⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:00 AM to 01:30 PM
03:00 PM to 08:45 PM
திங்கள், புதன், வியாழன், சனி - காலை 6.00 மணி முதல் 1.30 மணி வரையும் பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 8.45 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.
சிறப்பு நாட்களான ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 5.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும்.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. உச்சிக்கால பூஜை (வெள்ளி கவசம்) : 01:00 AM to 01:15 AM IST
2. கோ பூஜை (வெள்ளிக்கவசம் & புடவை) : 05:00 AM to 05:15 AM IST
3. உஷக்கால பூஜை (வெள்ளிக்கவசம் & புடவை) : 05:00 AM to 05:15 AM IST
4. காலசந்தி பூஜை (வெள்ளிக்கவசம் ^^ புடவை) : 09:00 AM to 09:15 AM IST
5. சாயரட்சை பூஜை (வெள்ளிக்கவசம் ^^ புடவை) : 06:00 PM to 06:15 PM IST
6. அர்த்தஜாம பூஜை (வெள்ளிக்கவசம் & புடவை) : 09:00 PM to 09:15 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு காமாட்சி அம்மன்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு காமாட்சி அம்மன்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): மாமரம்
ஆகமம் (Tradition): தகவல் இல்லை
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): காஞ்சிபுரம்
தாலுகா (Taluk): குன்றத்தூர்
தொலைபேசி (Phone): 04426790053
முகவரி (Address):
காமாட்சி அம்மன் கோயில் தெரு, மாங்காடு, 600122
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு - 600122 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு காமாட்சி அம்மன் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 8th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Madras (Chennai) (19 km), Chingleput (38 km), Arakkonam (44 km), Kanchipuram (45 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஸ்தல விருட்சம் : மாமரம்
விமானம் வகை : அஷ்டாங்க வைமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 8th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பல்லவர்
ஸ்தல சிறப்பு வகை : அருளாளர்களின் அபிமான ஸ்தலம்
பாரம்பரிய கோயிலா : Yes
தல சிறப்பு (Thiruthala Special):
பரிகாரம்
திருத்தல வகை விளக்கம் - பிரார்த்தனைத் திருத்தலம் (ஆறு வார வேண்டுதல்)
மாங்காடு திருத்தலம் ஆறுவார வழிபாடுடைய பிரார்த்தனை தலமாகும். இத்திருத்தலத்திற்கு வேண்டுதலுடன் முதல் வாரம் இரண்டு எலுமிச்சை கனிகளுடன் அம்மனை வழிபட்டு திருக்கோயில் அர்ச்சகர் அம்மனிடம் வைத்து தரும் ஒரு எலுமிச்சம்பழத்தை வீட்டிற்கு எடுத்துச்செல்ல வேண்டும். அந்த எலுமிச்சம்பழம் காமாட்சி அம்மனாக எண்ணி வீட்டின் பூஜையில் வைத்து வழிபட்டு வரவேண்டும். அடுத்த வாரம் வரும்போது வீட்டில் வைத்து வழிபட்ட எலுமிச்சம்பழத்துடன் புதிய இரண்டு எலுமிச்சம்பழங்களை எடுத்துக்கொண்டு அம்மனை வழிபட வேண்டும். இதுபோல் ஆறுவாரங்கள் வந்து வழிபட்ட பின்னர் ஏழாவது வாரத்தில் பால் நைவேத்தியம் செய்து திருக்கோயிலுக்கு வருகை தந்துள்ள பக்தர்களுக்கு தர வேண்டும். பக்தர்களில் ஒருவராக அம்மன் வந்து அந்தப்பாலை வாங்கி பருகுவதாக ஐதீகம். இவ்வாறாக ஆறுவார வேண்டுதல் இத்திருக்கோயிலின் சிறப்பாகும். பக்தர்கள் வேண்டும் வேண்டுதல்கள் ஆறு வாரத்திற்குள் நிறைவேறுவதை தம் வாழ்வில் அனுபவ வாயிலாக கண்டுள்ளனர்.
ஸ்ரீஅர்த்தமேரு ஸ்ரீசக்கரம்
கேரள மாநிலம், காலடியில் தோன்றிய ஞானி ஸ்ரீஆதிசங்கரர் இத்திலத்திற்கு வருகை தந்து அன்னையின் ருத்ரம் தணியும் வண்ணம் சிவசக்தி இருப்பிடமான அபூர்வ அர்த்தமேரு எனும் 43 திரிகோணங்கள் கொண்ட ஸ்ரீ சக்கரத்தைப் பிரிதிஷ்டை செய்தருளிதனார். இந்த ஸ்ரீ சக்கரம் எட்டுவித மூலிகைகளால் ஆனதாகும்.
