Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர்

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர் - 631102 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

08:00 AM to 12:00 PM
12:01 PM to 06:00 PM
திருக்கோயில் நடைதிறந்திருக்கும் நேரம் பெரியமலை மற்றும் சிறியமலை - காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை, ஊர்திருக்கோயில் காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. உச்சிக்கால பூஜை (நித்தியபடி) : 01:00 AM to 01:45 AM IST
2. பொங்கல் பூஜா (நித்தியபடி) : 03:30 AM to 04:10 AM IST
3. விஸ்வரூப பூஜை : 07:00 AM to 07:30 AM IST
4. காலசந்தி பூஜை (முதல் கால நித்யபடி பூஜை) : 07:30 AM to 08:30 AM IST
5. அரவணை (அரவணை) : 05:45 PM to 06:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): யோக நரசிம்மர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அமிர்தபலவல்லித்தாயார்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): பாரிஜாதம்

ஆகமம் (Tradition): வைகாணசம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): ராணிப்பேட்டை

தாலுகா (Taluk): சோளிங்கர்

தொலைபேசி (Phone): 04172-291903

முகவரி (Address):

சன்னதி தெரு, சோளிங்கர், 631102

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Lakshmi Narasimma Hotel

Lakshmi Narasimma Hotel

⭐ 3.9 (209 reviews)

📍 Shankar Nagar, Sholingur

🚀 1.8 km away
View
Hotel Saravanabhavan

Hotel Saravanabhavan

⭐ 3.9 (5 reviews)

📍 87, Post Office Street, Sholingur

🚀 3.2 km away
View
Venkateshwara Naidu Hotel

Venkateshwara Naidu Hotel

⭐ 2.8 (7 reviews)

📍 Siththur Main Road,Manjoor Kannigai, Eessar Petrol Bunk Near, Veeramangalam

🚀 4.4 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தில், சோளிங்கர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர் - 631102 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு யோக நரசிம்மர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 16th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், ராணிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Arcot (18 km), Arakkonam (32 km), Vellore (33 km), Kanchipuram (46 km)

🚌 பேருந்து வசதிகள் (சோளிங்கர் Bus Timings)

தடம் (Route) நேரம்
ARCOT ➔ SHOLINGHUR
Moffusil Bus (11R)
04:09
ARCOT ➔ SHOLINGHUR
Moffusil Bus (11R)
04:40
ARCOT ➔ SHOLINGHUR
Moffusil Bus (3)
04:50
ARCOT ➔ SHOLINGHUR
Moffusil Bus (3)
05:00
ARCOT ➔ SHOLINGHUR
Moffusil Bus (3)
05:15

* சோளிங்கர் வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : வைகாணசம்
பாடல் பெற்றது : வைணவ ஆழ்வார்கள்
புலவ அருளாளர் : திருமங்கையாழ்வார்
ஸ்தல விருட்சம் : பாரிஜாதம்
விமானம் வகை : ஹேமகோடி விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 16th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes
நிறுவனத்தின் பெயர் : சித்த மருத்துவமனைகள்

தல சிறப்பு (Thiruthala Special):

