⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
05:00 AM to 02:00 PM
02:00 PM to 09:00 PM
அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலில் நடை மூடப்படாது.மார்கழி மாதத்தில் கோவில் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும். ஞாயிறு அன்று அதிகாலை 4.30 மணிக்கும் நடை திறக்கப்படும்.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. கோ பூஜை (சந்தனக்காப்பு) : 05:00 AM to 05:30 AM IST
2. காலசந்தி பூஜை (வெள்ளி கவசம்) : 08:00 AM to 08:30 AM IST
3. உச்சிக்கால பூஜை (வெள்ளி கவசம்) : 11:00 AM to 12:15 PM IST
4. சாயரட்சை பூஜை (சந்தன காப்பு) : 06:00 PM to 06:45 PM IST
5. அர்த்தஜாம பூஜை (சந்தன காப்பு) : 08:30 PM to 09:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): தேவி கருமாரியம்மன்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): வெள்வேல மரம்
ஆகமம் (Tradition): காமிக ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): திருவள்ளூர்
தாலுகா (Taluk): பூந்தமல்லி
தொலைபேசி (Phone): 044-26800487
முகவரி (Address):
சன்னதி தெரு, திருவேற்காடு, 600077
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில், பூந்தமல்லி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு தேவிகருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு - 600077 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 19th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Madras (Chennai) (17 km), Chingleput (43 km), Arakkonam (45 km), Kanchipuram (49 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : இல்லை
ஸ்தல விருட்சம் : வெள்வேல மரம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 19th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : இல்லை
பாரம்பரிய கோயிலா : No
தல சிறப்பு (Thiruthala Special):
இதர வகை
கோயிலின் சிறப்பம்சங்கள்திருத்தலச் சிறப்பு- இதர வகை
தலைப்பு விவரம்- சிறப்புகள்
சிறப்பு விளக்கம்- 1.அரவம் தீண்டி மரணம் நிகழா திருத்தலம் பாலி ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருவேற்காடு.
2.ஆதவனுக்கு அருளிய அன்னை வீற்றிருக்கும் திருத்தலம் திருவேற்காடு.
3.அம்மையப்பன் அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்சியளித்த திருத்தலம் திருவேற்காடு.
4.நாயன்மார்களுள் மூர்க்க நாயனார் அவதரித்த திருத்தலம் திருவேற்காடு.
5.கந்தவேல் கருமாரி அன்னையினைத் தொழுது, பணிந்து, அவரது திருக்கரத்தால் பெற்ற வேலால் உருவாக்கிய வேலாயுத தீர்த்தம் அமைந்துள்ள திருத்தலம் திருவேற்காடு.
6.திருநீற்றுப்பொய்கை அமைந்துள்ள திருத்தலம் திருவேற்காடு.
7.கருமாரி அகமகிழ்ந்திட, தங்கையுடன் மாலவன் அருள்மிகு திருமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் எழுந்தருளியுள்ள திருத்தலம் திருவேற்காடு.
8.நாகங்களுக்குப் பெருமை சேர்க்கும் நாகேஸ்வரியாக அன்னை கருமாரி உறையும் திருத்தலம் திருவேற்காடு.
9.நவக்கிரகங்களும், பாலிநதியில் நீராடி திருவேற்காட்டுக் கருமாரியைப் பணிந்து திருநீறு பெற்று மகிழ்ந்த திருத்தலம் திருவேற்காடு.
10.கேட்டவர்க்குக் கேட்டவரம் அளிக்கும் கருணை மாரியின் திருத்தலம் திருவேற்காடு.
11.பக்தர்களின் படையலைப் பரிவோடு ஏற்றுக்கொள்ளும் பராசக்தி உறையும் தலம் திருவேற்காடு
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
திருச்சாம்பல் பொய்கை : இந்த திருநீற்று பொய்கையில் ஞாயிற்றுக்கிழமை அன்று விடியற்காலையில் நீராடி திருநீறு அணிபவர்கள் சகல செல்வங்களும் பெறுவார். அத்துடன் கல்வி அறிவும் நிரம்பப்பெற்று உலகம் போற்ற வாழ்வர். ஆடி மாதத்தில் ஆதி வாரத்தில் நீராடுவோர் மக்கட்பேறு பெற்று மகிழ்வர்.அதே மாசியில் அமாவாசையில் நீராடி நீறு பூசிக்கொள்வோர் பகைவர்களை எளிதில் வென்று வெற்றி அடைவர். தை மாதத்தில் ஞாயிறுகள் நீராடுவோரின் வல்வினைகள் பொடிபொடியாகி புனிதமடைவர். அமாவாசையில் நீராடினால் பிணி நீங்கும். பில்லி, ஏவல் , போன்ற செய்வினைகள் ஒழியும் . முழுமதியில் நீராடுவோர் பல நதிகளில் நீராடிய பலன் பெற்றுப் பாவங்கள் நீங்கி சுகம் பெறுவார். தைமாதம் , ஆதிவரம், பூசம் கூடிய நன்னாளில் நீராடினால் பெறற்கரிய பேறுகளை பெறலாம். ஆடிப்பூரம் - நாவன்மை சிறக்கும். கலைகள் விளங்கும். சித்திரைத்திங்கள் பௌர்ணமி நாள் - பூரண ஞானம் புரட்டாசி , ஐப்பசி முழுமதி நாட்கள் - ஞானி ஆவர் .அணைத்து சித்திகளும் கைகூடும். நவராத்திரி- ஆதிசேடனை போன்ற கலைத்திறன் கைகூடும். என்று அன்னை கூறி அகிலத்திற்கு அருள் பாலித்தாள் .
