⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:00 AM to 10:30 AM
05:00 PM to 08:30 PM
இத் திருக்கோயிலில் காலை ஆறு மணி முதல் பத்து முப்பது மணி வரையிலும் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு முப்பது மணி வரையிலும் நடை திறந்து இருக்கும் திருவிழா காலங்களில் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. நித்ய அனுஷ்டானம் : 07:00 AM to 07:30 AM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): மாகாளியம்மன்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): அரச மரம்
ஆகமம் (Tradition): காமிக ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): சென்னை
தாலுகா (Taluk): அமைந்தகரை
முகவரி (Address):
4வது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை, 600040
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)
தமிழகத்தின் சென்னை மாவட்டத்தில், அமைந்தகரை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில், அண்ணாநகர், சென்னை - 600040 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 20th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Madras (Chennai) (8 km), Chingleput (49 km), Mahabalipuram (53 km), Arakkonam (55 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காமிக ஆகமம்
ஸ்தல விருட்சம் : அரச மரம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 20th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : No
தல சிறப்பு (Thiruthala Special):
வரலாற்று சிறப்பு
திருக்கோயில் அமைவிடம் புண்ணிய பூமியாம் நம் பாரத நாட்டின் தென் பகுதியான பெருமை மிகு தமிழகத்தின் தலை நகரமான சென்னை அண்ணா நகரில் வேண்டுவோருக்கு வேண்டுவதை வாரி வழங்கி பக்தர்களை ரட்சிக்க எழுந்தருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் அருள்மிகு கைலாசநாதர் பெருமாள் ஸ்படிக லிங்கம் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி அருள்மிகு நவகிரகம் ஆகிய பரிவாரங்களுடன் கூடிய அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில் தமிழ்நாடு சென்னை மாவட்டம் அண்ணா நகர் முள்ளம் கிராமம் நான்காவது பிரதான சாலை மனை எண் 3895 21 ஆர் பிளாக் அமைந்துள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அப்பகுதியை கையகப்படுத்தும் போது வீட்டு மனைகளாக பிரித்து ஒதுக்கீடு செய்து அண்ணா நகர் உருவாக்கும்போது மிகவும் பழமை வாய்ந்த பல நூறு வருடங்களுக்கு முன்பு உள்ள அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் மற்றும் சப்த கன்னிகை இருந்த இடம் மட்டும் திருக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்டது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட மனையில் அருள்மிகு மாகாளியம்மன் சங்க உறுப்பினர்கள் உபயதாரர்கள் மற்றும் பக்தர்களால் 25.04.1975 ல் அருள்மிகு மாகாளியம்மன் சன்னதியும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் சன்னதியும் அமைக்கப்பட்டு ஆகம விதிப்படி நூதன ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1977- ல் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி சன்னதி மற்றும் நவகிரக சன்னதி அமைக்கப்பட்டு ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் 14.09.1988 ல் இந்து சமய ஆட்சி துறையின் கீழ் உபயதாரர்கள் மூலம் புனராவர்தன ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன கும்பாபிஷேகமும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் அருள்மிகு மாகாளியம்மன் ஸ்ரீ சித்தி விநாயகர் உற்சவ விக்கிரகம் நூதன கும்பாபிஷேகம் நடைபெற்றது. 20.02.2003 - ல் உபயதாரர்கள் மூலம் கும்பாபிஷேகமும் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாத பெருமான் என்ற பெயரில் ஸ்படிக லிங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு நூதன கும்பாபிஷேகம் நடைபெற்றது. முள்ளம் கிராமமாக இருந்த காலத்தில் கிராம தேவதையாகவும் மற்றும் குலதெய்வமாகவும் அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மனையும் சப்த கன்னிகளையும் அப்பகுதி மக்கள் வழிபாடு செய்து வந்தனர்.மேலும் எல்லையம்மனாகவும் தங்களை காக்கும் தெய்வமாகவும் வழிபட்டு வந்தனர் எல்லையம்மன் என்பதால் அம்பாளுக்கு அதிக சக்தி உண்டு என்பது மக்கள் நம்பிக்கை.25.04.1675- ல் இத்திருக்கோயில் ஸ்தல விருட்சமாக அரசமரம் வளர்க்கப்பட்டது, இத்திருக்கோயிலில் தினசரி இரண்டு கால நித்திய பூஜையும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு கால பூஜையும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் பெருமானுக்கு சங்கடஹர சதுர்த்தி அன்று மாலையில் உபயதாரர்கள் மூலம் விசேஷ அபிஷேக ஆராதனையும் அருள்மிகு கைலாசநாத பெருமானுக்கு ஸ்படிக லிங்கம் மாதத்தில் இரண்டு பிரதோஷ தினத்தில் உபயதாரர்கள் மூலம் விசேஷ அபிஷேக ஆராதனையும் அருள்மிகு ஸ்ரீ மாகாளிஅம்மனுக்கு பௌர்ணமி அன்று உபயதாரர்கள் மூலம் காலை அபிஷேக ஆராதனையும் மாலை குங்கும அர்ச்சனை பூஜையும் நடைபெறும். அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு கிருத்திகை மற்றும் வளர்பிறை சஷ்டி அன்று உபயதாரர்கள் மூலம் விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெறும். முக்கிய திருவிழாக்கள் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருவீதி உலா உப்பலதரர்கள் மூலம் சிறப்பாக நடைபெறுகிறது . ஆடி மாதத்தில் கடைசி ஞாயிறு அன்று கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் அன்னதானமும் உபயதாரர்கள் மூலம் சிறப்பான முறையில் நடை பெற்று வருகிறது புரட்டாசியில் வரும் நவராத்திரியில் தினந்தோறும் நவகாலச பூஜை ஹோமம் விஷேச அபிஷேகம் லட்சார்ச்சனை சண்டி ஹோமம் ஆகியவை உபயதாரர்கள் மூலம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி அருள்மிகு கைலாச நாத பெருமானுக்கு ஸ்படிக லிங்கம் மாலையில் ஏகாதச ருத்ர பாராயணம் ருத்ர ஹோமம் ருத்ர அபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது . கார்த்திகை மாத சோம வாரங்களில் 108 சங்காபிஷேகம் உபயதாரர்கள் மூலம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐப்பசி மாதத்தில் வரும் மஹா கந்த சஷ்டியில் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு தினந்தோறும் ஏகாதச கலச பூஜை ஹோமம் விஷேச அபிஷேகம் லட்சர்ச்சனை திருக்கல்யாணம் ஆகியவை உபயதாரர்கள் மூலம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் 25.04.1975, 1977, 14.09.1988, 20.02.2003 மற்றும் 23.01.2013. திருக்கோயில் பூஜை நேரங்கள் காலை 6.00 மணி முதல் 10.30 மணி வரை மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை திருவிழா காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்கு உட்பட்டது
🛠️ வசதிகள் (Facilities)
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் சேவார்த்திகளுக்கு சுத்தமான குடி தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது
🙏 சேவைகள் (Services)
உழவாரப் பணிகள் : இத்திருக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறுக்கிழமை உழவாரப்பணி நடைபெறும்







