⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:00 AM to 01:00 PM
03:00 PM to 09:00 PM
திங்கள் முதல் வியாழன் வரை காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 வரை, பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 9.00 வரை,
வெள்ளி முதல் ஞாயிறு வரை காலை 6.00மணி முதல் இரவு 9.00 மணி வரை
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. உஷக்கால பூஜை : 06:30 AM to 07:30 AM IST
2. திருமஞ்சன குடம் : 07:30 AM to 07:45 AM IST
3. காலசந்தி பூஜை : 08:00 AM to 09:00 AM IST
4. உச்சிக்கால பூஜை : 11:00 AM to 12:00 PM IST
5. கோ பூஜை : 11:00 AM to 11:30 AM IST
6. சாயரட்சை பூஜை : 05:00 PM to 06:00 PM IST
7. அர்த்தஜாம பூஜை : 08:30 PM to 09:00 PM IST
8. பள்ளியறை பூஜை : 08:45 PM to 09:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் சுவாமி
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): வெண்ணாவல்
ஆகமம் (Tradition): காமிக ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): தகவல் இல்லை
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): திருச்சிராப்பள்ளி
தாலுகா (Taluk): ஸ்ரீரங்கம்
தொலைபேசி (Phone): 04312230257
முகவரி (Address):
திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி, 620005
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், ஸ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருச்சிராப்பள்ளி - 620005 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 13th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருச்சிராப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Tiruchirappalli (6 km), Perambalur (49 km), Thanjavur (50 km), Pudukkottai (55 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
புலவ அருளாளர் : நரசிங்க முனையரைய நாயனார்
ஸ்தல விருட்சம் : வெண்ணாவல்
விமானம் வகை : கல்விமானம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 13th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes
தல சிறப்பு (Thiruthala Special):
வரலாற்று சிறப்பு
திருவானைக்காவலில் உள்ள ஜம்புவனத்தை சிவ வழிபாடு செய்ய ஏற்ற இடமாக தேர்ந்தெடுத்து அகிலாம்பிகை வழிபட்டதாக ஐதீகம். அம்பிகை தன் திருக்கரத்தால் காவிரி நீரை திரட்டி எடுத்து சிவலிங்கம் ஆக்கி தான் வழிபட்டு அதை மக்களுக்கு ஆராதித்து பயன்பெற உதவினார். அருள்நாயகி ஆரம்பித்த வழிபாடு இன்றும் தொடர்கிறது. உச்சிக்கால வழிபாடு நடத்த வரும் கோவில் அர்ச்சகர் அகிலாண்ட நாயகி கோவிலில் இருந்து அந்த அம்மனை போல் பெண் உருவேற்று கிரீடம் ருத்தராட்ச மாலையும் பூவும், நீரும், கையில் ஏந்தி கொட்டும் மேளத்தின் ஓசையுடன் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து சுவாமி கோயிலுக்குள் சென்று கோ-பூஜை வழிபாடு செய்து தன்னை அம்பிகை போல் பாவித்து சிறப்பு வழிபாடு செய்வது இத்திருக்கோயிலின் வழக்கம் ஆகும். மேற்படி கோ-பூஜை தினசரி நண்பகல் 11.30 மணி அளவில் சுவாமி சன்னதி முன்பாக இன்றும் நடைபெற்று வருவது இத்திருக்கோயிலின் சிறப்பாகும். அகிலாண்ட நாயகி ஆதியில் மிக உக்கிரமான சக்தியாக இருந்தாள். அதனால் கோயிலின் உள்ளே போகாமல் வாசலில் இருந்து தினசரி வழிபாடுகளை முடித்துச் சென்றனர். இச்செய்தி அறிந்து ஆதிசங்கரர் பகவத்பாதாச்சாரியார் மனம் வருந்தி இரண்டு ஸ்ரீசக்கரங்கள் தயார் செய்து அம்பிகையின் தெய்வீக சக்தி முழுவதையும் வந்து குடியிருக்கும்படி அருள் வழங்கினார். அவைகள் ஒவ்வொன்றும் அகிலாண்டநாயகியின் தோடுகளாகி அலாங்கரிக்கின்றன. அம்பிகையின் இரண்டு காதுகளிலும் ஒளிரும் ஸ்ரீ சக்கரங்கள் வேறு எந்த அம்பாள் சந்நிதியிலும் இல்லாத தெய்வீக புனித ஒளி வாய்ந்தவையளாகும். பஞ்சபூத தலங்கள் என்பவை நிலம், நீர்,நெருப்பு காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்குஉரியவையாகும், இத்திருக்கோயில் நீர் ஸ்தலமாக சிறப்பிக்கப்படுகிறது.