🛠️ வசதிகள் (Facilities)
தங்குமிட வசதி : அருள்மிகு தேவி கருமரிஅம்மனை வழிபட வருகை தரும் பக்தர்ககளுக்கு பயன்படும் வகையில் திருக்கோயிலின் மூலம் கட்டப்பட்ட குளிர்சாதனம் பொருத்திய அறை குளிர்சாதனம் அல்லாத அறை , சேவர்த்திகள் தங்கும் விடுதி உள்ளது.
சிறு குடில்-5 அறைகள்
3-குளிரூட்டப்பட்ட அறை(ரூபாய் 750/-)
2-குளிரூட்டப்படாத அறை(ரூபாய் 600/-)
பக்தர்கல் தங்கும் விடுதி-14 அறைகள்
7- குளிரூட்டப்பட்ட அறை(ரூபாய் 1200/-)
6-குளிரூட்டப்படாத அறை(ரூபாய் 600/-)
1-சூட் அறை(ரூபாய் 1000/-)
விஐபி குடிசை-4 அறைகள்
4-குளிரூட்டப்பட்ட அறை(ரூபாய் 1200/-)
குளியல் அறை வசதி : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதியாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக குளியலறைகள் கட்டணமில்லாமல் பக்தர்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இவைகளை அவ்வப்போது சுத்தம் சுகாதார பணியாளர்கள் கொண்டு தூய்மை செய்யபட்டு சுகாதாரமான முறையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது..
கழிவறை வசதி : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதியாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 32 கழிவறைகள் கட்டணமில்லாமல் பக்தர்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இவைகள் அவ்வப்போது சுகாதார பணியாளர்களைக் கொண்டு தூய்மை செய்யபட்டு சுகாதாரமான முறையில் பக்தர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கல்யாண மண்டபம் : அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான தேவி கருமாரியம்மன் பெரிய மற்றும் சிறிய திருமண மண்டபம் தேரோடும் வீதியில் உள்ளது. திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் பயன்படுத்தும் விதத்தில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு அனைத்து வசதிகளுடன் நல்ல நிலையில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
சக்கர நாற்காலி : இத்திருக்கோயிலுக்கு அம்மனை வழிபட வருகை தரும் பக்தர்கள் மற்றும் முதியோர்களுக்கு தேவையான இரண்டு சக்கர நாற்காலி 3 எண்ணிக்கை தற்போது நல்ல நிலையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அறங்காவலர் அறைக்கு அருகில் உள்ளது.
நூலக வசதி : ஆன்மிக புத்தக நிலையம்
இந்து சமயத்தை சார்ந்த புனித நூல்களான தேவாரம் , திருவாசகம், பெரியபுராணம், கருடபுராணம், சமயநூல்கள் மற்றும் பல இலக்கண பழமைவாய்ந்த நூல்கள் பக்தர்களின் ஆன்மிக அறிவுத்திறனை தூண்டும் வகையில் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பெறும் வண்ணம் உள்ளது.
திருமணம் நடத்துதல் : அருள்மிகு தேவி கருமாரி அம்மனை காண வரும் பக்தர்கள் மற்றும் குலதெய்வமாக வணங்கிவரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலின் பொருட்டும் தங்களது குடும்பத்தில் நடக்கும் விசேஷ நிகழ்வான திருமண விழாவினை இத்திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடத்தி வருகிறாரகள்
மேலும் தங்களது குழந்தைகள் காதணி விழா போன்ற சுபநிகழ்ச்சிகளும் தொன்றுதொட்டு இத்திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் நடத்தி பயன்பெறுகிறார்கள்
மரத் தேர் : இத்திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும், ஆடி மாதம் 9ம் வாரம் ஞாயிற்றுக்கிழமையும், தை மாதம் பிரம்மோற்சவத்தின் 7ம் நாளும் திருத்தேர் வீதி உலா வருவது இத்திருத்தலத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.
வெள்ளித் தேர் : நாள்தோறும் இரவு 7.00 மணிக்கு அருள்மிகு தேவி கருமாரியம்மன் உற்சவர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் வெள்ளி ரதத்தில் பவனி வருவாள் .
