⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
05:00 AM to 01:30 PM
04:00 PM to 08:15 PM
இத்திருக்கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 5.00 மணி முதல் இரவு 8.15 மணி வரை தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும்.
இதர நாட்களில் காலை 5.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும்.செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் திருவிழா நாட்களை தவிர ஏனைய நாட்களில் பிற்பகல் 1.30 மணி முதல் 4.00 மணி வரை நடைசாற்றப்படும்
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. உதய பூஜை : 07:00 AM IST
2. காலசந்தி பூஜை (திருநீர் காப்பு) : 09:00 AM to 09:20 AM IST
3. திருக்கால சந்தி பூஜை : 11:00 AM to 11:20 AM IST
4. உச்சிக்கால பூஜை : 01:00 PM to 01:15 PM IST
5. சாயரட்சை பூஜை : 05:00 PM to 05:15 PM IST
6. அர்த்தஜாம பூஜை : 08:00 PM to 08:15 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): மாரியம்மன்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): மாரியம்மன்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): மூவிலை வில்வம்
ஆகமம் (Tradition): காரண ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): விருதுநகர்
தாலுகா (Taluk): சாத்தூர்
தொலைபேசி (Phone): 7339464328
முகவரி (Address):
இருக்கன்குடி, 626202
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில், சாத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி - 626202 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு மாரியம்மன் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 16th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Sattur (3 km), Aruppukkotai (25 km), Virudhunagar (28 km), Rajapalayam (44 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காரண ஆகமம்
ஸ்தல விருட்சம் : மூவிலை வில்வம்
விமானம் வகை : இதர விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 16th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes
தல சிறப்பு (Thiruthala Special):
பிரார்த்தனை
தென் தமிழ் நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற பிரார்த்தனை தலமாகும். மூலவர் அம்மன் பூமியிலிருந்து தானாக வெளிப்பட்ட சிலாரூபம் .சிவயோக ஞான சித்தர் ஐக்கியமாகிய தலம். அம்மன் வலது கால் மடித்து உட்கடாசனத்தில் அருள்பாலிக்கும் தலம். அம்மன் சிவசொரூபியாக இருப்பதால் சிம்ம வாகனத்திற்கு பதிலாக இடபவாகனம் உள்ள தலம். மூவிலை வில்வம் அமைந்துள்ள தல விருட்சக்கோவிலை வழிபட குழந்தை பாக்கியம் அருளும் தலம். அம்மை நோய், கண்நோய்,வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும் தலம்.அர்ச்சுனா மற்றும் வைப்பாறு ஆகிய நதிகளுக்கு இடையே பூமாலை வடிவில் தனித்தீவாக அமைந்துள்ள தலம்
இதர வகை
இத்திருக்கோயில் பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. பக்தர்களால் ஆயிரம்கண்பானை எடுத்தல்,அக்கினி சட்டி எடுத்தல்,கயறுகுத்துதல்,களிமண்ணால் செய்யப்பட்ட உருவம் எடுத்தல்,கரும்புதொட்டில் எடுத்தல், மாவிளக்கு எடுத்தல் ஆகியவை நடைபெற்று வருகின்றன.முடிகாணிக்கை இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பாகும்
🛠️ வசதிகள் (Facilities)
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : திருக்கோயிலின் வடகிழக்கு மூலையில் இலவச காலணி பாதுகாப்பு அறை உள்ளது
பாலூட்டும் தாய்மார்கள் அறை : திருக்கோயிலுக்கும் வருகை தரும் தாய்மார்களது நலன் கருதி திருக்கோயில் உள்துறை அலுவலகத்திற்கு அருகில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைந்துள்ளது
முடி காணிக்கை வசதி : திருக்கோயிலின் தெற்கு பகுதியில் முடிகாணிக்கை மண்டபம் அமைந்துள்ளது.பக்தர்கள் கட்டணமின்றி முடிகாணிக்கை செலுத்தலாம்
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக மேற்கு வெளிப்பிரகாரத்தில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு மணி நேரத்திற்கு 1000 லிட்டர் வழங்கும் வகையிலும், திருக்கோயில் முன்புறமும் அன்னதானகூடத்திலும் 500 லிட்டர் கொள்ளவும், மடப்பள்ளி அறை பராசக்தி விடுதி ஸ்தல விருட்ச மண்டபம் ஆகிய இடங்களில் 100 லிட்டர் கொள்ளவும் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. உறைகிணறுகளிலிருந்து தண்ணீர் மேலேற்றும் வகையில் 1லட்சம் லிட்டர் கொள்ளவு மேல்நிலைத்தொட்டி பயன்பாட்டில் இருந்து வருகிறது.