பரிகாரம்
1.இத்திருக்கோயில் 750 அடி உயரத்தில் உள்ளது 2.இத்திருத்தலத்தில் சப்தரிஷிகளுக்கு பெருமாள் பிரதிக்க்ஷம் செய்துள்ளது சிறப்பு 3.இம்மலை ஏக சிலா பர்வதம்(ஒரே கல்லால் ஆன மலை) 4.விசுவாமித்திரர் மகரிஷி இந்த மலையில் நரசிம்மரை தரிசித்து பிரம்ம மகரிஷி எனும் பட்டத்தை பெற்றுள்ளது சிறப்பு 5.கடி நாழிகை(24 நிமிடம்) இந்த மலையில் தங்கியிருந்தாலே மோட்சம் கிட்டும் 6. பில்லி சூனியம், ஏவல் போன்றவை இந்த நரசிம்மரை தரிசித்தாலே நீங்கி விடும் 7.,இத்திருத்தலத்தில் பக்தர்கள் 48 நாட்கள் தொடர்ந்து தக்கான் குளத்தில்(பிரம்ம தீர்த்தம்) நீராடி பெருமாளுக்கு சேவை செய்தால் பெருமாள் கனவில் காட்சி கொடுத்து குறைகளை தீர்த்து வைப்பதாக ஐதீகம். மேலும் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் இவ்வாறாக சேவை செய்வதன் மூலம் எவ்வித மருத்துவ சிகிச்சையும் இன்றி பூரண குணமடைந்து செல்வது இத்தலத்தின் சிறப்பு. 8. சந்திர சூரியன் நரசிம்மரின் திருவடிகளில் நித்யவாசம் செய்துள்ளது சிறப்பு 9.பேயாழ்வார், நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார்களால் பதிகம் பாடப்பெற்று மங்களாசாசனம் செய்துள்ளது இத்தலத்தின் சிறப்பாகும். 10.இத்திருத்தலத்தின் அமிர்தவல்லி தாயார் சொப்பனம் சாய்த்து பக்தர்களுக்கு அமிர்தமான பலன்களை அளித்து வருவது சிறப்பு. 11.பக்தர்களின் உசிதமான உற்சவராக பக்தோசித பெருமாள் ஊர் திருக்கோயிலில் எழுந்தருளி அருள்பாலித்து வருவது சிறப்பு. 12.இத்திருத்தலத்தில் அருள்மிகு நரசிம்மர் 11 மாதங்கள் யோக நிலையிலும் கார்த்திகை மாதத்தில் யோக நிலை களைந்து கண் திறந்து அருள்பாலிப்பதும் சிறப்பு. 13.இத்திருத்தலத்தில் மட்டுமே அருள்மிகு ஆஞ்சநேயர் யோக நிலையில் சங்கு சக்கரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பு 14.இத்தலத்தில் பெருமாள் தீர்த்தத்தினை முகத்தில் அதிவிரைந்து அடிப்பதன் மூலம் பக்தர்கள் அனைத்து நிலையிலும் இருள் விலகி புத்துணர்வு பெறுவார்கள் என்பது கண்கூடாக தெரியும் சிறப்பு. 15. இத்தலத்தில் சிறியமலையில் இராமர் அனுமனுக்காக எழுந்தருளியுள்ளார். இராமருக்காக இரங்கநாதர் எழுந்தருளி அருள்பாலிப்பது சிறப்பு. 16. இத்தலத்தில் மட்டுமே நரசிம்ம ஜெயந்தி வைகாசி மாதத்திலும் அனுமன் ஜெயந்தி கார்த்திகை மாதத்திலும் நடைபெறுவது சிறப்பு,

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

சிலா புஷ்கரணி : பெரியமலையின் பின்புறம் இக்குளம் அமைந்துள்ளது
ஸ்ரீனிவாச புஷ்கரணி : அருள்மிகு பக்தோசிதபெருமாள் திருக்கோயிலில் அமைந்துள்ளது ஸ்ரீனிவாச புஷ்கரணி
சக்கர தீர்த்த குளம் : சிறியமலை யோக ஆஞ்சநேயர் திருக்கோயிலில் சக்கரதீர்த்த குளம் அமைந்துள்ளது
நரசிம்மதீர்த்தம் : பெரியமலை அடிவாரத்தில் நரசிம்ம தீர்த்த குளம் அமைந்துள்ளது
பிரம்ம தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் என்கிற தக்கான் குளம் இத்திருக்கோயிலுக்கு வரும் சேவார்த்திகள் பெரும்பாலும் பிரம்ம தீர்த்தம் என்கின்ற தக்கான் குளத்தில் புனித நீராடி இரு மலைகளுக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்புனித தீர்த்தம் காசியிலுள்ள கங்கை கரை தீர்த்தத்தை விட மிகவும் புனிதமானதாக கருதுகின்றனர். இந்த தீர்த்தத்தில் மாசி மாதம் வரும் வியாழக்கிழமை தினம் நீராடுதல் மிகவும் தனிச்சிறப்பாகும்.