ஆதிசங்கரர் ஆற்றல்மிக்க அப்பிலத் துவாரத்தை மறைத்து, ஆதிகாமாட்சியின் அக்கினி ஆற்றல் அமுதமாக அதன் பிந்து ஸ்தானத்தில் அமர்த்த, வெம்மை நீங்கி தண்மை பொங்கியது. இதன் பொருட்டு இவ்வாலயத்தில் அர்த்தமேரு ஸ்ரீசக்கரமே மூலவராக இருப்பது சிறப்பாகும்.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் திருக்குளம் : 200 அடி நீளம் 200 அடி அகலம் அளவுள்ள 18 படிக்கட்டுகள் உள்ள திருக்குளம். தைப்பூசம் அன்று தெப்பம் விழா ஆரம்பித்து 3 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும்.
🛠️ வசதிகள் (Facilities)
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : திருக்கோயில் நுழைவு வாயில் அருகே இலவச பாதணிகள் ஸ்டாண்ட் உள்ளது
நூலக வசதி : திருவள்ளுவர் நூலகம் என்ற பெயரில் 17.01.2000 திருவள்ளுவர் பிறந்தநாள் அன்று மாண்புமிகு பண்பாட்டுத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் வெளிப்பிரகார மண்டபத்தில் உள்ள நூலக அறையில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயில் வடக்கு பிரகாரத்தில் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது
துலாபாரம் வசதி : வெளிப்பிரகார மண்டபத்தில் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு துலாபாரம் வசதி செய்யப்பட்டுள்ளது.
முடி காணிக்கை வசதி : திருக்கோயில் கிழக்கு நுழைவு வாயிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் வசதி உள்ளது
உடை மாற்றும் அறை : திருக்கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் பயன்படுத்த உடை மாற்றும் அறை கட்டணச்சீட்டுகள் விற்பனைக்கூடம் எதிரில் உள்ளது.
சக்கர நாற்காலி : இத்திருக்கோயிலுக்கு அம்மனை வழிபட வருகை தரும் பக்தர்கள் மற்றும் முதியோர்களுக்கு தேவையான இரண்டு சக்கர நாற்காலி 2 எண்ணிக்கைகள் கோவில் அலுவலக அறைக்கு அருகில், நல்ல நிலையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. .
திருக்குளம் : அன்னதானக்கூடம் அருகில் வட திசையில் 200 அடி (40000 சதுர அடி வெளி அளவில்), 145 அடி (21.025 சதுர அடி உள் அளவில்), கருங்கல் படிக்கட்டுகளின் எண்ணிக்கை 18, முதல் மற்றும் 9-ஆம் படிக்கட்டின் அளவு 5 அடி நீளம் 8 அங்குலம் உயரம், இதர படிக்கட்டுகளின் அளவு 1 அடி நீளம் 8 அங்குலம் உயரம். திருக்கோயில் திருக்குளத்தினை மராமத்து செய்து படிகள் அமைத்து புதுப்பித்து 13.12.2004 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இத்திருக்கோயிலில் முதன்முறையாக 2006 தைப்பூசத்தில் தெப்ப உற்சவ விழா மூன்று நாட்கள் வெகு விமரிசையாக சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து ஆண்டுதோறும் தைப்பூச தெப்பத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது
தங்கத் தேர் : இத்திருக்கோயிலில் தங்கத்தேர் 17 அடி 6 அங்குலம் உயரம் கொண்டது. மேலும் இத்திருக்கோயிலில் உள்ள தங்கரதம் அழகிய வேலைப்பாடுடன் கூடியது. தங்கத்தேரில் காணப்படும் சக்கரங்களில் தங்கமுலாம் வேயப்பட்டு உள்ளது. பார்ப்பதற்கு கண்கவரும் காட்சியாக உள்ளது. தினந்தோறும் மாலை 6 மணி அளவில் அருள்மிகு இலட்சுமி, அருள்மிகு காமாட்சி, அருள்மிகு சரஸ்வதி அம்மன் ஆகியோர் பக்தருக்கு அருள்புரிய தங்கத்தேர் உலா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் கடந்த 23.02.2002 ம் ஆண்டு அன்னதானம் துவங்கப்பட்டு இன்றளவும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. திங்கள், புதன், வியாழன், சனி ஆகிய நாட்களில் 100 நபர்களுக்கும் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 200 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. (100 நபர்களுக்கு ரூ.3500 /- மற்றும் அன்னதானம் நிரந்திர முதலீடு ரூ.50000/- செலுத்துவதன் மூலம் வரும் வட்டியைக்கொண்டு ஆண்டிற்கு ஒருநாள் அன்னதானம் செய்யப்படும்.). அன்னதானத்திற்கு உபயமாக பெறப்படும் தொகைக்கு இத்திருக்கோயிலில் இருந்து 80(ஜி) வரிவிலக்கு அளிக்கப்படும்



