தரிசன நேரம்
காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை தொடர்ந்து நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. காலசந்தி பூஜை (அம்மன் அலங்காரம்) : 06:30 AM to 07:00 AM IST 2. உச்சிக்கால பூஜை (அம்மன் அலங்காரம்) : 11:30 AM to 12:00 PM IST 3. மாலை பூஜை (அம்மன் அலங்காரம்) : 04:00 PM to 04:30 PM IST 4. சாயரட்சை பூஜை (அம்மன் ALANGARAM) : 06:30 PM to 07:00 PM IST
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஆனைமலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை - 642104 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு மாசாணியம்மன் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 20th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
✨
விசேஷ பூஜை விவரங்கள் (Special Pooja Details)இந்த ஆலயத்திற்கான பிரத்யேக வழிபாடுகள் மற்றும் சேவைகளைக் காணுங்கள்.
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காமிக ஆகமம் விமானம் வகை : கஜாப்ப்ருஷ்டம் விமானம் கருவறை வடிவம் : சதுர வடிவம் எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 20th நூற்றாண்டு பாரம்பரிய கோயிலா : No
தல சிறப்பு (Thiruthala Special):
பரிகாரம் மூலவருடைய அமைப்பு
அம்மன் மயான தேவதையாக 17 அடி நீளத்தில் சயனக் கோலத்தில் மல்லார்ந்த நிலையில் சிரசில் தீ வாலையுடன் நான்கு திருக்கரங்களுடனும் பக்தர்கள் திருப்பாதங்களை எளிதில் தரிசனம் செய்து பாவவிமோசனம் அடையும் வண்ணம் அருள்பாலித்து வருகிறார். வலது புறம் உள்ள இரண்டு திருக்கரங்களில் ஒன்றில் சர்ப்பத்துடன் கூடிய உடுக்கையும், மற்றொன்றில் திரிசூலமும், இடது புறம் உள்ள திருக்கரங்களில் ஒன்றில் சர்ப்பமும், மற்றொன்றில் கபாலமும் தாங்கியுள்ளார். பிரார்த்தனை நீதிக்கல்
மகா சக்தியான மாசாணியம்மன் நீதிதேவதையாக விளங்குவதால் இங்கு நீதிக்கல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிக்கல்லின் மகிமை என்னவென்றால், பில்லி, சூனியம், மந்திரம், ஏவல், நம்பிக்கை துரோகம், மோசடி போன்ற பெரும் பகையால் பாதிக்கப்பட்டவர்களும், பொருள் திருட்டுப் போனவர்களும் மிளகாயை அரைத்து கல்லில் பூசி தனக்கு நீதிகிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர். மிளகாய் அரைத்து நீதி வேண்டிய பின் தொண்ணூறு நாளுக்குள் நீதிகிடைக்கும் என்பது ஐதீகம். நீதிகிடைத்த பின்னர் அம்மனுக்கு எண்ணெய்க்காப்பு செய்ய வேண்டும். இதர வகை தனக்கு தன் வாழ்விலே எந்தெந்த விதமான வேண்டுதல்கள் உள்ளனவோ அதனை ஒரு சீட்டிலே எழுதிக் கொடுத்தால் அதனை அம்மனின் கையிலே கட்டி விடுவார்கள். நியாயமான கோரிக்கை நிறைவேறியதும் அம்மனுக்கு அவர்கள் அபிசேக பூஜை நடத்தி மகிழ்வது இந்தக் கோயிலின் சிறப்பாகும்.
அம்பாளிடம் வைத்து பூஜிக்கப்பட்ட முடிகயிறுகளை திருஷ்டி பரிகாரத்திற்காக வாங்கிச் செல்கின்றனர்.
