந்து/சிற்றுந்து- 200/-
மூடுந்து 70/-
மகிழுந்து/தானி 50/-
மேலும், இரண்டு இடங்களில் வாகன நிறுத்தும் இடங்கள் பக்தர்கள் வசதிக்காக இத்திருக்கோயில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
1.தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள அனுப்பானடி வாகன நிறுத்தகம்.
2. எழுகடல் வணிக வளாக வாகன நிறுத்தகம்.
தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள அனுப்பானடிவாகன நிறுத்தகம்.
வாகன வகை நிறுத்தக் கட்டணம் ரூபாயில்
பேருந்து/சிற்றுந்து 100/-
மூடுந்து 30/-
மகிழுந்து/தானி 20/-
எழுகடல் வணிக வளாக வாகன நிறுத்தகம்.
வாகன வகை நிறுத்தக் கட்டணம் ரூபாயில்
இருசக்கர வாகனம் 10/-
மிதிவண்டி 5/-
பொருட்கள் பாதுகாக்கும் அறை : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகைகளைப் பாதுகாக்க, இத்திருக்கோயிலின் அனைத்து நுழைவாயில்களிலும் கட்டணம் செலுத்தி பெறக்கூடிய பொருட்கள் வைப்பறை, கைபேசி பாதுகாப்புப் பெட்டகங்கள் ஆகிய வசதிகளும் மற்றும் பயண உடைமைகளை ஊடுகதிர் பகுப்பாய்வு செய்யும் கருவிகள் ஆகியவையும் நிறுவப்பட்டுள்ளன.
பொருட்கள் பாதுகாப்பு கட்டணம்-ரூ.2/-(ஒரு பொருளுக்கு)
கைபேசி பாதுகாப்புக் கட்டணம்-ரூ.5/-(ஒரு கைபேசிக்கு)
சக்கர நாற்காலி : மாற்று திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் உபயோகிப்பதற்கான திருக்கோயில் நிர்வாகம் சார்பில் 24 சக்கர நாற்காலிகள் பயன்பாட்டில் உள்ளன. இவை திருக்கோயில்தெற்கு மற்றும் மேற்கு ஆடி வீதி சந்திப்பில் வைக்கப்பட்டுள்ளன.
நூலக வசதி : திருக்கோயில்கள் நிறுவப்பட்டதின் முதன்மை நோக்கம் வழிபாடு என்றாலும், ஆன்மிகம் மற்றும் சமயப் பரப்புகையும் திருக்கோயில்களின் தலையாய பணியாகும். அதன்பொருட்டு இத்திருக்கோயிலில் கட்டணமில்லா சமய நூலகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. பல்வேறு தலைப்புகளிலான 1750 சமய நூல்கள் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்நூலகம் திருக்கோயிலின் திருமதிலின் உள்ளே தெற்கு ஆடி வீதியில் அமைந்துள்ளது.
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் காலணிகளைப் பாதுகாக்க, இத்திருக்கோயிலின் அனைத்து நுழைவாயில்களிலும் கட்டணமில்லா காலணி பாதுகாப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தங்கத் தேர் : இத்திருக்கோயில் பக்தர்களுக்கு கிடைக்கத்தக்கதான தங்கரத இழுப்பு சேவையை பெற பக்தர்கள் ரூ.1501/- கட்டணமாக செலுத்த வேண்டும்.ரூபாய்.1501/- செலுத்தும்பட்சத்தில் ஒரு பதிவுக்கு ஐந்து நபர்கள் மட்டும் தங்கரத இழுப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள் இத்திருக்கோயிலில் திருவிழாக்கள் நடைபெறாத தினங்களில் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க சேவைக்கட்டணம் செலுத்துவதன் அடிப்படையில் இத்திருக்கோயிலின் நான்கு ஆடி வீதியின் வழியே இரவு 07.00 மணிக்கு மேல் தங்கரத புறப்பாடு செய்யப்படும். தமிழ் ஆண்டின் ஒவ்வொரு மாத முதல் தினத்தன்று நடத்தப்படும் தங்கரத புறப்பாடானது திருக்கோயில் நிருவாகத்தால் நடத்தப்படுவதால் பக்தர்கள் கட்டணமின்றி இச்சேவையில் பயன் பெறலாம்.
துலாபாரம் வசதி : பக்தர்கள் தங்கள் எடைக்கு நிகராக பொருட்களை காணிக்கையாக வழங்குவது துலாபாரம் எனப்படுகிறது. இத்திருக்கோயிலிலும் பக்தர்கள் அரிசி, சர்க்கரை, பழங்கள், நாணயங்கள் போன்ற அவர்கள் விரும்பும் பொருட்களை துலாபாரமாக திருக்கோயிலுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு கட்டணமாக ரூபாய்.5/-மட்டும் பெறப்படுகிறது பொற்றாமரைக்குளத்தின் வடக்கு கரையில் துலாபாரம் வழங்கும் இடம் அமைந்துள்ளது.
