⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
05:45 AM to 01:00 PM
01:00 PM to 08:00 PM
தைப்பூசம் பத்து நாட்கள், பங்குனி உத்திரம் பத்து நாட்கள், கந்தர் சஷ்டி பத்து நாட்கள், மாதாந்திர கார்த்திகை, மகா தீப கார்த்திகை, தைப்பொங்கல், தமிழ் மற்றும் ஆங்கில வருடபிறப்பு, மார்கழி மாதத்தின் அனைத்து தினங்களும் மற்றும் தீபாவளி தினம் ஆகிய தினங்களில் நடை அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்படும் பக்தர்களிகள் வருகை பொருத்து இரவு 9.00 மணிக்கு மேல் நடைதிருக்காபிடப்படும்
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. விளா பூஜை (சாது சந்நியாசி அலங்காரம்) : 06:40 AM to 07:15 AM IST
2. சிறுகால சந்தி பூஜை (வேடர் அலங்காரம்) : 08:00 AM to 08:30 AM IST
3. காலசந்தி பூஜை (பாலசுப்பிரமணியர் அலங்காரம்) : 09:00 AM to 09:30 AM IST
4. உச்சிக்கால பூஜை (வைதீகாள் அலங்காரம்) : 12:00 PM to 12:45 PM IST
5. சாயரட்சை பூஜை (ராஜஅலங்காரம்) : 05:30 PM to 06:15 PM IST
6. இராக்கால பூஜை (புஷ்ப அலங்காரம்) : 08:30 PM to 09:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available
ஸ்தல விருட்சம் (Sacred Tree): கடம்பம்
ஆகமம் (Tradition): தகவல் இல்லை
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): திண்டுக்கல்
தாலுகா (Taluk): பழனி
தொலைபேசி (Phone): 04545241293
முகவரி (Address):
North Giri Street, பழனி, 624601
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில், பழனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி - 624601 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 9th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Kodaikanal (25 km), Dharapuram (35 km), Bodinayakkanur (49 km), Dindigul (53 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஸ்தல விருட்சம் : கடம்பம்
விமானம் வகை : ஆனந்த விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 9th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes
நிறுவனத்தின் பெயர் : உயர்நிலைப் பள்ளிகள்
தல சிறப்பு (Thiruthala Special):
பிரசாதம்
இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு தரமான பஞ்சாமிர்தம் திருவமுது வழங்கும் பொருட்டு நவீன முறையில் தானியங்கி பஞ்சாமிர்தம் தயாரிப்பு இயந்திரங்கள் மூலம் சுகாதாரமான முறையில் வாழைப்பழம், நாட்டுச்சர்க்கரை, பேரீட்சை, கற்கண்டு, நெய், ஏலக்காய் மற்றும் தேன் ஆகிய மூலப் பொருட்களை கொண்டு பஞ்சாமிர்த திருவமுது தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
1/2 கிலோ லேமினேடட் டின் (சீல்டு) விலை - ரூ. 40/-
1/2 கிலோ பெட்ஜார் டின் விலை -ரூ. 35/-
தமிழ்நாட்டில் முதன்முதலாக திருக்கோயில் பிரசாதத்திற்கு புவிசார் குறியீடு பெற்ற பெருமை பழநி பஞ்சாமிர்த பிரசாதத்தையே சாறும்.
