← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631502

Arulmigu Ekambaranathar Temple, Kancheepuram - 631502

மாவட்டம்: காஞ்சிபுரம் • தாலுகா: காஞ்சிபுரம்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 12:30 PM
04:00 PM to 08:30 PM
காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை சாற்றப்படும் மாலை 4.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு நடை சாற்றப்படும். திருவிழாக்காலங்களில் நேரம் மாறுதலுக்குட்பட்டது.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. கோ பூஜை : 06:00 AM to 06:15 AM IST
2. உஷக்கால பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்) : 06:30 AM to 07:30 AM IST
3. காலசந்தி பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்) : 07:30 AM to 08:30 AM IST
4. உச்சிக்கால பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்) : 11:30 AM to 12:30 PM IST
5. சிறுகால சந்தி பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்) : 04:00 PM to 05:30 PM IST
6. சாயரட்சை பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்) : 05:30 PM to 06:30 PM IST
7. அர்த்தஜாம பூஜை (அபிஷேகம் மற்றும் அலங்காரம்) : 08:30 PM to 09:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): ஏகாம்பரநாதர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): மாமரம்

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): காஞ்சிபுரம்

தாலுகா (Taluk): காஞ்சிபுரம்

தொலைபேசி (Phone): 96292-93020

முகவரி (Address):

ஏகாம்பரநாதர் சன்னதி தெரு, காஞ்சிபுரம், 631502

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631502 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு ஏகாம்பரநாதர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 6th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Kanchipuram (6 km), Arakkonam (26 km), Arcot (34 km), Chingleput (37 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
புலவ அருளாளர் : சுந்தரர்
ஸ்தல விருட்சம் : மாமரம்
விமானம் வகை : ஏக தள விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 6th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : ஏலவார் குழலாளூமை நங்கை யென்றும் ஏத்தி வழிபட பெற்ற கால காலனை கம்ப நெம்மனை காணக்கண் பெற்ற வாறெ

தல சிறப்பு (Thiruthala Special):

வரலாற்று சிறப்பு
சிவபெருமான் கயிலையில் வீற்றருந்தபோது உமாபரமேட்டியான பார்வதி அங்கே விளையாட்டாகச் சிவபெருமானின் திருக்கண்களைத் தம் இரு கரங்களால் மூடினார். அவ்வேளையில் எல்லா உலகங்களிலும் இருள் சூழ்ந்து கொண்டது. உடனே சிவபெருமான் தமது நெற்றிக் கண்ணை திறந்து இருளை அகற்றினார். பார்வதி தம் விளையாட்டு வினையானதை எண்ணி அறியாமல் செய்த பிழையை மன்னித்தருள சிவபெருமானை வேண்டினார். சிவபெருமான் பார்வதியின் வேண்டுகோளின்படி சைவ சித்தாந்தத்தின் சிறப்பை எடுத்துச் சொல்லி தம்மை ஆகமத்தின்படி பூசிப்பதுதான் சிறந்த வழி என்று எடுத்துரைத்தார். பார்வதி பரமசிவனை அர்ச்சிக்க விரும்பினார் அவர் கயிலாயத்தை விட்டு காஞ்சிக்கு வந்தார் கம்பையாற்றங்கரையில் மண்ணில் சிவலிங்கத்தை செய்து பூஜித்து வந்தார் அன்னைக்கு அருள்பாலிக்க எண்ணிய சிவபெருமான் காஞ்சியில் ஒரு மாமரத்தின் மூலத்திலி்ருந்து தோன்றினார் உமையம்மை தவநிலையிலேயே இருந்ததால் தவத்தை கலைக்க எண்ணிய சிவ பெருமான் கொட்டிச்சேதம் என்ற திருநடனத்தை நாடினார் அப்போது அவர் தம் கையில் உடுக்கையும் காலில் தண்டையும் ஒலித்தன. எனினும் பார்வதியோ தவத்தில் ஆழ்ந்திருந்தார் அதை கண்ட சிவ பெருமான் பார்வதியை பயமூட்ட எண்ணி சடையில் உள்ள கங்கையின் நீரை வெள்ளமாக பெருக்கெடுத்து வரும்படி செய்தார். பாய்ந்து வரும் வெள்ளம் கண்டு பார்வதி தன்னால் பூசிக்கப்படும் லிங்கம் தண்ணீரில் அடித்து செல்லாதவாறு சிவலிங்கத்தை கைகளால் அணைத்து கொண்டார் அப்போது சிவ பெருமான் மாமரத்தின் அடியில் பவளக்கம்பம் போல் தோன்றி அம்மைக்கு அருள் பாலித்தார். திருமால் தன் தங்கை காமாட்சியை சிவ பெருமானுக்கு திருமணம் செய்து கொடுத்தார், 10-ம் நாள் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கம்பா நதி திருக்குளத்தில் நடத்திக்காட்டப்படுவது ஐதீகம். இதனால் இத்திருக்கோயிலில் திருமணம் நடைபெற வேண்டி பிரார்த்தனை செய்துகொண்டவர்கள் சிவன் காமாட்சியம்மை திருக்கல்யான உற்சவத்தின் போது இத்திருக்கோயிலில் திருமணம் செய்துகொள்வது வழக்கத்தில் உள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள மாமரத்தின் அடியில் உள்ள சிவன் பார்வதி தேவியை வேண்டி பிரார்த்தனை செய்து குழந்தைபேறு பெற்றவர்கள் இம்மாமரத்தில் தொட்டில் கட்டுவது வழக்கமாக உள்ளது.
தல விருட்சம்
இத்திருக்கோயிலில் மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் பெயர்பெற்றது ஆம்பரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று வடமொழி விதிப் படி ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று. இது முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தல வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார் ஆகிய நாயன்மார்கள் ஆவர். இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன. இக்கச்சி ஏகம்பத்திற்கு மாத்திரம் திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமயக் குரவர்கள் நால்வரில் மூவரால் பாடல் பெற்றவை. காஞ்சிபுரத்தில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தந்தளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், இத்திருக்கோயில் கொடி மரத்தின் முன்பு அமைந்துள்ளது.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