🛠️ வசதிகள் (Facilities)

கம்பிவடவூர்தி : கம்பிவட ஊர்தி காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இயக்கப்படும். நாள் 1-க்கு 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திருவிழா நாட்களில் கம்பிவட ஊர்தி காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இயக்கப்படும்.
வாகன நிறுத்தம் : பெரியமலை அடிவாரத்தில் வாகன நிறுத்துமிட வசதி செயல்பட்டு வருகிறது. கார் நிறுத்த ரூ. 10/- வேன், பஸ், நிறுத்த ரூ.20/- வசூலிக்கப்படுகிறது.
நூலக வசதி : சோளிங்கர், அருள்மிகு பக்தோசிதபெருமாள் திருக்கோயிலில் நூலகம் வசதிகள் உள்ளது. மேலும் 100ற்கு மேற்பட்ட ஆன்மீக புத்தகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் நூலகம் செயல்படுகிறது.
சக்கர நாற்காலி : முதியோர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்களின் பயன்பாட்டிற்காக உபயோகிக்கப்படுகிறது
கருணை இல்லம் : இத்திருக்கோயிலின் மூலம் மாணவர்களுக்கான கருணை இல்லம் 16.09.1998 முதல் நடத்தப்பட்டு வந்தது. தற்போது இதில் மாணவர்கள் எவரும் தங்கி பயிலவில்லை. மேலும் கருணை இல்லத்தில் 11 வயது முதல் 17 வயது முடிய தங்கி படிக்கலாம்.
மருத்துவமனை : பெரியமலை மற்றும் சிறியமலை அடிவாரம் ஆகிய இடங்களில் மருத்துவ முதலுதவி சிகிச்சை மையம் பக்தர்கள் பயன்பெறும் வகையில் நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது. மேலும் கட்டணமில்லா மருத்து சேவை மற்றும் மருந்துகள் இலவசமாக பெற்று பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.
டோலி : கட்டணத்துடன் கூடிய டோலி வசதி தனியார்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.காலை 6.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பயன்படுத்தலாம். மேலும் உடல் ஊனமுற்றோர் மற்றும் முதியோர்கள் பயன்படுத்தலாம். தற்போது திருக்கோயில் நிர்வாகத்தால் ரோப்கார் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது. இனி வரும் காலஙகளில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்
குளியல் அறை வசதி : பெரியமலை சிறியமலை ஊர்த்திருக்கோயில், வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் ஆண்கள்-18, பெண்கள்-18 ஆக மொத்தம் 36 கழிவறை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் தற்போது தற்காலிக கழிவறைகளும் ஆங்காங்கே செயல்பட்டு வருகிறது.மேற்படி கழிவறைகளுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.
முடி காணிக்கை வசதி : தக்கான்குளம் அருகில் முடி காணிக்கை செலுத்தும் மண்டபம் உள்ளது. தற்போது பக்தர்கள் கட்டணம் இல்லா முடிகாணிக்கை சேவையினை பெற்று வருகின்றனர்..
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயில் வளாகத்திற்குள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது. மேலும் தற்போது 100 படிக்கட்டுகளுக்கு ஒரு குடிநீர் வசதி செய்யப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : இத்திருக்கோயிலில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட அன்னதானத்திட்டம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. தினமும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு நிரந்தர உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்கள் ரூ60,000/- செலுத்தினால் அத்தொகையை வங்கியில் முதலீடு செய்து உபயதாரர் விரும்பும் நாளில் ஆண்டிற்கு ஒருநாள் அவர்கள் பெயரில் அன்னதானம் வழங்கப்படும். இத்திட்டத்தில் உபயதாரர்கள் உபயமாக நாளொன்றிற்கு ரூ.3,500/- செலுத்தி அன்னதானத்திட்டத்தில் கலந்து கொள்ளலாம். இத்திட்ட நன்கொடைகளுக்கு வருமான வரித்துறை ச.பி.80ஜி யின் படி வருமான வரிவிலக்கு பெறலாம். அன்னதானம் செய்ய விரும்பும் பக்தர்கள், வங்கி கணக்கு எண் : 11002360981, வங்கி பெயர் : பாரத மாநில வங்கி, கிளை : சோளிங்கர்.