மேலும், முருகப்பெருமானை வழிபாடு செய்த பிறகு பக்தர்களுக்கு கட்டணமில்லா பஞ்சாமிர்த திருவமுது வழங்கப்படுகிறது
பிரார்த்தனை
பழனி மலையும், இடும்பன் மலையும் சிவகிரி, சத்திகிரி என கயிலாயத்திலிருந்ததாகவும் சிவபெருமான் அவைகளை அகத்திய முனிவருக்கு கொடுக்க அவைகளை பொதிகைக்கு கொண்டு போக நினைத்து அவர் இடும்பாசூரனுக்கு ஆணையிட அவைகளை கொண்டுபோகும் வழியில் களைப்படைந்து இப்போதிருக்கும் இடத்தில் இடும்பன் இறக்கி வைக்க அங்கு முருகன் கருணையினால் இவ்விடமே பொருந்தியதென்றும், இடும்பன் அதன் காரணம் நோக்கும்போது சிவகிரியின் மீது முருகன் கனிவாய் சிறுவனாக குரா மரத்தின் கீழ் தோன்றவும், அசுரக்கும், இளஞ்சேய்க்கும் போர் நிகழவும், அசுரன் உயிர் நீப்ப இடும்பியின் முறையீட்டால் உயிர் மீண்டும் பெறவும் அவன் பெற்ற இரு வரத்தால் ஆண்டவன் மலையில் இடும்பன் சன்னதி என்ற இடத்தில் வாயில் காவலனாக ஒரு இடம் பெற்றுத்தான் இரு மலைகளையும் எடுத்து வந்தது போன்று காவடியுடன் தமது பிரார்த்தனைகளை கொண்டு வரும் அடியார்கள் முருகன் அருள் பெற வேண்டுமென்ற பிரார்த்தனையும் கைவரப்பெற்றது என்பது பழனிப் புராணக் கூற்று.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
அருள்மிகு தண்டாயுதபாணி : பழனியிலுள்ள முருகனின் சிலை, போகர் என்ற முனிவரால் உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இந்த சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
🛠️ வசதிகள் (Facilities)
முதலுதவி மருத்துவ மையம் : முதலுதவி மருத்துவ மையம் வசதிகளின் எண்ணிக்கை - 3
வசதி அமைவிடங்கள்.-
1.மலைக்கோயில் மின் இழுவை மேல்நிலையம் அருகில்
2.மின் இழுவை கீழ் நிலையம்
3.படிப்பாதையில் (அருள்மிகு இடும்பன் திருக்கோயில் அருகில்)
4.அருள்மிகு பாதவிநாயகர் திருக்கோயில் அருகில்
வசதிகள் விவரம் - முதலுதவி மையம் இத்திருக்கோவிலில் 01.04.2022-ம் தேதியன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டு இன்றைய தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது. முதலுதவி மையம் கட்டணமில்லா சேவையாக அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு மருந்துகள் கட்டணமில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயன் பெறுகிறார்கள். (திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக முதலுதவி மையம் அதிகாலை நடை திறக்கப்பட்ட நேரம் முதல் இரவு நடை திருக்காப்பிடும் நேரம் வரை செயல்பட்டு வருகிறது).
அவசர ஊர்தி
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் அவசர மருத்துவ தேவைக்காக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கம்பி வட ஊர்தி நிலையத்தில் இருந்து மருத்துமனைக்கு அழைத்து செல்ல ஏதுவாக ஒரு அவசர ஊர்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மின்கல ஊர்தி : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்பாட்டிற்காகச் மலைக்கோயிலில் 6 இருக்கைகள் மற்றும் 8 இருக்கைகள் கொண்ட இரண்டு மின்கலமகிழுந்தும் , கிரிவீதி பக்தர்களின் பயன்பாட்டிற்கு 11 இருக்கை கொண்ட மின்கலமகிழுந்து 16 எண்ணிகையும்,14 இருக்கை கொண்ட மின்கல பேருந்து ஒன்றும் மற்றும் 23 இருக்கை கொண்ட மின்கல பேருந்து 19 எண்ணிக்கையும் கட்டணமில்லாமல் பக்தர்களுக்குப் பயன்படும் வகையில் இயங்குகிறது.
தங்கத் தேர் : தங்கரதம்:
தினந் தோறும் மாலை 7.00 மணியளவில் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். தங்கரத சுவாமி புறப்பாடு செய்ய வேண்டுதல் மற்றும் விரும்பமுள்ள பக்தர்கள் மலைக்கோயில் தங்கரத அலுவலகத்தில் ரூ.2000/- செலுத்திப்பதிவுச் செய்து கொண்டு சுவாமிபுறப்பாடு நடத்திக்கொள்ளலாம். அதுபோலத் தங்கமயில் வாகனப்புறப்பாடு செய்ய வேண்டுதல் மற்றும் விரும்பமுள்ள பக்தர்கள் மலைக்கோயில் தங்கரதஅலுவலகத்தில் ரூ.2000/- கட்டணம் செலுத்தி சுவாமி புறப்பாடு நடத்திக்கொள்ளலாம்.
தங்கரதம் மற்றும் தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு செய்வதற்கான ரூ.2000.00க்கான கட்டணச்சீட்டினைக் கொண்டு 3 நபர்கள் சுவாமி புறப்பாட்டின் போது கலந்துகொள்ளவும், 5 நபர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தனிவழி கட்டணச்சீட்டு வரிசையிலும் அனுமதிக்கப்படுவார்கள்.