தல விருட்சம்
இத்திருக்கோயிலின் தலவிருட்சம் வெண்நாவல் மரமாகும்.
கட்டட சிறப்பு
அட்ட திக்கு அதாவது எட்டு திசைகளிலும் கொடி மரங்கள் பற்றிய சிறப்பு
எட்டு திசைகளுக்கும் அதி தெய்வங்கள் உண்டு. அவை யாவன
மேற்கு - வருணன்
வடமேற்கு- வாயு
வடக்கு- குபேரன்
வடகிழக்கு- ஈசானன்
கிழக்கு - இந்திரன்
தென்கிழக்கு - அக்னி
தெற்கு- எமன்
தென்மேற்கு- நிருதி.
இப்படி அட்டதிக்கு பாலகர்கள்
வழிபட்ட தலம் திருவானைக்கா.
எனவே தான் இந்த ஆலயத்தினுடைய மூன்றாவது பிரகாரத்தில் எட்டுத் திக்குக்களிலும் எட்டுக் கொடி மரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சிவனை வழிபட்டார் எண்ணிலித் தேவர் என்பதற்கு இத்திருத்தலமே சான்று.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
ஆடித்தீர்த்த தெப்பக்குளம் : இது நான்காம் திருச்சுற்றில் தென் மேற்கு மூலையில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு எதிரில் உள்ள தெப்பக்குளம் ஆகும். இதைச்சுற்றிலும் சுமார் நூறு கால்களைக் கொண்ட இரண்டடுக்கு வரிசை மண்டபம் உள்ளது. இதில் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தில் தெப்பத்திருவிழா நடைபெறும்.
இராமத்தீர்த்த தெப்பக்குளம் : இராமத்தீர்த்த தெப்பக்குளத்தில் தை மாதத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
உற்சவர் மண்டபம் : உற்சவ மூர்த்திகள் இருக்கும் மண்டபத்தின் கொடுங்கைகள் மரத்தால் செய்யப்பட்டது போலத் தோன்றுமாறு ஆவுடையார்கோயில் பாணியில் அமைந்துள்ளது சிறப்பாகும்.
நான்கு தூண்கள் : சுவாமி சன்னதியில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள நான்கு பெரிய தூண்களும் அவற்றிலுள்ள சிற்பங்களும் உச்சியில் தொங்கும் கற்சங்கிலிகளும் அழகு செய்கின்றன.
கூடற் சதுக்கம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
கூடற் சதுக்கம் என்று அறியப்படுகின்றது திருவானைக்கா. நான்கு திருத்தலங்களை உள்ளடக்கியது.
திருக்கயிலாயம், திருவானைக்கா, திருவாரூர் மற்றும் திருமயேந்திரம்.
கூடற் சதுக்கத்தை விளக்கும் பெரிய புராணப் பாடல் ஒன்று உண்டு. இந்த நான்கு திருத்தலங்களும் நம் சுவாமி சன்னதியின் கொடி மரத்தின் அருகாமையில் உள்ள நான்கு தூண்கள் விளக்கம் தருகின்றது. முதல் தூண் தெற்கு நோக்கியதாக திருவானைக்கா திருத்தலத்தையும், பக்கத்தில் உள்ள தூண் தெற்கு நோக்கியதாக திருவாரூர் திருத்தலத்தையும், அதற்கு எதிரில் உள்ள தூண் வடக்கு நோக்கியதாக திருமயேந்திரத்தையும், அதற்கு அருகாமையில் உள்ள தூண் வடக்கு நோக்கியதாக திருக்கயிலாயத்தையும் குறிப்பிடுகின்றது என்பதை கண்டு நாம் வணங்கி மகிழலாம்.
