Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர், தஞ்சாவூர்

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர், தஞ்சாவூர் - 613501 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 12:00 AM
12:00 AM to 12:00 AM
ஒவ்வொரு நாளும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பகலில் நடை சாற்றப்படாமல் திறந்திருக்கும். தமிழ் மாதம் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில், இந்த ஆலயம் காலை 03.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை திறந்திருக்கும். மூலவர் சிலை புற்று மண்ணால் அமையப்பெற்றுள்ளதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, அம்பாளுக்கு ஒரு மண்டலத்திற்கு (48 நாட்கள்) சாம்பிராணி தைல த்தில் தைல அபிஷேகம் செய்யப்படுகிறது.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை (வழக்கமான பூஜை அலங்காரம்) : 07:30 AM to 08:30 AM IST
2. உச்சிக்கால பூஜை (வழக்கமான பூஜை அலங்காரம்) : 11:30 AM to 12:00 PM IST
3. சாயரட்சை பூஜை (வழக்கமான பூஜை அலங்காரம்) : 06:00 PM to 06:30 PM IST
4. அர்த்தஜாம பூஜை (வழக்கமான பூஜை அலங்காரம்) : 07:30 PM to 08:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): ஶ்ரீ மாரியம்மன்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): வேம்பு

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): தஞ்சாவூர்

தாலுகா (Taluk): தஞ்சாவூர்

தொலைபேசி (Phone): 04362267740

முகவரி (Address):

சன்னதி தெரு, புன்னைநல்லூர், தஞ்சாவூர், 613501

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Sri Venkateshwara Bhavan Ac

Sri Venkateshwara Bhavan Ac

⭐ 3.8 (71 reviews)

📍 Near Punnai Nallur Mariyamman Kovil,dharmambal Nagar, Mariammankoil

🚀 0.1 km away
View
Hotel Sri Saravana Bhavan

Hotel Sri Saravana Bhavan

⭐ 3.9 (226 reviews)

📍 KPR Complex, MC Road , Opposite 3rd Gate & Medical College, Sri Nagar

🚀 3.8 km away
View
Aaharam

Aaharam

⭐ 3.7 (12 reviews)

📍 No 265, Mission Street, Maharnonbu Chavadi

🚀 4.3 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர், தஞ்சாவூர் - 613501 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 16th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Thanjavur (3 km), Kumbakonam (31 km), Mannargudi (35 km), Neyveli (38 km)

🚌 பேருந்து வசதிகள் (தஞ்சாவூர் Bus Timings)

தடம் (Route) நேரம்
POONDI MATHA ➔ THANJAVUR
Moffusil Bus ()
00:00
KUMBAKONAM ➔ THANJAVUR
Private Bus (SENTHIL)
00:00
KARUR ➔ THANJAVUR
Moffusil Bus (TNSTC)
00:00
KARUR ➔ THANJAVUR
Moffusil Bus (KMU19)
00:04
THIRUPATHUR ( SIVAGANGAI) ➔ THANJAVUR
Moffusil Bus (-)
00:05

* தஞ்சாவூர் வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காமிக ஆகமம்
ஸ்தல விருட்சம் : வேம்பு
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 16th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : அண்மை காலம்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