வெளியூரில் இருந்து பதிவு செய்து கொள்ள விரும்புவோர் நிர்வாக அதிகாரி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி என்ற முகவரிக்குப் வங்கிவரை வோலையுடன் உரிய விவரத்தை அனுப்பிவைக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சூரசம்ஹாரம், நவராத்திரி (10 நாட்கள்) தீபக்கார்த்திகை, தைப்பூசம் (10 நாட்கள்), பங்குனிஉத்திரம் (10 நாட்கள்) ஆகிய நாட்களில் தங்கரதத்தில் சுவாமிபுறப்பாடு இல்லை.
கல்யாண மண்டபம் : கல்யாண மண்டபம்.-
வசதிகளின் எண்ணிக்கை 1
வசதி அமைவிடம் அருள்மிகு பட்டத்து விநாயகர் திருக்கோயில் வளாகம்
வசதிகள் விவரம்
இத்திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு பட்டத்து விநாயகர் திருக்கோயில் வளாகத்தில் திருமண மண்டபம் இயங்கி வருகிறது. ரூ.25,000/- கட்டணமாக செலுத்தி பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
பொது நிபந்தனைகள் :
1. இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே திருமண மண்டபத்தினை பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.
2. திருமண மண்டபத்தில் சைவ உணவுகள் சமைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
கோல்டன் பிரார்த்தனா தொட்டில் : ஒசூரைச் சேர்ந்த திரு.வை.வஜ்ரவேல் என்பவரால் 06.02.2011ஆம் நாளன்று இத்திருக்கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. இத்தங்கத்தொட்டில் அழகிய சிற்பவேலைப்பாடுகளுடனும், உறுதியான கட்டமைப்புடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றும் பெற்றோர்கள் 2 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளை இத்தங்கத் தொட்டிலில் இட்டு மகிழ்கின்றனர். தலா ஒரு குழந்தைக்கு ரூ.300/- காணிக்கையாகச் வசூலிக்கப்படுகிறது.
காது குத்தும் இடம் : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக காதுகுத்தும் இடம் மலைக்கோயில் மற்றும் திருஆவினன்குடி திருக்கோயில் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. நபர் ஒன்றுக்கு ரூ.50/- கட்டணம் செலுத்தி காதுகுத்து வைபவத்தினை நடத்திக்கொள்ளலாம்.
தகவல் மையம் : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் திருக்கோயில் தொடர்பான விவரங்கள், அருகில் உள்ள திருக்கோயில் விவரம், அருகில் உள்ள மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு செல்லும் வழித்தடம் மற்றும் அருகில் உள்ள சுற்றுலா இடங்கள் ஆகிய விவரங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு : 04545 241293
பொருட்கள் பாதுகாக்கும் அறை : பொருட்கள் பாதுகாப்பு வைப்பு அறை.-
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் உடைமைகள் மற்றும் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு ஏதுவாக திருக்கோயில் சார்பில் அடிவாரம் வடக்கு கிரிவீதியில் உள்ள தகவல் மைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது (அதிகாலை நடை திறக்கப்பட்டது முதல் இரவு நடை திருக்காப்பிடும் வரை செயல்படும்) இதற்கான கட்டணம் ரூ.5.00 வசூலிக்கப்படுகிறது.
