Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி, Thiruppanjeeli

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி, Thiruppanjeeli - 621005 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 01:00 PM
04:00 PM to 08:00 PM
நடைதிறப்பு நேரம் காலை 6.00 மணிமுதல் மதியம் 1,00 மணிவரை மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணி வரை நடைசாற்றும் நேரம் மதியம் 1.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை கடைசியாக நடைசாற்றும் நேரம் இரவு 8.00 மணி

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை : 08:00 AM to 08:30 AM IST
2. உச்சிக்கால பூஜை : 12:00 PM to 12:15 PM IST
3. சாயரட்சை பூஜை : 05:30 PM to 06:00 PM IST
4. அர்த்தஜாம பூஜை : 07:45 PM to 08:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): ஞீலிவனேஸ்வரர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): விசாலாட்சி


ஸ்தல விருட்சம் (Sacred Tree): கல்வாழை

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): திருச்சிராப்பள்ளி

தாலுகா (Taluk): மண்ணச்சநல்லூர்

தொலைபேசி (Phone): 0431-2903565

முகவரி (Address):

சன்னதி தெ௫, திருப்பைஞ்ஞீலி, Thiruppanjeeli, 621005

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Durga Hotel

Durga Hotel

⭐ 3.5 (2 reviews)

📍 Thiruvellarai, Thuraiyur Main Road, Tiruvellerai

🚀 4.3 km away
View
Sri Ranga Restaurant

Sri Ranga Restaurant

⭐ 3.9 (458 reviews)

📍 6/32 NPI Towers, Npi Towers Edumalai Road, Manachanallur

🚀 7.0 km away
View
Thirumeiyar

Thirumeiyar

⭐ 4.7 (25 reviews)

📍

🚀 7.0 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மண்ணச்சநல்லூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி, Thiruppanjeeli - 621005 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 6th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருச்சிராப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Tiruchirappalli (17 km), Perambalur (45 km), Namakkal (56 km), Karur (58 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
புலவ அருளாளர் : அப்பர் (திருநாவுக்கரசு)
ஸ்தல விருட்சம் : கல்வாழை
விமானம் வகை : ஏக தள விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 6th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன், பல்லவர், பாண்டியன்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பரிகாரம்
இத்திருக்கோயில் திருமண பரிகாரத் திருத்தலமாக பிரசித்திப் பெற்று விளங்குகிறது. திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கல்வாழை பரிகார பூஜை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.
வரலாற்று சிறப்பு
திருக்கடையூரில் பக்தர் மார்க்கண்டேயருக்காக எமதர்மனை சம்ஹாரம் செய்ததால் பூமியில் உயிர்களுக்கு மரணம் இல்லாமல் போய்விட்டது. பூமிதேவி பாரம் தாங்காததால் தேவர்களுடன் சென்று சிவனிடம் முறையிட திருப்பைஞ்ஞீலி ஆகிய இத்திருத்தலத்தில், எமனுக்கு உயிர் கொடுத்து அதிகாரம் வழங்கும் காட்சி. (குழந்தை உருவில் எமதர்மராஜா). நடைதிறந்திருக்கு நேரம்: காலை 9.00 முதல் மதியம் 12.30 வரை மாலை 04.00 முதல் 5.30 வரை
வரலாற்று சிறப்பு
நந்தி தேவருக்கு முன்பு, அகல் விளக்கு ஒன்பது குழிகள் அமைந்து உள்ளன. ஒன்பது குழிகள் நவக்கிரகங்களாக விளங்குவதை வேறு எந்தத் திருக்கோயிலிலும் காண்பதற்கில்லை.நவக்கிரகத் தோஷப் பரிகாரத்துக்கு இத்தலம் தனிச் சிறப்புடையதாகும். அங்கே படிகளாக அமைந்திருக்கின்றார்கள். இங்கே விளக்குகளாக விளங்குகின்றார்கள். எனவே நவக்கிரக உருவ வழிபாடு இத்தலத்தில் கிடையாது.
தல விருட்சம்
இத்திருக்கோயிலின் தலவிருட்சம் கல்வாழை மரமாகும்.
இதர வகை
இத்திருத்தலத்தில் ஆயுள் ஹோமம், ஷஷ்டியப்த பூர்த்தி (60 ஆம் கல்யாணம்), பீமரதசாந்தி (70 ஆம் கல்யாணம்), சதாபிஷேகம் (80 ஆம் கல்யாணம்) செய்வது மிக சிறப்பாகும்.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

தேவர்குளம் : இத்திருக்கோயிலின் வெளியே வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : நன்கு பராமரிக்கப்படுகிறது
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களின் காலணிகளை பாதுகாக்க இராஜகோபுரம் அருகில் இலவச மிதியடி காப்பகம் உள்ளது.
கழிவறை வசதி : தினமும் தூய்மை செய்து நன்கு பராமரிக்கபபடுகிறது
வாகன நிறுத்தம் : தினமும் நன்கு சுத்தம் செய்து பராமரிக்கப்படுகிறது.
தங்குமிட வசதி : தினமும் நன்கு தூய்மை செய்து பராமரிக்கப்படுகிறது
சக்கர நாற்காலி : வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பயன்படுத்தவும்
மரத் தேர் : ஆண்டுதோறும் சித்திரை ஆடி மாதங்களில் தேர்திருவிழா நடைபெறுகிறது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : நன்கு பராமரிக்கப்படுகிறது
குளியல் அறை வசதி : தினமும் மூன்று வேலை சுத்தம் செய்தல்

🙏 சேவைகள் (Services)

Temple Services : 1.வாழைப்பரிகாரம் 2.ஆயுள் ஹோமம் 3.60 வது கல்யாணம் 4.ம்ருத்யுஞ்ஜய ஜபம்
நன்கொடை : பொது நன்கொடை
அன்னதானம் : இத்திட்டத்தின் கீழ் தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் (பிற்பகல் 12.00 மணிக்கு) வழங்கப்படுகிறது. அன்னதான திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.3500/- அன்னதான நன்கொடையாக செலுத்தலாம். அன்னதான திட்டத்திற்கு 80 ஜி வரி விலக்கு உள்ளது.