Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், கரூர்

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், கரூர் - 639005 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 01:00 PM
04:00 PM to 08:00 PM
பிரதி சனிக்கிழமைகள் காலை 5.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 1.00 மணிக்கு வரை திறந்திருக்கும. மதியம் 4.00 மணி முதல் 8.00 மணி வரை திறந்திருக்கும. புரட்டாசி மாதம் சனிக்கிழமைகள் மற்றும் தேர்த் திருவிழா ஆகிய நாட்களில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. விஸ்வரூப பூஜை (பூ அலங்காரம்) : 06:00 AM to 06:30 AM IST
2. காலசந்தி பூஜை (மலர் அலங்காரம்) : 08:00 AM to 08:30 AM IST
3. திருமஞ்சன குடம் (புஷ்ப அலங்காரம்) : 11:00 AM to 12:02 PM IST
4. உச்சிக்கால பூஜை (தங்க கவசம்) : 11:00 AM to 12:30 PM IST
5. சாயரட்சை பூஜை (தங்க கவசம்) : 06:30 PM to 07:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): கல்யாண வெங்கடரமண சுவாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): வில்வம்

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): தூங்கானை வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): கரூர்

தாலுகா (Taluk): கரூர்

தொலைபேசி (Phone): 04324257531

முகவரி (Address):

தான்தோன்றிமலை, கரூர், 639005

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Aby Restaurant

Aby Restaurant

⭐ 3.1 (26 reviews)

📍 Anna Nagar, Jeeva Nagar, Siva Sakthi Nagar

🚀 0.6 km away
View
Foodfactory

Foodfactory

⭐ 5.0 (1 reviews)

📍 Kvb Main Branch, Jawahar Bazaar

🚀 2.6 km away
View
Hotel Shri Aryas

Hotel Shri Aryas

⭐ 3.7 (198 reviews)

📍 Jawahar Bazaar, Jawahar Bazaar

🚀 2.7 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில், கரூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், கரூர் - 639005 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 9th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Karur (3 km), Namakkal (33 km), Erode (57 km), Dharapuram (61 km)

🚌 பேருந்து வசதிகள் (கரூர் Bus Timings)

தடம் (Route) நேரம்
TRICHY ➔ KARUR
3 X 2 (923C)
00:00
PALLADAM ➔ KARUR
Moffusil Bus (-)
00:00
THANJAVUR NEW BS ➔ KARUR
Moffusil Bus (140C)
00:00
COIMBATORE ➔ KARUR
Moffusil Bus (909Q)
00:00
NAMAKKAL ➔ KARUR
Moffusil Bus (MDU)
00:00

* கரூர் வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் பெற்றது : பிற தமிழ் புலவர்கள்
ஸ்தல விருட்சம் : வில்வம்
விமானம் வகை : ஆனந்த விமானம்
கருவறை வடிவம் : தூங்கானை வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 9th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
குழந்தை வரம் வேண்டியும், நலம் வேண்டியும், துலா பாரம் கொடுக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் துலாபாரம் காணிக்கை செலுத்த கருடாழ்வார் சன்னதி முன்புறம் துலாபாரம் செலுத்தும் வசதி உள்ளது.
பிரார்த்தனை
இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் பிராத்தனைகளை ஏற்றுக் கொண்டு அருள்புரிகிறார். திருமணம் ஆகாதவர்கள் பெருமாளிடம் பிரார்த்தனை செய்து திருமணம் நடைபெற்றவுடன் திருக்கல்யாண உற்சவம் நடத்துவது வழக்கம். திருக்கல்யாண உற்சவம் நாள்தோறும் மாலை 4.00 மணி முதல் 5.30 மணிக்குள் நடைபெறும் (திருவிழா காலங்கள் தவிர
பிரார்த்தனை
மலைக் குன்றின் மேல் இருக்கும் கோயில் என்பதால் இங்கு பௌர்ணமி அன்று மலைவலம் வந்து இறைவனை வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும் செல்வமும் பெருகும்.
பிரார்த்தனை
பாதம் அடித்தல் என்பது இத்திருக்கோயிலின் ஒரு பரிகாரமுறை ஆகும். முதியவர்கள் தங்கள் கால் மற்றும் கைகளில் ஏற்படும் வலிகளுக்கு வேண்டுதல் வைத்து நிவர்த்தியானவுடன் இத்திருக்கோயிலின் கம்பத்தடியில் உள்ள பீடத்தில் பாதம் அடித்துக் கொள்ளும் முறை காலம்காலமாக நடைபெற்று வருகிறது.
பிரார்த்தனை
பொதுவாக வைணவ திருத்தலங்களில் நித்தியபடி அபிஷேகம் நடைபெறுவதில்லை. இத்திருத்தலத்தில் தினமும் காலை 11 மணி முதல் 12 மணி வரை மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறும். இதை தரிசித்தாலும் இதில் கலந்து கொண்டாலும் அனைத்து காரியங்கலும் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை. திருவோண நட்சத்திரத்தன்று இத்திருக்கோயிலில் புருஷசுத்தம் எனும் வேதமந்திரம் முழங்க பெருமாளுக்கு நெய்வேத்தியமமாக பாயசம் படைத்து பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் இந்த பாயசத்தை உண்டு வந்தால் குழந்தைப்போறு கிட்டும் என்பது நம்பிக்கை.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