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : கட்டணமில்லா காலணி பாதுகாப்பு மையம்.-
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது காலணிகளை பாதுகாப்பான முறையில் வைத்து செல்வதற்கு திருக்கோயில் சார்பில் நான்கு இடங்களில் கட்டணமில்லா காலணி பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
1.அருள்மிகு பாதவிநாயகர் திருக்கோயில் அருகில் 2 இடங்கள்
2.மின் இழுவை இரயில் நிலையம் அருகில்
3.கம்பிவட ஊர்தி நிலையம் அருகில்
வாகன நிறுத்தம் : கட்டணமில்லா சுற்றுலா பேருந்து நிறுத்துமிடம்
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக்கொள்ள திருக்கோயில் சார்பில் இரண்டு இடங்களில் பக்தர்கள் கட்டணமில்லா வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்,
1.கிழக்கு கிரிவீதி சுற்றுலா பேருந்து நிறுத்துமிடம்
திண்டுக்கல் பிரதான சாலை வழியாக வருகை தரும் பக்தர்கள் மற்றும் கொடைக்கானல் சாலை வழியாக வருகை தரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
2.மேற்கு கிரிவீதி கோசாலா பேருந்து நிறுத்துமிடம்
கோவை, பொள்ளச்சி, தாராபுரம் சாலை வழியாக வருகை தரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலி : மாற்றுத் திறனாளி பக்தர்கள் மற்றும் முதியோர்கள் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயில் சார்பில் சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. திருக்கோயிலின் முக்கிய இடங்களான மின்இழுவை இரயில் நிலையம், கம்பிவட ஊர்தி நிலையம், மலைக்கோயில், பாதவிநாயகர் திருக்கோயில், முதலுதவி சிகிச்சை மையங்கள் ஆகிய இடங்களில் கட்டணமில்லா சக்கர நாற்காலி வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
கழிவறை வசதி : கழிப்பறைகள் :
கட்டணமில்லாக் கழிப்பறை வசதி மலைக்கோயிலில் ஆண்களுக்கு 22, பெண்களுக்கு 23, மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்-1, பெண் - 1 எனத் தனித்தனியாக நிரந்தரக் கழிப்பறைகள் உள்ளன. மேலும், சின்னக்குமாரர் மண்டபத்தில் பொதுவானதாக 10 நிரந்தரக் கழிப்பறைகள் உள்ளன. இவை தவிர சிறுநீர் கழிப்பறை வசதி ஆண்களுக்கு 35, பெண்களுக்கு 22 எனத் தனித்தனியாக உள்ளது. யானைப்பாதை மற்றும் படிப்பாதையில் ஆண்களுக்கு 17, பெண்களுக்கு 18 எனத் தனித்தனியாக கழிப்பறை வசதிகளும் ஆண்களுக்கு 23, பெண்களுக்கு 7 எனத் தனித்தனியாக சிறுநீர் கழிப்பறைகளும் உள்ளன.
மேலும், மின் இழுவை இரயில் நிலையத்தில் ஆண்களுக்கு 3, பெண்களுக்கு 2, மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 1 நிரந்தர கழிப்பறை உள்ளது. ரோப்கார் நிலையத்தில் ஆண்களுக்கு 2, பெண்களுக்கு 4, மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 1 நிரந்தர கழிப்பறை உள்ளது. சிறுநீர் கழிப்பறை ஆண்களுக்கு 5ம் உள்ளன. கிரி வீதியில் கீழ்க்கண்ட இடங்களில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக நிரந்தரக் கழிப்பறைகள் உள்ளன.
1.கிழக்கு கிரிவீதி : சுற்றுலாப் பேருந்து நிலைய வளாகம்
(ஆண்கள் 8, பெண்கள் - 8)
2.கிழக்கு கிரிவீதி : அழகு நாச்சியம்மன் கோயில் எதிர்புறம்
(ஆண்கள் 8, பெண்கள் - 8)
3.மேற்கு கிரிவீதி : மின் இழுவை இரயில் நிலையம் எதிர்புறம் (ஆண்கள் 5, பெண்கள் - 5)
4.மேற்கு கிரிவீதி : கோசாலா பேருந்து நிலையம் (ஆண்கள் 15, பெண்கள் 15, மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைகள் ஆண்கள் மற்றும் பெண்கள் தலா 1)
5.வடக்கு கிரிவீதி : தலைமை அலுவலகம் அருகில்
(ஆண்கள் 5, பெண்கள் - 5)
6.தெற்கு கிரிவீதி : பம்ப்ஹவுஸ் எதிர்புறம் அருகில்
(ஆண்கள் 10, பெண்கள் 10, மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைகள் ஆண்கள் மற்றும் பெண்கள் தலா 1)
இது தவிர திருக்கோயிலின் சார்பில் திருவிழாக் காலங்களில் கூடுதலாக தற்காலிக கழிப்பறைகள் மூலம் ஆண்கள், பெண்களுக்குத் தனித் தனியாகத் கழிப்பிட வசதி செய்யப்பட்டு வருகிறது.
