Timings
Deity
Address
History
Location
Images

Arulmigu Kumaraswamy Temple, Velimalai, குமாரகோயில்

பிற கோவில்களைப் பார்க்க:

Arulmigu Kumaraswamy Temple, Velimalai, குமாரகோயில் - 629175 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

05:00 AM to 12:30 PM
05:00 PM to 08:30 PM
சித்திரை விசு கனி காணுதல் வைகாசி திருவிழா 10 நாட்கள் ஆடி அமாவாசை (இம்மாதம் அனுஷ நட்சத்திரத்தில் கோயிலில் நிறை செய்வார்கள் கோயிலில் இருந்து நெல் கதிர்களை கொண்டு சென்று வீட்டில் வைப்பார்) ஆவணி கடைசி வெள்ளிமலர் முழுக்க விழா, மாலை 7 மணி முதல் இரவு 10:00 மணி வரை அலங்கார தீபாராதனை. புரட்டாசி நவராத்திரி பூஜையை முன்னிட்டு மகம் நட்சத்திரத்தன்று காலை 5:30 மணிக்கு சுவாமி புறப்பட்டு பத்மநாபபுரம் சென்று அங்கிருந்து பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், திருவனந்தபுரம் ஆரியசாலை மண்டபத்தில் எழுந்தருளல். ஐப்பசி சூர ஸம்ஹர விழா.கார்த்திகை,திருக்கார்த்திகை ,சொக்கப்பனை எரிக்கப்படுதல்.கடைசி வெள்ளிக்கிழமையன்று பல வித காவடிகள் வரும். மார்கழி சுசீந்திரம் கோயில் தேரோட்ட விழாவினை காண முருகன் புறப்படுதல். தைப்பூச திருவிழா,திருக்கல்யாண கால்நாட்டு விழா.பங்குனி அனுஷம் நாளில் இரவு திருக்கல்யாணம் நடைபெறும். வைகாசி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். 9ஆம் நாள் தேரோட்டம். இந்த திருவிழாவில் சுவாமி வேட்டைக்கு செல்லுதல்,நவதானியங்கள் நடுவில் இருத்தல் சிறப்பான நிகழ்வு பத்தாம் நாள் ஆறாட்டு. பங்குனி திருக்கல்யாண விழா.வள்ளிக்கும்,முருகனுக்கும் நடந்த திருமணம் இவ்விழாவில் நடத்தி கட்டப்படும். இக்கோவிலிருந்து 2கீ மீ தொலைவில் உள்ள வள்ளி குகை அருகே பாறையில் விநாயகர்,வள்ளி, வேலவர் புடைப்பு சிற்பங்கள் உள்ளன. திருக்கல்யாணத்தில் பக்தர்கள் இச்சுனையில் நீராடுவார்கள்.திருக்கல்யாணம் அன்று காலை முருகன் பல்லக்கில் எழுந்தருளி வள்ளி குகை அருகே செல்வர். அன்று கஞ்சி தர்மம் நடக்கும். பிற்பகல் மணிக்கு முருகன் வள்ளியை பல்லக்கில் அழைத்து வரும் போது குறவர்கள் தடுப்பார்கள். குறவர்கள் தோல்வி சரண் அடைவார்கள். இந்த குறவர்கள் மலைப்பகுதியில் முருகன் கோயில் பின்புறம் வாழ்பவர்கள்.இரவு மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். தேன்,தினைமாவு பிரசாதமாக வழங்கப்படும்.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. நிர்மாலய பூஜை : 04:30 AM to 05:00 AM IST
2. உஷக்கால பூஜை (உஷ பூஜை) : 05:30 AM to 06:00 AM IST
3. உச்சிக்கால பூஜை : 11:30 AM to 12:30 PM IST
4. சாயரட்சை பூஜை : 06:30 PM to 07:30 PM IST
5. அர்த்தஜாம பூஜை : 08:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): குமாரசுவாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): கன்னியாகுமரி

தாலுகா (Taluk): கல்குளம்

தொலைபேசி (Phone): 04652241270

முகவரி (Address):

Velimalai, குமாரகோயில், 629175

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Udupi International Restaurant

Udupi International Restaurant

⭐ 3.7 (3324 reviews)

📍 Salemkanyakumari Highway, Kumaracoil

🚀 1.5 km away
View
The Banana Leaf Pure Veg Restaurant

The Banana Leaf Pure Veg Restaurant

⭐ 3.2 (66 reviews)

📍 Thuckalay, Thuckalay

🚀 4.2 km away
View
Juice And Waffles

Juice And Waffles

⭐ 4.5 (6 reviews)

📍 56/8, Thiruvithankodu, Main Monday Market Road, Thiruvithancode

🚀 5.7 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில், கல்குளம் பகுதியில் அமைந்துள்ள Arulmigu Kumaraswamy Temple, Velimalai, குமாரகோயில் - 629175 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு குமாரசுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 18th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Nagercoil (16 km), Nanguneri (49 km), Ambasamudram (54 km), Tirunelveli (68 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

விமானம் வகை : ஏக தள விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 18th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சேரன்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பரிகாரம்
பலவகையான காவடி எடுத்தல், துலாபாரம், பிடிப்பணம் மாறுதல், குழந்தைகளுக்கு மொட்டை போடுதல், சோறு ஊட்டுதல், காது குத்துதல், மாவிளக்கு ஏற்றுதல், உப்பு மிளகு காணிக்கை செலுத்துதல், அரிசி, பயிறு வகைகள், காய்கறி, பழங்கள் காணிக்கை, கஞ்சி புரையில் உருண்டு கொடுத்தல் , வெளிப்பிரகார அங்க பிரதட்சணம் செய்தல். இக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெறும் கஞ்சி தர்மம் முக்கியமானது. தீராத நோயை போக்க கஞ்சியை பிரசாதமாக உண்பது முக்கியம். கஞ்சி தர்மத்திற்கு கஞ்சி புரை உள்ளது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் வள்ளி குகை போன்ற இடங்களிலும் கஞ்சி தர்மம் நடக்கிறது.இதற்குரிய கஞ்சி தொட்டிகளை இப்போதும் காணலாம்.
இதர வகை
வேளிமலை இயற்கை எழில் சூழ்ந்த மலை, கோயிலின் எதிரே பெரிய குளம் வேளிமலையில் பல குகைகள் உள்ளன. இங்கு சித்தர்களும், ஞானிகளும், வாழ்ந்திருக்கின்றனர். இங்கே கோனார் சமாதியில் இருப்பவர் ஒரு சித்தர். இங்கே அடங்கிய இன்னொரு சித்தர் சுடலையாண்டி சுவாமி. திருவனந்தபுரத்தில் ஆஸ்ரமம் அமைந்திருந்த அபயோந்த சுவாமிகள் குமாரகோயிலில் அருள் பெற்றார். இக்கோயிலைப் பற்றி சில சிற்றிலக்கியங்கள் வந்துள்ளன. த. வேலப்பன் எழுதிய வேலாயுதப்பெருமாள் பிள்ளைத்தமிழ் 1977ல் வந்தது . கவிராஜ பண்டித ராமசுப்ரமணிய நாவலரின் குமாரக்கோயில் கலம்பகம் 1966 இல் வந்தது.