வரலாற்று சிறப்பு
இத்திருக்கோயிலின் கருவறையில் அருள்பாலிக்கும் அருள்மிகு மாரியம்மன் புற்று மண்ணால் அமைந்துள்ளது என்பது தனிச்சிறப்பாகும். எனவே அம்பாளுக்கு நித்திய அபிஷேகம் இல்லாமல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் தைலாபிஷேகம் ஒரு மண்டலம் (நாற்பத்தியெட்டு நாட்கள்) நடந்து வருகிறது. அந்த ஒரு மண்டல காலமும் அன்னையின் உக்கிரம் அதிகமாகும் என்பதால் தயிர் பள்ளயம் மற்றும் இளநீர் கொண்டு நைவேத்தியம் செய்யப்படுகிறது. கோடை நாட்களில் அம்பாளுக்கு முகத்திலும், சிரசிலும் முத்து முத்தாய் வியர்வை வியர்த்து தானாகவே மாறி விடும் வழக்கம் இன்று வரை நடந்து வருகிறது. அதனாலேயே இவ்வம்பிகை முத்து மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறார். இத்திருக்கோயிலில் ஞாயிறுதோறும் பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர். இரவில் பக்தர்கள் பலர் கோயிலிலேயே தங்கும் வழக்கமும் உண்டு. பக்தர்கள் பிரார்த்தனையின் பேரில் முடிகாணிக்கை, கோழி, ஆடுகள், மாடுகள் செலுத்தி மனநிம்மதி அடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கப் பெண்கள் பிரார்த்தனை செய்து திருமாங்கல்யத்தைக் காணிக்கையாக உண்டியலில் செலுத்துவது தொன்று தொட்டு வரும் பழக்கமாகும். மேலும், நோய்கள் நீங்க வேண்டி பிரார்த்தித்து உடல் உறுப்புகளை வெள்ளி மற்றும் தங்கத்தினால் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றும் வழக்கமும் இருந்துவருகிறது. அம்மை நோய் கண்டவர்கள் நோய் குணமடையும் வரை இங்கு தங்கி செல்வது மரபாக இருந்து வருகிறது. இவர்கள் தங்கியிருக்கத் தனி அம்மை மண்டபம் ஒன்றும் உள்ளது. அவர்கள் கோயிலில் நடைபெறும் நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு அபிஷேகப் பாலை வாங்கி அருந்தி வந்தால் அம்மை குணமாகிறது என்பது ஐதீகம். மேலும் இந்நோய்க்குக் கோயிலில் உள்ள உள்தொட்டி மற்றும் வெளித்தொட்டியில் நீர் நிரப்பினாலும் அம்மை நோய் குணமாகிறது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது. உஷ்ணத்தால் ஏற்படும் கட்டிகள், பருக்கள் நீங்க இத்திருக்கோயிலின் உள்ளே உள்ள வெல்லக் குளத்தில் வெல்லம் போட்டால் வெல்லம் கரைவது போன்று கட்டிகள், பருக்கள் போன்றவை கரைந்து விடுவது கண்கூடு.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

தெப்பக்குளம் : இக்குளத்தில் புரட்டாசி மாதம் தெப்ப உற்சவம் நடைபெறும்.
வெல்லக்குளம் : தல தீர்த்தம்

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

அருள்மிகு மாரியம்மன் : புற்றுமண்ணால் ஆன சுயம்பு

🛠️ வசதிகள் (Facilities)

சக்கர நாற்காலி : கோயில் கிழக்கு வாசல் முன் மண்டபம் அருகில் உள்ளது.
வாகன நிறுத்தம் : அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலின் தென்புறம் மற்றும் தாமரை ஏரியின் தென்புறத்திலும் வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. வாகனங்களுக்கான கட்டண விவரம் - இருசக்கர வாகனம்-ரூ.5/-, கார்-ரூ.10/-, வேன்-ரூ.20/-, மினி பஸ்-ரூ.30/-, பஸ்-ரூ.50/-
முடி காணிக்கை வசதி : அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலின் பின்புறம் கட்டணமில்லா முடிக்காணிக்கை செலுத்தும் இடம் உள்ளது
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : திருக்கோயில் நுழைவு வாயில் அருகில் இலவசக் காலணிகள் பாதுகாப்பு இடம் உள்ளது.
கழிவறை வசதி : திருக்கோயில் நுழைவு வாயிலின் வலபுறத்தில் இலவச கழிவறை வசதி உள்ளது.
குளியல் அறை வசதி : திருக்கோயிலின் நுழைவுவாயிலின் வலபுறத்தில் கட்டணமில்லா குளியல் அறை வசதி அமைந்துள்ளது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : அன்னதான கூடத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைந்துள்ளது.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : தினமும் நூறு நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் தொடங்கட்ட நாள். 23.03.2022. அன்னதானம் நன்கொடை செய்வோருக்கு 80ஜி வரிவிலக்கு உள்ளது(யு/எஸ் 80(ஜி) ஐ.டி. சட்டம் 1961-ன்படி 18ஜி/2020-21/எ/10336). அன்னதானம் நூறு நபர்களுக்கு உண்டான நன்கொடை தொகை ரூ.3,500/- மட்டும் (ஒரு நாள் செலவு) அன்னதான நன்கொடை இணையதளத்திலும் செலுத்தும் வசதி உள்ளது.
திருப்பணி : 12.08.2022 அன்று பாலாலயம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
Immovable Property : நஞ்சை, கட்டிடம், மனை
நன்கொடை : பொது நன்கொடை, அன்னதான நன்கொடை
ரசீது சேவை : உண்டியல் திறப்பு மூலம் வரவு, இ-பூஜை நன்கொடை
Temple Services : அர்ச்சனை, அன்னை தமிழ் அர்ச்சனை, இருசக்கர வாகனம், கார், வேன், மினி பஸ், பஸ், மற்றும் இதரம்.