முடி காணிக்கை வசதி : கட்டணமில்லா முடி காணிக்கை வசதி
வசதிகளின் எண்ணிக்கை 5
வசதி அமைவிடம்
1.சரவணபொய்கை முடி மண்டபம்
2.கிரிவீதி ஒருங்கிணைந்த முடி மண்டபம்
3.வின்ச் கீழ் நிலையம் எதிரில் முடி மண்டபம்
4.தண்டபாணி நிலைய வளாக முடிமண்டபம்
5.சண்முகநதி முடி மண்டபம்
வசதிகள் விவரம்
1.சரவணபொய்கை முடி மண்டபம்
முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு 4 குளியலறை மற்றும் 2 உடைமாற்றும் அறை பாதுகாப்பன வசதிகளுடன் உள்ளது.
2.கிரிவீதி ஒருங்கிணைந்த முடி மண்டபம்
முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு தரைதளத்தில் 10 குளியலறை மற்றும் 6 கழிப்பறை உடைமாற்றும் அறை வசதியும் மற்றும் முதல் தளத்தில் 10 குளியலறை மற்றும் 4 கழிப்பறை உடைமாற்றும் அறையுடனும் வெந்நீர் வசதியுடனும் உள்ளது.
3.வின்ச் கீழ் நிலையம் எதிரில் முடி மண்டபம்
முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு 6 குளியலறை மற்றும் 11 கழிவறை 2 குளியல் தொட்டி உடைமாற்றும் அறை பாதுகாப்பன வசதிகளுடன் உள்ளது.
4.தண்டபாணி நிலைய வளாக முடிமண்டபம்
தங்கும் விடுதியில் தங்கியுள்ள பக்தர்கள் வசதிக்காக தண்டபாணி நிலைய வளாகத்திற்குள் முடிக்காணிக்கை மண்டபம் செயல்பட்டு வருகிறது.
5.சண்முகநதி முடி மண்டபம்
முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு 14 குளியலறை , 10 கழிப்பறை 20 சவர் முனைகள் 2 குளியல் தொட்டிகள் , வெந்நீர் வசதிகள் மற்றும் பாதுகாப்பாக உடைமாற்றும் அறைகள் ஆகிய வசதிகள் உள்ளன.
தங்குமிட வசதி : காவடி மண்டபம்
இத்திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் சார்பாக 11 இடங்களில் நிரந்தர காவடி மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காவடி மண்டபத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளாக குடிநீர், மின்சார வசதி, கழிப்பறை வசதி மற்றும் குளியலறை வசதி அமைத்து தரப்பட்டுள்ளது.
1.ஆயக்குடி(காவல் நிலையம் அருகில்),
2.சத்திரப்பட்டி(அருள்மிகு அடையாள் வேல் திருக்கோயில்)
3.ஒட்டன்சத்திரம் (ராம்கோ மண்டபம்) (அருள்மிகு குழந்தைவேலப்பர் திருக்கோயில்)
4.அருள்மிகு குழந்தைவேலப்பர் திருக்கோயில் திருமண மண்டபம் ஒட்டன்சத்திரம்
5.ரெட்டியார்சத்திரம் ( காவல் நிலைய அருகில்)
6.கன்னிவாடி (அருள்மிகு கோட்டை கருப்புச்சாமி திருக்கோயில் அருகில்)
7.தருமத்துப்பட்டி ( அருள்மிகு விநாயகர் திருக்கோயில் அருகில்)
8. கொங்கூர் ( தாரபுரம் பழநி தேசிய நெடுச்சாலை)
9.குமரலிங்கம்
10.கணவாய்ப்பட்டி ( அருள்மிகு கருப்புச்சாமி திருக்கோயில்)
11.ஊதியூர் ( பேருந்து நிறுத்தம் அருகில்)
கட்டணமில்லா தங்குமிடங்கள்.-
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயிலின் கிரிவீதியில் நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் கூடங்கள் மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
1.தெற்கு கிரிவீதியில் உள்ள பழைய தவில் மற்றும் நாதஸ்வர கல்லூரி வளாகம்
2.மேற்கு கிரிவீதியில் உள்ள சின்னகுமாரர் விடுதி வளாகம்
3.கிழக்கு கிரிவீதியில் உள்ள சுற்றுலா பேருந்து நிறுத்துமிடம்
தங்குமிட வசதி : தண்டபாணி நிலையத்தில் குளிர்சாதன அறைகள் - (இராஜ அலங்கார இல்லம் ஒன்று, குகன் இல்லம்- பத்து, வள்ளி இல்லம் - ஒன்று, தெய்வானை இல்லம் ஒன்று, கதிர்வேலகம்- நான்கு, கடம்பன் இல்லம்- நான்கு, கந்தன்இல்லம்பணிரெண்டு) மற்றும் இரண்டாம் வகுப்பு சாதாரண அறைகள் (கந்தன் இல்லம் இருபத்தி நான்கு, கார்த்திகேயன் விடுதி எழுபத்தி எட்டு மற்றும் கடம்பன் இல்லம்- எழுபத்தி எட்டு) அறைகள் உள்ளன.