சர்வதீர்த்த குளம் : இத்திருக்குளம் மிகவும் பிரசித்தி பெற்றத் திருக்குளமாகும். காசிவிசுவநாதர், ராமேசுவரர் முதலிய அநேக கோயில்கள் இதன்கரையில் அமைந்துள்ளன. அம்மையின் மன உறுதியை உலகம் அறியும் பொருட்டு இறைவனார் நதிகளை அழைத்தபோது, எல்லாத் தீர்த்தங்களும் திரண்டு, நதியுருவம் பூண்டு காஞ்சிக்குப் பிரவாகங்கொண்டு வந்தன. இப்பெரும் வெள்ளத்திற்கு அஞ்சிய அம்பிகை பெருமானைக் காக்கும் பொருட்டு தாம் அமைத்த மணல் லிங்கத்தை (திருவேகம்பத்துப் பெருமானை) ஆரத்தழுவி, கைளாற் பற்றிக் காத்தார். இதன் காரணமாகவே திருவேகம்பர் தழுவக் குழைந்தவராகி, அம்மையின் வளைத்தழும்பும், முலைச்சுவடும் திருமேனியில் ஏற்றார். அதன்பின்னர் அனைத்துத் தீர்த்தங்களும் இங்கியே தங்கி இறைவனை தீர்த்தேஸ்வரர் என்ற பெயரில் வழிபட்டன. இவ்வழிபாட்டை அனைத்துத் தீர்த்தங்களும் செய்தமையினால் இதுவே சர்வதீர்த்தம் எனப் பெயர் பெற்றது.
சிவகங்கை தீர்த்த குளம் : சிவகங்கை தீர்த்த குளம் இத்திருக்கோயிலின் 3-ம் பிரகாரத்தில் அழகுற அமைந்துள்ளது. பிரதி வருடம் தை மாதம் வரப்பெறும், ஆயில்யம் நட்சத்திரத்தில் மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
மங்களதீர்த்த குளம் : இத்திருக்குளம் திருக்கோயிலுக்கு வெளியே தேர்முட்டிக்கு அருகில் அமைந்துள்ளது. இக்குளக்கரையில் அருள்மிகு மங்களேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
கம்பாநதி குளம் : சிவபெருமான் கயிலையில் வீற்றருந்தபோது உமாபரமேட்டியான பார்வதி அங்கே விளையாட்டாகச் சிவபெருமானின் திருக்கண்களைத் தம் இரு கரங்களால் மூடினார். அவ்வேளையில் எல்லா உலகங்களிலும் இருள் சூழ்ந்து கொண்டது. உடனே சிவபெருமான் தமது நெற்றிக் கண்ணை திறந்து இருளை அகற்றினார். பார்வதி தம் விளையாட்டு வினையானதை எண்ணி அறியாமல் செய்த பிழையை மன்னித்தருள சிவபெருமானை வேண்டினார். சிவபெருமான் பார்வதியின் வேண்டுகோளின்படி சைவ சித்தாந்தத்தின் சிறப்பை எடுத்துச் சொல்லி தம்மை ஆகமத்தின்படி பூசிப்பதுதான் சிறந்த வழி என்று எடுத்துரைத்தார். பார்வதி பரமசிவனை அர்ச்சிக்க விரும்பினார் அவர் கயிலாயத்தை விட்டு காஞ்சிக்கு வந்தார் கம்பையாற்றங்கரையில் மண்ணில் சிவலிங்கத்தை செய்து பூஜித்து வந்தார் அன்னைக்கு அருள்பாலிக்க எண்ணிய சிவபெருமான் காஞ்சியில் ஒரு மாமரத்தின் மூலத்திலி்ருந்து தோன்றினார் உமையம்மை தவநிலையிலேயே இருந்ததால் தவத்தை கலைக்க எண்ணிய சிவ பெருமான் கொட்டிச்சேதம் என்ற திருநடனத்தை நாடினார் அப்போது அவர் தம் கையில் உடுக்கையும் காலில் தண்டையும் ஒலித்தன. எனினும் பார்வதியோ தவத்தில் ஆழ்ந்திருந்தார் அதை கண்ட சிவ பெருமான் பார்வதியை பயமூட்ட எண்ணி சடையில் உள்ள கங்கையின் நீரை வெள்ளமாக பெருக்கெடுத்து வரும்படி செய்தார். பாய்ந்து வரும் வெள்ளம் கண்டு பார்வதி தன்னால் பூசிக்கப்படும் லிங்கம் தண்ணீரில் அடித்து செல்லாதவாறு சிவலிங்கத்தை கைகளால் அணைத்து கொண்டார் அப்போது சிவ பெருமான் மாமரத்தின் அடியில் பவளக்கம்பம் போல் தோன்றி அம்மைக்கு அருள் பாலித்தார். திருமால் தன் தங்கை காமாட்சியை சிவ பெருமானுக்கு திருமணம் செய்து கொடுத்தார், மேற்படி நிகழ்வு இத்திருத்தலத்தில் பங்குனி பிரம்மற்சவ விழாவில் 10-ம் நாள் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கம்பா நதி திருக்குளத்தில் நடத்திக்காட்டப்படுவது ஐதீகம். இத்திருக்குளம் இத்திருக்கோயிலின் 4-ம் பிரகாரத்தில் தெற்கு இராஜகோபுரத்தின் இடப்புறமும் 1000-ம் கால் மண்டபத்தின் முன்புறமும் அமையப்பெற்றுள்ளது