தங்குமிட வசதி : தொலைதூரப்பகுதிகளிலிருந்து இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தங்குமிட வசதி அளிப்பதற்காக கோயிலின் அருகே மேலைச்சித்திரை வீதியில் பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியும், திருக்கோயிலிலிருந்து சற்றொப்ப 2 கி.மீ. தொலைவில் பெரியார் பேருந்து நிலையத்தின் அருகில் எல்லீஸ் நகரில் ஒரு தங்கும் விடுதியும் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு படுக்கைகள் கொண்ட ஐந்து அறைகளும், மூன்று படுக்கைகள் கொண்ட ஏழு அறைகளும் குளிரூட்டப்பட்ட நான்கு அறைகளும் அமைந்துள்ள பிர்லா விஷ்ரம் விடுதியில்
இரண்டு படுக்கைகள் கொண்ட அறையில் ஒரு நாள் தங்குவதற்கு ரூ.200/-ம்,
மூன்று படுக்கைகள் கொண்ட அறையில் ஒரு நாள் தங்குவதற்கு ரூ.300/-ம் மற்றும்
குளிரூட்டப்பட்ட அறையில் ஒரு நாள் தங்குவதற்கு ரூ.500/-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்லீஸ் நகர் யாத்ரிகர்கள் தங்கும் விடுதியில்
நான்கு படுக்கைகளைக் கொண்ட அறை ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு வாடகையாக ரூ.900/-ம்,
இரண்டு படுக்கைகளைக் கொண்ட அறை ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு வாடகையாக ரூ.300/-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
50 படுக்கைகள் கொண்ட ஓய்வு மாடத்தைப் பயண்படுத்த நாள் ஒன்றுக்கு ரூ.3750/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு மாட வசதி மொத்தமாக 50 நபர்களுக்கு சேர்த்துத்தான் தரப்படுமே அன்றி, தனி நபர்கள் இவ்வசதியை நுகர இயலாது.
முதலுதவி மருத்துவ மையம் : இத்திருக்கோயில் வருகையின் போது திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படும் பக்தர்களை மீட்டு முதலுதவி அளிப்பதற்காக மருத்துவ சிகிச்சை மையம் ஒன்று இத்திருக்கோயில் நிருவாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருக்கோயில் நடை திறந்திருக்கும் நேரங்களில் ஒரு மருத்துவர், ஒரு மருத்துவ உதவியாளர் மற்றும் பல்நோக்கு பணியாளர் ஆகியோர் பணியிலிருக்கும் இம்மருத்துவ மையத்தில் பக்தர்களின் உயிர் காப்பதற்குத் தேவையான முதலுதவிகள் மட்டும் அளிக்கப்படுகின்றன. முதலுதவி அளிக்கப்பட்ட பக்தர்கள் மேல்சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர். இம்மருத்துவ மையம் திருக்கோயில் மேற்கு கோபுரத்திற்கு எதிரே மேலைச் சித்திரை வீதியில் அமைந்துள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியின் ஒரு பகுதியில் செயல்பட்டு வருகிறது.
கருணை இல்லம் : பெற்றோரை இழந்த அல்லது வறிய நிலையில் உள்ள குடும்பத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கும் விதமாக, தெப்பக்குளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கருணை இல்லம் ஒன்று, 1997-ஆம் ஆண்டு முதல் இத்திருக்கோயில் நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இங்குத் தங்கி பயிலும் மாணவிகளுக்குச் சீருடை, உணவு, மாதாந்திரத் தேவைபொருட்கள், புத்தகங்கள் அனைத்தும் திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இங்குத் தங்கி பயிலும் பெண் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுவருவதுடன், அவர்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன. அக்குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக விளையாட்டு உபகரணங்கள், தொலைக்காட்சி பெட்டி போன்றவை பயன்பாட்டில் உள்ளன. தற்போது 34 பெண்குழந்தைகள் இக்கருணை இல்லத்தில் தங்கி அருகில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இக்கருணை இல்லத்தில் தங்கி மேல்நிலை கல்வி பயின்று முடிக்கும் மாணவிகள், கல்லூரி கல்வியைத் தொடரும் பட்சத்தில், அவர்களுக்கான கல்லூரிக் கல்விக் கட்டணத்தில் 50 சதவீதத்தை இத்திருக்கோயில் நிருவாகமே அவர்களுக்கு வழங்கும் விதமான நலத்திட்டம் ஒன்றும் நடைமுறையில் உள்ளது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பெண்குழந்தைகளின் கல்வி மற்றும் சமூக நிலை உயர்வுக்கு இக்கருணை இல்லம் ஒரு வரப் பிரசாதமாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக, எதிர்த்திசை சவ்வூடுபரவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்கென திருக்கோயிலின் உள்ளே 10 இடங்களில் எதிர்த்திசை சவ்வூடுபரவல் நீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றுள் 5 எந்திரங்கள், இத்திருக்கோயிலின் 5 கோபுர நுழைவுவாயில்கள் அருகிலிலும் நிறுவப்பட்டுள்ளன.