2) இடும்பன் குடில்கள் :
வடக்கு கிரிவீதி தலைமை அலுவலகத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. இங்கு முப்பத்து மூன்று அறைகளும், ஒருமண்டபமும் அமைந்துள்ளன.
3) சின்னக்குமாரர் விடுதி :
மேற்கு கிரிவீதி மின் இழுவை இரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ளது. இங்கு குளிரூட்டப்பட்ட எட்டுஅறைகளும், சாதாரணமாக பதிமூன்று அறைகளும் அமைந்துள்ளன.
4) வேலவன் விடுதி :
மத்திய பேருந்து நிலையம் இரயில்வே பீடர் ரோடு அருகில் அமைந்துள்ளது. முதல் வகுப்பு நான்கு அறைகளும், இரண்டாம் வகுப்பு நாற்பத்தி எட்டு அறைகளும் அமைந்துள்ளன.
மேலும், பக்தர்கள் தங்குவதற்கு மேற்கு கிரிவீதி மற்றும் தெற்கு கிரிவீதியில் ஓய்வுமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் :
பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சுவாமி வழிபாடு செய்ய வருகை தரும் பக்தர்களுக்குக் கீழ்க்காணும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மலைக்கோயில், யானைப்பாதை, படிப்பாதை, மின்இழுவை ரயில்நிலையம், கம்பிவட ஊர்தி நிலையம், தண்டபாணி நிலையம் மற்றும் 40 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
கம்பிவடவூர்தி : பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக கம்பிவட ஊர்திசேவை 03.11.2004ஆம் தேதியன்று துவங்கப்பட்டுள்ளது. ஒரு மணிநேரத்திற்கு சுமார் 150 நபர்கள் ஒரு வழிமுறையில் பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கம்பிவட ஊர்தியின் கீழ் நிலையத்தில் இருந்து மேல் நிலையத்துக்கு பயணம் செய்யும் நேரம் சுமார் 3 நிமிடங்கள் ஆகும்.
கட்டண விவரம்
1.பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல நபர் ஒருவருக்கு ரூ.50/-
2.மலைக்கோயிலிலிருந்து அடிவாரம் வருவதற்கு நபர் ஒருவருக்கு ரூ.50/-
கம்பிவட ஊர்தி சேவை நேரம்
காலை7.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
மதியம் 2.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை
மின்இழுவை ரயில் : இத்திருக்கோயிலில் பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் சென்று சுவாமி வழிபாடு செய்வதற்கு வசதியாக 3 மின் இழுவை இரயில்கள் 8 நிமிடங்களில் மலைக்கோயிலைச் சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மின் இழுவை இரயில் மூலம் பயணம் செய்ய கட்டணம் விவரம்.-:
1. பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல நபர் ஒருவருக்கு ரூ.10/- மற்றும் ரூ.50/-
2. மலைக்கோயிலிலிருந்து அடிவாரம் வருவதற்கு நபர் ஒருவருக்கு ரூ.10/- மற்றும் ரூ.25/-
மின் இழுவை இரயில் சேவை நேரம்.-
சாதாரண நாட்கள் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
சிறப்பு நாட்கள் காலை 5.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை
பாலூட்டும் தாய்மார்கள் அறை : தாய்மார்கள் பாலூட்டும் அறை.-
திருக்கோயிலுக்கு வருகை தரும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு திருக்கோயிலின் மலைக்கோயில் இரண்டு இடங்களில், மின் இழுவை இரயில் கீழ் நிலையம், கம்பிவட ஊர்தி கீழ் நிலையம் மற்றும் மங்கம்மாள் மண்டபம் ஆகிய இடங்களில் தனியாக அறைகள் திருக்கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
வேத பாட நிறுவனங்கள் : வேதசிவ ஆகம பாடசாலை :