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

சிவன் பார்வதி : இத்திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள முதல் தூணில் இறைவன் தியான நிலையில் அமர்ந்து இருக்க, அம்பிகை பக்கத்தில் நின்று இறைவனின் வலக்கண்ணைத் தன் இடக்கையால் மூடுகின்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் நந்தி முனிவர்களின் உருவங்கள் உள்ளன.

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக, இரண்டு எதிர்த்திசை சவ்வூடுபரவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்கென திருக்கோயிலின் உள்ளே செயல் அலுவலர் அலுவலகம் அருகில் எதிர்த்திசை சவ்வூடுபரவல் நீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
சக்கர நாற்காலி : மாற்று திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் உபயோகிப்பதற்கான திருக்கோயில் நிர்வாகம் சார்பில் 3 சக்கர நாற்காலிகள் பயன்பாட்டில் உள்ளன. இவை திருக்கோயில் கொடிமரம் அருகில் வைக்கப்பட்டுள்ளன.

🙏 சேவைகள் (Services)

நன்கொடை : அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் உணவு, விடுதி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது
அன்னதானம் : தினசரி நண்பகல் 12.00 மணியளவில்நடைபெறுகிறது. தினசரி திருக்கோயிலுக்கு வருகை தரும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.1750/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதானத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.35,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அன்னதானத்திற்கு நன்கொடை செலுத்த விரும்புவோர் ஆன்லைனிலும் செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அன்னதானத் திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 80(ஜி)-ன் கீழ் வருமான வரி விலக்கு உண்டு