⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:00 AM to 12:00 PM
04:00 PM to 08:00 PM
திருக்கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை ஆறு மணி முதல் பனிரெண்டு வரை
மாலை நான்கு மணி முதல் எட்டு வரை
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. உஷக்கால பூஜை (புஷ்பா அலங்காரம்) : 06:00 AM to 07:30 AM IST
2. காலசந்தி பூஜை (புஷ்பா அலங்காரம்) : 09:00 AM to 10:00 AM IST
3. உச்சிக்கால பூஜை (புஷ்பா அலங்காரம்) : 11:00 AM to 12:00 AM IST
4. மாலை பூஜை (புஷ்பா) : 05:30 PM to 06:00 PM IST
5. சாயரட்சை பூஜை (புஷ்பா அலங்காரம்) : 07:00 PM to 08:00 PM IST
6. அர்த்தஜாம பூஜை (புஷ்பா அலங்காரம்) : 08:00 PM to 08:30 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): கச்சபேஸ்வரர்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available
ஸ்தல விருட்சம் (Sacred Tree): முருக்கடி
ஆகமம் (Tradition): காமிக ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): காஞ்சிபுரம்
தாலுகா (Taluk): காஞ்சிபுரம்
தொலைபேசி (Phone): 044-27233384
முகவரி (Address):
நெல்லுக்கார தெரு, அன்னை இந்திரா காந்தி சாலை, காஞ்சிபுரம், 631501
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில், அன்னை இந்திரா காந்தி சாலை, காஞ்சிபுரம் - 631501 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு கச்சபேஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 17th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Kanchipuram (5 km), Arakkonam (27 km), Arcot (34 km), Chingleput (37 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
பாடல் / கவிதை : நீல மணி மிடற்றான்
ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : காமீக ஆகமம்
ஸ்தல விருட்சம் : முருக்கடி
விமானம் வகை : ஏகாதலை விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 17th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பல்லவர்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : நீல மணி மிடற்றான்
தல சிறப்பு (Thiruthala Special):
புராதனம்
பாற் கடலைக் கடையும் போது, மந்தாரா மலை மத்தாக பயன்படுத்தப்பட்டது அப்போது திருமால் ஆமை வடிவம் கொண்டு தேவர்களுக்கு அமுதம் கிடைக்க உதவினார் இதனால் செருக்குற்ற திருமால் உலகம் அஞ்சும்படி அக்கடலை கலக்கினார் . தேவர்கள் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தார். சிவன் ஆமையை அழித்து அதன் ஓட்டினை திருமேனியில் அணிந்தார் கட்சபம் என்றால் ஆமை ஆணவம் நீங்கிய விஷ்ணு சிவனை வழிபட்ட தளம் அதனால் சிவன், கச்சபேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
ஒரே வளாகத்தில் இரண்டு சிவாலயங்கள் உள்ளன. அருள்மிகு கச்சபேஸ்வரர் ஆலயம் மற்றும் அருள்மிகு இஷ்டசித்தீஸ்வரர் ஆலயம் ஆகும்.
திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள விஷ்ணு துர்கை அம்மன் சன்னதி பழமையும் பெருமையும் வாய்ந்த சிறப்புடையது.
ஆண்டுதோறும் சித்திரை உத்திர பெருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
இஷ்டசித்தி தீர்த்தம் : இஷ்டசித்தீசத்தின் அருகில் உள்ளது. இஷ்ட சித்தித் தீர்த்தமாகும். இத்தீர்த்தத்தில் நீராடி அருகில் உள்ள இஷ்டசித்தீசப் பெருமானை வணங்கி மிருதசஞ்சீவினி என்னும் இறந்தவரை எழுப்பும் மந்திரத்தைச் சுக்கிரன் பெற்றான். அதில் மூழ்கியவர்களுக்குச் சிவபெருமான் திருவருள் முழுமையாகக் கிடைப்பதுடன், அறம், பொருள், இன்பம் வீடு என்னும் உறுதிப்பயன்கள் நான்கும் கிடைப்பது உறுதி. எல்லா நாள்களிலும் நீராடுவதற்குரிய தீர்த்தம் இதுவானாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூழ்குவது பெரும்பயனைத் தரும். அதிலும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடுவது மேலும் பெரும்பயன் தருவதாகும். இத்தீர்த்தத்தில் கிரேதோயுகத்தில் பிரமன் சரசுவதியுடன் மூழ்கி, படைத்தல் தொழிலும், சத்தியலோக வாழ்வும் பெற்றான். திரதோயுகத்தில் சூரியன் மூழ்கி வேத உருவமான உடலையும் ஆயிரம் கதிர்களையும் பெற்றான். துவாபரயுகத்தில் திருமால் இலக்குமியுடன் மூழ்கி காத்தல் தொழிலும், வைகுந்த வாழ்வும் பெற்றார். கலியுகத்தில் இறைவியார் மூழ்கி, திருவேகம்பர் திருமேனியில் பாதியாகக் கலந்தார். குபேரன் மூழ்கி இழந்த கண்ணைப் பெற்றதுடன், இறைவனுக்குத் தோழனாகவும் ஆனன். துச்சுருமேனன் முழ்கி ஊர்வசியின் இன்பம் பெற்றான். சாம்பன் என்பவன் மூழ்கி குட்டநோய் தீர்ந்தான். நளனும், பாண்டவர்களும் மூழ்கித் தம் பகைவர்களை வென்று அரசாட்சியை அடைந்தார்கள். அத்தீர்த்தத்தின் வடக்கில் தர்மம் தீர்த்தமும் கிழக்கில் அர்த்த தீர்த்தமும், தெற்கில் காம தீர்த்தமும், மேற்கில் முக்தி தீர்த்தமும் உள்ளன. தானம் செய்தல் முதலியவற்றை அத்தீர்த்தத்தில் செய்தல்பலன்கள் பன்மடங்கு ஆகும்.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
சிவனுடன் ஆமை அவதாரத்தில் மகா விஷ்ணு : அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் வெளி பிரகாரத்தில் உள்ள நடராஜர் மண்டபத்தில் உள்ள தூணில் கச்சபேஸ்வர பெருமானை ஆமை வடிவில் மகாவிஷ்ணு பூஜை செய்வது போன்ற அற்புத காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பமானது இத்திருக்கோயிலின் வரலாற்றினை பறைசாற்றும் (வெளிப்படுத்தும்) விதமாக செதுக்கப்பட்டுள்ளது.
🛠️ வசதிகள் (Facilities)
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் வழங்க 2 இடங்களில் ஆர்.ஓ குடிநீர் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் காலணிகளை பாதுகாப்பாக வைக்கும்பொருட்டு 2 இரும்பு அலமாரி வசதி செய்யப்பட்டுள்ளது
சக்கர நாற்காலி : திருக்கோயிலுக்கு வரும் மாற்றுதிறனாளிகள் பயன்பெறும் வகையில் இரு சக்கர நாற்காலி திருக்கோயில் அலுவலகத்தில் பெற்று பயன்பெறலாம்
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : நாள்தோறும் ஐம்பது நபர்களுக்கு அன்னதானத் திட்டம் 14/01/2006 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அன்னதானத்திட்டத்தின்படி நாள் ஒன்றுக்கு ஐம்பது நபர்களுக்கு ரூ.1750/- மற்றும் நிரந்தர வைப்பு நிதி ரூ.35,000/- ஆகும். பிறந்தநாள், திருமணநாள் மற்றும் சேவார்த்திகள் விரும்பும் தேதிகளில் அன்னதானம் செய்யப்படும்.