இப்பாடசாலை 1959ம் ஆண்டு தொடங்கப்பட்டு அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயில் அருகில் உள்ள கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இப்பாடசாலையில் 15 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் ஆலய பூஜை முறைகளும், தேவாரம், திருவாசகம், முதலியனவும், கற்பிக்கப்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், மருத்துவம் மற்றும் கல்விக்கான அனைத்து வசதிகளும் திருக்கோயிலிலிருந்து வழங்கப்படுகிறது. மேலும், அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.3000/- திருக்கோயில் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அர்ச்சகர் பயிற்சி பள்ளி :
இப்பள்ளி 16.08.2022ம் தேதி தொடங்கப்பட்டது. திருக்கோயிலின் தவில், நாதஸ்வர கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது. தற்போது 16 மாணவர்கள் பயிற்சி பெற்றுவருகின்றனர். இங்கு தங்கி பயிலும் மாணவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், மருத்துவம் ஆகிய வசதிகள் அனைத்து திருக்கோயிலிலிருந்து வழங்கப்படுகிறது. மேலும், அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.3000/- திருக்கோயில் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
கருணை இல்லம் : அன்பு இல்லம் :
1952ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுச் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. 5 வயதுமுதல் 16 வயது வரை உள்ளபெற்றோர் இல்லாத சிறுவர்கள், தாய் அல்லது தந்தை இல்லாத சிறுவர்கள் அன்பு இல்லத்தில் சேருவதற்கு விண்ணப்பம் செய்யலாம். அன்பு இல்லத்தில் அனுமதிக்கப்பட்ட இடம் 150 பேர் ஆவர். இவர்களுக்குத் தங்குமிடம் உணவு, சீருடை, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளை நிர்வாகம் வழங்கி வருகிறது.
சிறுமியர்கள் கருணை இல்லம் :
ஆதரவற்ற சிறுமியர்களுக் கெனத்தனியாகக் கருணை இல்லம் 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுச் சிறப்பான முறையில் இயங்கிவருகிறது. திருக்கோயில் பழையசத்திர வளாகத்தில் சிறுமியர்க்கருணை இல்லம் அமைந்துள்ளது.
பெற்றோர் இல்லாத மற்றும் தாய் அல்லது தந்தையர் இல்லாத 5 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுமியர்கள் கருணை இல்லத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவர்களுக்குத் தங்குமிடம் உணவு, சீருடை, கல்வி மற்றும் மருத்துவ செலவுகளைத் திருக்கோயில் நிர்வாகம் வழங்குகிறது.
சிறுமியர்கள் கருணை இல்லத்திலிருந்து பள்ளிக்குச் சென்றுவர திருக்கோயில்சார்பாகப் பேருந்துவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுமியர்களைப் பராமரிப்பதற்குப் பணிப்பெண்கள் உள்ளனர். சிறுமியர்க் கருணை இல்லத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்கள் 50பேர்.
துலாபாரம் வசதி : பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக தூலாபாரம் காணிக்கை செலுத்தும் வசதி மலைக்கோயிலில் மேற்கு பிரகாரத்தில் தீப ஸ்தம்பம் அருகில் தூலாபாரம் நிறுவப்பட்டுள்ளது. பக்தர்கள் தாங்கள் காணிக்கையாக செலுத்தும் பொருட்களை கொண்டு வந்து தூலாபாரம் செலுத்தலாம்.
🙏 சேவைகள் (Services)
தரிசனம் முன்பதிவு : ஆன்லைனில் புக்கிங் வசதி மூலம் பக்தர்களுக்காக சேவா டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.
திருக்கோயில் வாகன முன்பதிவு : வின்ச் ஆன்லைன் முன்பதிவு
பிரசாதம் சேவை : 1.பிரசாத பாக்கெட்டில் உள்ள பொருட்கள் பின்வருமாறு:-
அ) பஞ்சாமிர்தம் (லேமினேட்டட் டின்) - 500 கிராம்
ஆ) சுவாமி முருகன் படம் ராஜ அலங்காரம் (6 4) - 95 கிராம்
இ) விபூதி - 10 கிராம்
2. பிரசாதம் தபால் துறையின் ஸ்பீட் போஸ்ட் மூலம் விதிமுறைகளுக்கு ஏற்ப பக்தர்களுக்கு டெலிவரி செய்யப்படும்.