பக்தர்கள் வெள்ளிரத பவனிக்காக திருக்கோயிலின் காணிக்கை பிரிவில் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி தங்களது பிரார்த்தனைகளை தங்கள் குடும்பத்துடன் ஒன்று கூடி நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
தங்கத் தேர் : நாள்தோறும் இரவு 7.00 மணிக்கு அருள்மிகு தேவி கருமாரியம்மன் உற்சவர் திருக்கோயிலின் முதல் பிரகாரத்தில் தங்க ரதத்தில் பவனி வருவாள் .
பக்தர்கள் தங்க ரத பவனிக்காக திருக்கோயிலின் காணிக்கை பிரிவில் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி தங்களது பிரார்த்தனைகளை தங்கள் குடும்பத்துடன் ஒன்று கூடி நிறைவேற்றிக்கொள்கிறார்கள்
முடி காணிக்கை வசதி : திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு அம்மனுக்கு நன்றி செலுத்தும் வகையில் தங்கள் தலைமுடியினை காணிக்கையாக செலுத்திவருகின்றனர். தலைமுடி செலுத்துதவற்கு கட்டணமில்லா சீட்டு , இத்திருக்கோயிலின் சீட்டு விற்பனை நிலையத்தில் வழங்கப்படுகிறது. தலைமுடிகாணிக்கை செலுத்தியபின் குளிப்பதற்கு வசதியாக முடிகாணிக்கை மண்டபத்தின் அருகில் கட்டணமில்லா குளியலறை பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.
வாகன நிறுத்தம் : இத்திருக்கோயிலில் அம்மனை காண வருகை தரும் பக்தர்கள் வரும் வாகனங்களை திருக்கோயிலுக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு அம்மனை காண செல்லலாம்.
வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணங்கள் திருக்கோயில் மூலமாக வசூலிக்கப்படுகிறது
நான்குசக்கர் வாகனம் 20 ரூபாய்
மூன்று சக்கர வாகனம் 15 ரூபாய்
இரண்டு சக்கர வாகனம் 5 ரூபாய்
மேலும், இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களின் வாகனங்களை பூஜை போடுவதற்கு ஏதுவாக திருக்கோயிலின் மூலம் வழிவகை செய்துதரப்பட்டுள்ளது.
இரண்டு சக்கர வாகன பூஜை ரூ.10 மூன்று சக்கரவாகன பூஜை 20 நான்கு சக்கர வாகனம் ரூ.50 மற்றும் வேன் மினி பஸ் போன்ற வாகனங்கள் ரூ.100 என பூஜை போடும் வசதி திருக்கோயில் மூலம் செய்தளிக்கப்பட்டு வருகிறது.
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : அருள்மிகு தேவி கருமரிஅம்மனை காண வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்திடும் விதத்தில் இலவச பாதணிகள் பாதுகாப்பகம் மற்றும் பொருட்கள் வைப்பறை ஆகிய இரண்டு அறையினையும் கடந்த 16.08 .2018 அன்று திறந்து வைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது .
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பயன்படும் வண்ணம் திருக்கோயில் வளாகத்தில் மூன்று இடங்களில் குடிநீர் இணைப்புகள் பொருத்தப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட நிலையில் தரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது .
சாண எரிவாயு : திருக்கோயிலின் பூஜை கழிவு பொருட்களான பூக்கள், கோசாலையிலிருந்து பெறப்படும் சாணக்கழிவுகள் ஆகியவற்றை கொண்டு பயோ கேஸ் தயாரிக்கப்பட்டு, திருக்கோயிலின் அன்னதான பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டத்தினை சட்டப்பேரவை அறிவிப்பின்படி மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துலாபாரம் வசதி : பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனுக்காக தாங்கள் வேண்டிக்கொண்டவாறு பொருளாகவோ அல்லது பணமாகவோ துலாபாரத்தில் ஒருபுறம் பக்தரும் அவரின் எடையை பூர்த்தி செய்யும் அளவிற்கு அவரவர் வேண்டிகொண்டவாறு காணிக்கை பொருட்களை அம்மனுக்கு செலுத்தி நேர்த்திக்கடனை பூர்த்தி செய்கின்றனர்.
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே பசித்தோர் முகம் பார் பரம்பொருள் அருள்கிட்டும் என்ற வாக்கிற்கேற்ப தானத்தில் சிறந்த அன்னதானத்திற்கென மாண்புமிகு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நன்கொடையாளர்கள் பங்கேற்புடன் கூடிய அன்னதானத் திட்டம் இத்திருக்கோயிலில் 23.03.2002- ம் தேதி முதல் துவங்கப்பட்டு சீரும் சிறப்புடன் அனைவராலும் பாராட்டப்படும் வண்ணம் நடைபெற்று வருகிறது .அன்னதானத்திற்கு பணம் செலுத்துவோருக்கு 80 வரிவிலக்கு இத்திருக்கோயிலிலிருந்து அளிக்கப்படும்
நன்கொடை : அருள்மிகு தேவி கருமாரியின் பெயரில் உள்ள காசோலை அல்லது இணையதளத்தின் பெயரைப் பயன்படுத்தி பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை கோயிலுக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள்.