தீர்த்தக்குளம் : இத்திருக்கோயிலில் அமைந்திருக்கும் தீர்த்தக்குளம் மிகவும் சிறப்புடையது. இதில் பக்தர்கள் வேண்டிக் கொண்டு தங்கள் உடலில் தோன்றும் மரு மறைவதற்கு உப்பு மற்றும் மிளகை இந்தத் திருக்குளத்தில் சேர்ப்பார்கள். குளத்தில் உப்பு கரைவது போல் தங்களுக்கு ஏற்பட்ட மரு, கட்டிகள் குணம் அடையும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

🛠️ வசதிகள் (Facilities)

காது குத்தும் இடம் : அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக காதுகுத்தும் வைபவம் கம்பத்தடி முன் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் ரூ.500/- கட்டணம் செலுத்தி காதுகுத்து வைபவத்தினை நடத்திக்கொள்ளலாம். இத்திருக்கோயிலில் பதிவு திருமணங்கள் திருக்கோயில் விண்ணப்பத்தினைப் பெற்று விதிமுறைகளின் படி பதிவு திருமணம் கம்பத்தடி முன் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. பதிவு திருமணத்திற்கு ரூ.2000/- கட்டணம் செலுத்தி திருமண வைபவத்தினை நடத்திக்கொள்ளலாம். மேலும் தகவலுக்கு .// ....
நூலக வசதி : அனைத்து வித சமயத்தைப் பற்றிய புத்தகங்கள் நூலகத்தில் உள்ளன. இங்கு பொதுமக்கள் வசதிக்காக காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையும் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலி : முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயில் சார்பில் கட்டணமில்லா மின்தூக்கி மற்றும் சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. வசதி அமைவிடம் - இத்திருக்கோயிலின் வடபுறம் சீட்டு விற்பனை அருகில், 2. மின் தூக்கி அருகில், 2 முன்புற படிக்கட்டு அருகில் 1, ஆக கூடுதல் 5 சக்கர நாற்காலிகள் உள்ளது
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலின் தெற்கு மண்டபம் , பொது தரிசன வரிசை மற்றும் ஆழ்வார் மண்டபம் ஆகிய இடங்களில் 200 லிட்டர்,250 லிட்டர் மற்றும் 200 லிட்டர் கொள்ளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைக்கப்பட்டுள்ளது
கழிவறை வசதி : இத்திருக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக கட்டணமில்லா கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், திருவிழாக்காலங்களில் கூடுதலாக கட்டணமில்லா தற்காலிக கழிப்பறை வசதிகள் இத்திருக்கோயில் மூலம் செய்யப்படும். முடிகாணிக்கை மண்டபத்தில் 12 குளியலறைகள் 12 கழிப்பறைகள் கட்டுவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது
சூரிய மின்சக்தி : இத்திருக்கோயிலில் 8 சூரிய மின்விளக்குப் பொருத்தப்பட்டுள்ளது

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள அன்னதானத் திட்டம் இவ்வாலயத்தில் 23.03.2002 முதல் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினந்தோறும் 100 நபர்களுக்கு மதியம் அன்னதானம் உணவு அளிக்கப்படுகிறது. அன்னதான திட்டத்தில் ( ) போக் சான்றிதழ் பெறப்பட்டு சுத்தமான உணவு தயாரிக்கப்படுகிறது, சுத்தரிக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் உள்ளது. இத்திருக்கோயிலில் பிரதி சனிக்கிழமை சுமார் 300 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பிறந்த நாள், திருமண நாள், முன்னோர்கள் நினைவு நாள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் விஷேச நாளன்று ஒரு நாள் அன்னதானம் வழங்க ரூ.3500 /- செலுத்தி பங்கு பெறலாம் அன்னதான திட்டத்தில் அன்னதான திட்ட நன்கொடை வைப்பு நிதியாக ரூ.35,000 /- செலுத்தினால் உபயதாரர்கள் குறிப்பிடும் நாளில் அன்னதானம் வழங்கப்படும்