3. பிரசாதம் டெலிவரி தாமதமாக செய்யப்பட்டால் (வலைத்தளத்தில் பணம் செலுத்திய
தேதி அல்லாமல் தபால் துறையின் ஸ்பீட் போஸ்ட் புக்கிங் செய்த 10 நாட்களுக்கு மேல்)
பக்தர்களுக்கு தபால் துறையின் ஸ்பீட் போஸ்ட் விதிகளுக்கு உட்பட்டு தபால் கட்டணம்
திருப்பித் தரப்படும்.
4. பிரசாதம் சேதம் அடைத்திருந்தாலோ அல்லது பரிமாற்றத்தின் போது கண்டுபிடிக்க இயலாமல் போனாலோ தபால் துறையின் ஸ்பீட் போஸ்ட் விதிகளுக்கு உட்பட்டு தபால் கட்டணம் திருப்பித் தரப்படும்.
5. பின்வரும் காரணங்களால் திருப்பப்படும் பிரசாததிற்கு பணத்தைத் திரும்ப வழங்க இயலாது
1) முறையான தகவல் அளிக்காமல் இடம் பெயர்ந்து செல்லுதல்
2) முகவரியில் ஆள் இல்லாமல் போனால்
3) போதுமான முகவரி இல்லாது போனால்
4) பிரசாதம் வாங்க மறுத்துவிட்டால்
6. பக்தர்கள் சரியான அஞ்சல் முகவரியை பின்கோடு உடன் வலைதளத்தில் நிரப்புமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
7. பிரசாதம் பாக்கெட் , முதல் நாள் டெலிவரிக்கு வரும் போது அந்த முகவரியில் முகவரிதாரர் இல்லை என்றால் அறிவிப்பு வழங்கப்பட்டு அதே பாக்கெட் இரண்டாவது நாளில் டெலிவரிக்கு அனுப்பப்படும். இப்பாக்கெட் இரண்டாவது நாளில் டெலிவரி செய்யப்படாவிட்டால், தபால் நிலையத்தில் மேலும் (5) ஐந்து நாட்களுக்கு வைக்கப்படும் . பிறகு உரிமை கோரப்படாதவையாகக் கருதப்பட்டு அனுப்புநருக்குத் திரும்பும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பக்தர்கள் பணத்தைத் திரும்ப பெற முடியாது.
8. பக்தர்கள் பிரசாதம் பாக்கெட்டை அஞ்சல் துறை வலைத்தள முகவரி ... இல் கண்காணிக்க
முடியும்.
9. பிரசாதத்தின் உற்பத்தி தேதியை சரிபார்த்த பிறகு / காலாவதி தேதிக்குள் பஞ்சாமிர்த
பிரசாதத்தை உட்கொள்ளவும்.
10. தயவுசெய்து குளிர்ந்த மற்றும் வறண்ட இடத்தில் பஞ்சாமிர்த பிரசாதத்தை வைக்கவும்
11. ஒரு முறை செய்த ஆர்டர் எக்காரணத்திற்கும் ரத்து செய்யப்படமாட்டாது.
12. கேள்விகளுக்கு, 04545-242304 என்ற எண்ணை அழைக்கவும். (காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி
வரை, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர)
நன்கொடை : பக்தர்கள் தங்களது நன்கொடைகளை ஆன்லைன் மூலமாகவும் அல்லது வரைவோலை, காசோலைகளாக, நிர்வாக அதிகாரி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.
அன்னதானம் : நாள்முழுவதும் அன்னதானம் :
இத்திருக்கோயிலில் (மலைக்கோயில்) நாள்தோறும் காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை உணவுடன் கூடிய அன்னதானம் அளிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னதான உணவை பழனியாண்டவரின் திருவமுதாகக் கருதி உண்டு மகிழ்கிறார்கள். இதில் சராசரியாக சாதாரான நாட்களில் சுமார் 5,000 பக்தர்கள் உணவருந்தி பயன்பெறுகிறார்கள். விஷேச நாட்களில் சுமார் 6,000 பக்தர்கள் பயன் பெறுகிறார்கள். ரூ.3,500 செலுத்தி 100 நபர்களுக்கான அன்னதானத்திட்டத்தில் பங்கு கொள்ளலாம்.












