Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு இராமசாமி திருக்கோயில், கும்பகோணம் நகர், Kumbakonam

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு இராமசாமி திருக்கோயில், கும்பகோணம் நகர், Kumbakonam - 612001 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 11:30 AM
04:30 PM to 09:30 PM
தினமும் நடை திறப்பு உண்டு

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. விஸ்வரூப பூஜை (சாதாரண அலல்ங்காரம்) : 07:00 AM to 07:30 AM IST
2. காலசந்தி பூஜை (சாதாரண அலல்ங்காரம்) : 09:00 AM to 09:30 AM IST
3. உச்சிக்கால பூஜை (சாதாரண அலங்காரம்) : 12:00 PM to 12:30 PM IST
4. இராக்கால பூஜை (சாதாரண அலங்காரம்) : 07:00 PM to 07:30 PM IST
5. அர்த்தஜாம பூஜை (சாதாரண அலங்காரம்) : 08:30 PM to 09:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): ராமர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): சீதை


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): பாஞ்சராத்திரம்

கருவறை வடிவம் (Sanctum Shape): தகவல் இல்லை

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): தஞ்சாவூர்

தாலுகா (Taluk): கும்பகோணம்

தொலைபேசி (Phone): 04352400240

முகவரி (Address):

ராமசாமி சன்னதி தெரு, கும்பகோணம் நகர், Kumbakonam, 612001

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Hotel Shanmuga Bhavan

Hotel Shanmuga Bhavan

⭐ 3.6 (10 reviews)

📍 Kumbeswarar South Street, Madalampettai

🚀 0.2 km away
View
Aasai Seiva Unavagam

Aasai Seiva Unavagam

⭐ 4.4 (366 reviews)

📍 No 30, Pookadai Bazar Street, Near Kumbeshwarar Koil, Madalampettai

🚀 0.2 km away
View
Kumaraguru Bhavan

Kumaraguru Bhavan

⭐ 4.0 (2 reviews)

📍 Valayapettai Agraharam, Valayapettai Agraharam

🚀 0.3 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு இராமசாமி திருக்கோயில், கும்பகோணம் நகர், Kumbakonam - 612001 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு ராமர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 17th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Kumbakonam (4 km), Thanjavur (31 km), Mannargudi (35 km), Mayiladuthurai (39 km)

🚌 பேருந்து வசதிகள் (கும்பகோணம் Bus Timings)

தடம் (Route) நேரம்
COIMBATORE ➔ KUMBAKONAM
Moffusil Bus (TNSTC)
00:00
VILLUPURAM ➔ KUMBAKONAM
Moffusil Bus (181D)
00:00
THANJAVUR NEW BS ➔ KUMBAKONAM
Moffusil Bus (133B)
00:00
KUMBAKONAM ➔ PAPANASAM(KUMBAKONAM)
Private Bus (SENTHIL)
00:00
THANJAVUR NEW BS ➔ KUMBAKONAM
Moffusil Bus (LAKSHMI)
00:08

* கும்பகோணம் வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : பாஞ்சராத்திரம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 17th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

வரலாற்று சிறப்பு
இக்கோயிலில் உள்ள மூலவரின் சிறப்பு பட்டாபிசேக நிலையில் இராம பிரான் காட்சி தருவதேயாகும். இராமர், சீதாபிராட்டியார், லட்சுமணர், பரதன், சத்ருகனன்,ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைவருடைய சிற்பங்களை கருவறையில் காணமுடியும். இவர்களுடைய திருமேனிகள் அழகே உருவெடுத்தாற்போல விளங்குகின்றன. ஆஞ்சநேயர் வீணையுடனும், இராமாயண பாராயணத்துடனும் இருக்கும் நிலையில் அபூர்வமாகக் காட்சி தருகிறார். இராமச்சந்திர மூர்த்தியும் சீதைப்பிராட்டியும் ஒரே ஆசனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கின்றார்கள். பரதன் குடை பிடிக்க, சத்ருகன் சாமரம் வீச, இலக்குமணம் கோதண்டத்தை தாங்கிய வண்ணம் கரங்குவித்து இராமச்சந்திரமூர்த்தியின் ஆணையை எதிர்பார்ப்பதுபோல காட்சி தருகிறார்.லட்சுமணரே, ராமரின் வில்லையும் சேர்த்துப் பிடித்தபடி இருப்பது வேறு திருத்தலங்களில் காண முடியாத அரிய அமைப்பு இக்கோயில் ஒரு சிற்பக்கூடமாகத் திகழ்கின்றது. முன் மண்டபத்தில் உள்ள தூண்களில் நல்ல வேலைப்பாடுகள் உள்ள சிற்பங்கள் திருமாலின் பல அவதாரங்களைச் சித்தரிக்கும் நிலையில் உள்ளன. இந்த முன் மண்டபம் ஒரு சிற்பக் கலைக்கூடம் என்றால் அது மிகையாகாது. இம்மண்டபத்தின் ஒவ்வொரு தூண்களிலும் நாயக்க மன்னர்களின் சிற்பக் கலை மிளிர்கிறது. ஒவ்வொன்றும் வரலாற்றுக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களையும் ரதி மன்மதன் சிலைகளையும் இவற்றில் வடித்திருப்பது காண்போரை ஈர்க்கும் வகையில் உள்ளன. இக்கோயிலின் உள் பிரகாரத்தில் இராமாயணம் முழுவதும் மூன்று வரிசைகளில் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இந்த சித்திர இராமாயணம் நாயக்கர் கால ஓவியக்கலைக்கு ஒரு சான்றாகும். இப்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தால் இராமாயணம் முழுவதையும் சித்திரத்தில் கண்டு களிக்கலாம். ஒவ்வொரு முறை வலம் வரும்போது ஒவ்வொரு வரிசை என்ற நிலையில் சித்திர இராமாயணம் முழுவதையும் பார்த்து, படித்து அறிந்துகொள்ளலாம். கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

முன் மண்டபம் சிற்பம் : இக்கோயில் ஒரு சிற்பக்கூடமாகத் திகழ்கின்றது. முன் மண்டபத்தில் உள்ள தூண்களில் நல்ல வேலைப்பாடுகள் உள்ள சிற்பங்கள் திருமாலின் பல அவதாரங்களைச் சித்தரிக்கும் நிலையில் உள்ளன. இந்த முன் மண்டபம் ஒரு சிற்பக் கலைக்கூடம் என்றால் அது மிகையாகாது. இம்மண்டபத்தின் ஒவ்வொரு தூண்களிலும் நாயக்க மன்னர்களின் சிற்பக் கலை மிளிர்கிறது. ஒவ்வொன்றும் வரலாற்றுக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களையும் ரதி மன்மதன் சிலைகளையும் இவற்றில் வடித்திருப்பது காண்போரை ஈர்க்கும் வகையில் உள்ளன.

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது

🙏 சேவைகள் (Services)

நன்கொடை : பொது நன்கொடை, இராமநவமி நன்கொடை,