குறத்தி சிலை : மூன்றாம் திருச்சுற்றில் கீழ்புறம் உள்ள நாலுகால் மண்டபத்தில் நடமாடும் மங்கையர் குறிசொல்லும் குறத்தி போன்ற அழகான சிற்பங்களைத் தாங்கி உள்ளதைக் காணலாம்.
🛠️ வசதிகள் (Facilities)
சக்கர நாற்காலி : திருக்கோயில் மேற்கு நுழை வாயில் வரும் பக்தர்களுக்கு பயன்படும் வகையில் இரு சக்கர நாற்காலி ஏற்படுத்தப்பட்டடுள்ளது.
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களின் காலணிகளை பாதுகாக்க மேற்கு நுழைவு வாயிலில் இலவச மிதியடி காப்பகம் உள்ளது.
மின்கல ஊர்தி : இத்திருக்கோயிலில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு பேட்டரி கார் ஒன்று பயன்பாட்டில் உள்ளது. 2011 ம் வருடம் முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
மரத் தேர் : இத்திருக்கோயிலில் சுவாமி மற்றும் அம்மனுக்கு இரண்டு மரத்தேர்கள் உள்ளன. பங்குனி மாதத்தில் நடைபெறும் மண்டலபிரம்மோற்சவத்தில் ரேவதி நட்சத்திரத்தன்று நான்காம் பிரகாரத்தை சுற்றி வலம் வரும்.
தங்கத் தேர் : இத்திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் தங்கத்தேர் உலா நடத்தப்படுகிறது. தங்கத்தேர் உலா நடத்த அனுமதி கட்டணம் ரூ.16௦௦/- நிர்ணயம் செய்யப்படுகிறது. பக்தர்கள் பிறந்தநாள் , திருமண நாள் மற்றும் தாங்கள் விரும்பும் விஷேச நாட்களில் தங்கரதம் புறப்பாடு நடத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
கழிவறை வசதி : திருக்கோயிலுக்கு வரும் சேவார்த்திகளுக்கு திருக்கோயில் மேற்கு நுழைவு வாயிலில் ஆண்களுக்கு 6 கழிவறை மற்றும் பெண்களுக்கு 6 கழிவறை கட்டணமில்லாமல் இலவசமாக பயன்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலி : திருக்கோயில் மேற்கு நுழைவு வாயில் மற்றும் அம்மன் சன்னதி வடக்கு நுழைவு வாயில்
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு 1) அன்னதானம் மண்டபம் மற்றும் திருக்கோயில் நுழைவு வாயிலில் பகுதியில் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : திருக்கோயிலுக்கு வரும் சேவார்த்திகளுக்கு தினந்தோறும் பகல் 12-30 மணி அளவில் 100 நபர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது. பிரதி வாரம் வெள்ளிக்கிழமை வடை, பாயாசம் மற்றும் அப்பளத்துடன் கூடிய சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது ,அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.3,500/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதாத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.70,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி அன்னதான திட்டத்திற்கு 80 ஜி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு பெறப்பட்டுள்ளது.
Temple Services : நன்கொடை மற்றும் இதர சேவைகளுக்கான தொகையினை திருக்கோயில் தகவல் மையத்தில் மட்டுமே செலுத்த பக்தர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நன்கொடை : நன்கொடை மற்றும் இதர சேவைகளுக்கான தொகையினை திருக்கோயில் தகவல் மையத்தில் மட்டுமே செலுத்த பக்தர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.