மின்கல ஊர்தி : இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஆடி வீதிகளில் பயணம் செய்ய ஏதுவாக மின்கல மகிழுந்து சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இச்சேவையை பயன்படுத்த விரும்புவோர் இத்திருக்கோயிலின் உதவி பாதுகாவல் அலுவலர் திரு.அருணாசலம் என்பாரை @ 91 99965 18993 என்கிற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
🙏 சேவைகள் (Services)
நன்கொடை : திருக்கோயில் சார்பாக உபய நிகழ்ச்சிகள் நடத்தப்பெறுகின்றன. அபிஷேகம், உபய திருக்கல்யாணம், உபய தங்கரதம், சித்தர் புஷ்ப கூடாரம், துர்க்கை அம்மை அபிஷேகம், சரஸ்வதி அபிஷேகம், மகாலெட்சுமி அபிஷேகம், பத்ரகாளியம்மன் அபிஷேகம் முதலியவை
அன்னதானம் : மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத்திட்டம் கடந்த 2002-ஆம் ஆண்டில் இருந்து இத்திருக்கோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் இத்திருக்கோயிலில் முதன்முதலில் நடைமுறைப்பட்டுத்தப்பட்டபோது, தினமும் 200 பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட நிலையில், படிப்படியாக பயனாளிகளின் எண்ணிக்கை விரிவுப்படுத்தப்பட்டு 2017-ஆம் ஆண்டிலிருந்து 300 பயனாளிகளுக்கும், 2018-ஆம் ஆண்டிலிருந்து 500 பயனாளிகளுக்கும், 2020-ஆம் ஆண்டிலிருந்து 700 பயனாளிகளுக்கும் தினசரி மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. இதற்கான திட்டச்செலவாக பயனாளி ஒருவருக்கு ரூ.35/- செலவிடப்பட்டது. இந்த மதிய உணவில் சாதம், சாம்பார், கூட்டு, பொரியல், மோர், அப்பளம் மற்றும் ஊறுகாய் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு வாரமும் புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவற்றோடு கூடுதலாக பாயாசமும் வழங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் மீனாட்சி நாயக்கர் மண்டபத்திற்கு அருகே அமைந்துள்ள அன்னதானக்கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. தினமும் முற்பகல் 11 மணியளவில் இந்த அன்னதானம் வழங்குவது தொடங்கியது. மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிப்பு செய்யப்பட்டபடி இந்தத் திட்டத்தை நாள் முழுவதும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் விரிவு படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இதற்காக கொதிகலன்கள், குளிர்பதன அறை போன்றவை கொண்ட நவீன சமையல் கூடம் அமைக்கப்பட்டு மேலும் ஒரே நேரத்தில் 140 நபர்கள் அமர்ந்து உணவு அருந்தக்கூடிய உணவுக்கூட வசதியும் ஏற்படுத்தப்பட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 31.12.2022 தேதியன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி முடிய நாள்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த அன்னதானத்திட்டத்தில் பங்கேற்று நாள் ஒன்றுக்கு 4000 நபர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவோர் ரூ.1,40,000/- இத்திட்டத்திற்கென நன்கொடையாக வழங்கலாம். ரூ.28,00,000/-ஐ எவரேனும் நன்கொடையாக வழங்கினால், அத்தொகை வங்கியில் நிரந்தர முதலீடு செய்யப்பட்டு, அதற்கு கிடைக்கும் வட்டித்தொகையிலிருந்து அந்த நன்கொடையாளர் குறிப்பிடும் ஒரு தினத்தில் ஒவ்வோர் ஆண்டும் 4000 நபர்களுக்கு உணவு வழங்கப்படும்.
இந்த அன்னதானத் திட்டத்திற்கு பக்தர்கள் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரித்துறை அலுவலக ஆணையரது உத்தரவு எண்...464/200/2010-11/-, நாள்.07.07.2011-ன்படி வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 80(ஜி)-ன் கீழ் வருமான வரி விலக்கு உண்டு. அதற்கான நிரந்தர கணக்கு எண்.0359
இத்திட்டத்திற்கான நன்கொடைகள் நிருவாகி ( இத்திருக்கோயில் துணை ஆணையர் / செயல் அலுவலர்), அன்னதானத் திட்ட நிதி அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை என்கிற பெயரில் காசோலை அல்லது வரைவோலையாகச் செலுத்தப்படலாம். இத்திட்டத்தில் ரூ.70,000/- செலுத்தி நன்கொடையாளராக ஒருவர் இருந்து கொள்ளலாம். மூலதனத்திலிருந்து வரும் வட்டி மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தினத்தில் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பெறும். குறிப்பிட்ட ஒரு நாளில் 100 பேருக்கு அன்னதானம் வழங்க ரூ.3,500/- செலுத்த வேண்டும். அன்னதான நன்கொடையை காசோலையாகவோ, வரைவோலையாகவோ இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை என்ற பெயருக்கு அனுப்பலாம்.