உடல் எரிச்சல், உடல் வலி போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டோர் அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்ட எண்ணெய்யினை வாங்கி உடலில் பூசிக்கொண்டு உடல்உபாதைகள் நீங்கி குணம் பெறுகின்றனர்
🛠️ வசதிகள் (Facilities)
அஞ்சல் வழி பிரசாதம் : பக்தர்கள் பயன்பெறும் வகையில் அஞ்சல் வழி பிரசாதம் நடை முறைப்படுத்தப்பட்டு திருக்கோயிலில் நேரடியாகவம், ஆன் லைன் மூலமாகவும் பெறும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குளியல் அறை வசதி : திருக்கோயிலுக்கு கிழபுறம் நவீன வசதிகளுடன் கூடிய (ஆண்கள் மற்றும் பெண்கள்) குளியலறைகள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளது. முடி காணிக்கை வசதி : திருக்கோயிலுக்கு தெற்குப்புறம் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு இலவசமாக காணிக்கை முடி செலுத்துவதற்காக முடிகாணிக்கை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : இலவசமாக காலணி பாதுகாப்பு மையம் இராஜகோபுரத்தின் முன்புறம் ஒன்றும், மேற்கு கோபுர வாயிலின் முன்புறம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு இராஜகோபுரத்தின் கிழக்குப்பகுதியில் ஓன்றும், அன்னதானக்கூடத்தில் இரண்டும் அமைக்கப்பட்டுள்ளது. தங்கத் தேர் : பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாட்களில் தங்கரத உலா வர கட்டணம் ரூ.1500/- செலுத்து தங்கரத உலாவில் மாலை 7.00 மணிக்கு கலந்து கொள்ளலாம். கல்யாண மண்டபம் : திருக்கோயில் குண்டம் நடைபெறும் இடத்தில் திருமண மண்டபம் உள்ளது. திருமண மண்டபத்திற்கு ஒருநாள் கட்டணமாக ரூ.20000/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்கள் அறை : திருக்கோயில் வளாகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்பு எண். 98425 86978 நூலக வசதி : திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் படித்து பயன்பெற திருக்கோயில் அலுவலகத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலி : திருக்கோயிலுக்கு வருகை தரும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்கு ஏதுவாக வீல்சேர் பயன்பாட்டில் உள்ளது. திருக்கோயில் அலுவலகத்தின் அருகில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக வீல்சேர் வைக்கப்பட்டுள்ளது. தொடர்பு கொள்ள திருக்கோயில் புலவர் திரு. ம.லோகநாதீஸ்வரன் , 9442428254 திரு. கி. செந்தில்குமார் 9659119961 கழிவறை வசதி : திருக்கோயிலுக்கு கிழபுறம் நவீன வசதிகளுடன் கூடிய (ஆண்கள் மற்றும் பெண்கள்) கழிவறைகள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளது.
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : அன்னதானம்
இத்திருக்கோயிலில் திங்கள், புதன், வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் 100 நபர்களுக்கும், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் 200 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் நாள் ஒன்றுக்கு ரூ.3500/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதானத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம். ரூ.30,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது ஒரு நாளில் அன்னதானம் செய்து கொள்ளலாம். நன்கொடை : தங்கரதம்
பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் தங்கரத உலா நடத்திட கட்டணமாக .1500/- செலுத்தினால் தங்கரத உலாவில் மாலை 7.00 மணிக்கு கலந்து கொள்ளலாம். நான்கு நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்
அபிசேகம்
அபிசேகத்திற்கு பணம் செலுத்த விரும்பும் பக்தர்கள் .1000/- செலுத்தி காலை 6.30, முற்பகல் 11.30, பிற்பகல் 4.00 மணி மற்றும் மாலை 6.30 மணி ஆகிய நேரங்களில் நடைபெறும் அபிசேகத்தில் கலந்து கொள்ளலாம்.
ஒரு கால அபிசேகத்திற்கு 3 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அமாவாசை அர்ச்சனை கட்டளை
அமாவாசை நாட்களில் அர்ச்சனை செய்து பிரசாதம் பெற விரும்பும் பக்தர்கள் ( உள்நாடு 200 வெளி நாடு 500) செலுத்தி ஒரு வருடத்திற்கு அர்ச்சனை செய்து தங்களுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
We use cookies and location data to enhance your experience, show personalized ads, and help you find temples near you.
By continuing to visit this site, you agree to our Privacy Policy.