வாகன நிறுத்தம் : திருக்கோயிலின் மேற்கு பகுதியில் உள்ள காலியிடத்தில் கட்டண இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.வாகன நிறுத்தும் இடத்தில் கட்டணமாக இரு சக்கர வாகனங்களக்கு ரூ.10/-ம் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.30/-ம் இதர கனரக வாகனங்களுக்கு ரூ.50/-ம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
மருத்துவமனை : திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 02.12.2022 அன்று காணொளி காட்சி வாயிலாக மருத்துவ மையம் துவங்கிவைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில்உள்ளது
சக்கர நாற்காலி : முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக 2 சக்கர நாற்காலிகள் திருக்கோயில் அலுவலகத்திற்கு முன்பாக உள்ளது. திருக்கோயில் பணியாளர்களான திரு.சு.தமிழ்வேல்முருகன் (9943239718) திரு.அ.சிங்காரவேலு (9443435126) ஆகியோரை மேற்படி பணிக்கு உதவி புரிய தொடர்பு கொள்ளலாம்.
காது குத்தும் இடம் : திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திகடனாக காதுகுத்து செய்ய திருக்கோயில் வெளிச்சுற்று பிரகாரத்தல் காது குத்தும் இடம் உள்ளது காது குத்து கட்டணம் ரூ.50/- .காது குத்து கட்டண சேவையை இணையவழியில் செலுத்தும் வசதியும் உள்ளது
நூலக வசதி : திருக்கோயில் நூலகம் 10நபர்கள் அமரும் வகையில் ரூ.3.88 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு நூல்களுடன் சிறப்பாக அமையப்பெற்றுள்ளது
பொருட்கள் பாதுகாக்கும் அறை : திருக்கோயிலின் வடகிழக்கு மூலையில் இலவச காலணிகள் மற்றும் பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளது
குளியல் அறை வசதி : திருக்கோயிலின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 250 நபர்கள் குளிக்கும் வகையில் இலவச குளியலறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கழிவறை வசதி : வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 84 நபர்கள் பயன்படுத்தும் வகையில் இலவச கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மாற்று திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக 2 கழிப்பறைகள் உள்ளன
தங்குமிட வசதி : திருக்கோயிலின் தென் கிழக்கு மூலையில் 24 அறைகள் கொண்ட பராசக்தி விடுதி அமைந்துள்ளது. நான்கு நபர்கள் தங்கும் வகையில் அமைந்துள்ள விடுதியின் அறை ஒன்றுக்கு ஒரு நாள் வாடகையாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது.மேற்படி விடுதிக்கான முன்பதிவுகள் தேவைப்படும் நாட்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்யப்படும்
🙏 சேவைகள் (Services)
பிரசாதம் சேவை : திருக்கோயிலுக்கு அஞ்சல் வழி பிரசாதம் அன்னதான நன்கொடையாளர் மற்றும் உபய அஞ்சல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கும் அனுப்பப்படுகிறது. மேலும் இணையவழி பிரசாதம் வேண்டி விண்ணப்பிக்கும் அன்பர்களுக்கு பிரசாதம் அனுப்பும் திட்டம் குறித்த அஞ்சல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது
Temple Services : திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி பொது தரிசனம் மற்றும் விரைவு தரிசனத்திற்கு ரூ.30/- ஆகிய இரண்டு வழிகள் உள்ளன. விரைவு கட்டண சேவைக்கு வரும் பக்தர்கள் பணம் செலுத்த ஏதுவாக இணையவழி பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
திருப்பணி : திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பொருட்டு ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. மேற்படி வரைவு திட்டத்தின்படி திருக்கோயில் நிதியிலிருந்து ரூ.50 கோடி மதிப்பீட்டில் பக்தர்களுக்கான கழிப்பறைகள் வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.
நன்கொடை : திருக்கோயிலுக்கு ரொக்கமாகவோ,பொருளாகவோ நன்கொடை செலுத்த விரும்பும் நபர்கள் திருக்கோயில் அலுவலக நேரத்தில் நேரிலும், ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலம் தொகை செலுத்த விரும்பும் அன்பர்கள் இத்துறை வலைதளம் மூலமாகவும் நன்கொடைகள் செலுத்தலாம். மேலும் ஆடு, கோழி, சேவல் போன்ற இனங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைத்து ரசீது பெற்றுகொள்ளலாம்
அன்னதானம் : உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.
ஆண்டு முழுவதும் இத்திருக்கோயிலிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் 350 நபர்களுக்கும் மற்ற தினங்களில் 250 நபர்களுக்கும் அன்னதானம் சாதம் சாம்பார், ரசம் மோர், பொரியல் கூட்டு ஊறுகாயுடன் சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுகின்றது. அன்னதானம் நடைபெறும் நேரம் பிற்பகல் 12.15 முதல் 01.15 வரை. அன்னதானக்கூடம் திருக்கோயில் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. 100 நபர்களுக்கு கட்டணமாக ரூ.3500/-ம் 250 நபர்களுக்கு ரூ.8750/-ம் 350 நபர்களுக்கு ரூ.12,250/-ம் செலுத்தி பக்தர்கள் அன்னதான திட்டத்தில் பங்கேற்கலாம்.
அன்னதான கட்டளைக்கு ரூ.50,000/- முதலீடு செய்து அதிலிருந்து பெறப்படும் வட்டியினைக் கொண்டு திருமண நாள்,பிறந்த நாள் மற்றும் தொழில் தொடங்கிய நாள் ,இவைகளின் ஏதேனும் ஒரு நன்னாளில் 200 நபர்களுக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதற்கு வருமானவரி விலக்கு 80ஜி உண்டு







